தரிசனங்கள் என்றால் என்ன WHAT VISIONS ARE 56-0421 சனிக்கிழமை மாலை, ஏப்ரல் 21, 1956 Spindale House Recreation Center, ஸ்பின்டேல், வட கரோலினா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 56-0421 - தரிசனங்கள் என்றால் என்ன மிக்க நன்றி, சகோதரரே. மாலை வணக்கம், நண்பர்களே. கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே இன்று இரவு உங்களை மீண்டும் சந்திப்பதிலும், உங்களுக்கு ஊழியம் செய்வ திலும், உங்களுடன் இணைந்து ஜெபிப்பதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்று இரவு இங்கே ஏராளமான கைக்குட்டைகள் இருப்பதை நான் காண்கிறேன், சற்று நேரத்தில் நாம் அவைகளுக்காக ஜெபிக்கப்போகிறோம். இது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிப் பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது. ஆப்பிரிக்காவில் இருந்தபோது, அவர்கள் சுமார் பதினாறு சாக்கு மூட்டைகள் நிறைய கைக்குட்டைகளும் கடிதங்களும் வைத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்பொழுது செய்தித்தாள் ஒன்று, "சகோதரன் பிரான்ஹாம் சற்று மூடநம்பிக்கை கொண்டவர்," என்றும், "அவர் கைக்குட்டைகள் மீது ஜெபித்துக் கொண்டிருந்தார்," என்றும் எழுதியது. வேதாக மத்தை அறியாதபடிக்கு ஜனங்கள் அதிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றிருக்கிறார்கள் என்பது அதிலிருந்து தெரிகிறது. அது வேத வசனம் மற்றும் அது மக்களால்... கர்த்தரால்... காரியங்களைச் செய்யும்படி கட்டளையிடப் பட்டிருக்கிறது. 2 இப்போது, இன்றிரவு... நாளை பிற்பகல் நிறைவு ஆராதனை நடைபெறும், அது ஏறக்குறைய இரண்டு முப்பது அல்லது மூன்று மணியளவில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். [சகோதரர், "சுமார் மூன்று மணிக்கு," என்கிறார்.] மூன்று மணிக்கு. அப்படியானால் அவர்கள் சுமார் ஒன்றரை அல்லது இரண்டு மணிக்கு ஜெப அட்டைகளை (prayer cards) வழங்குவார்கள். எனவே நீங்கள் உங்கள் சபையை விட்டுப் புறப்பட்ட உடனேயே, அது எங்கிருந்தாலும்... வெளியூரிலிருந்து இங்கு வந்திருக்கும் பார்வையாளர்களே, இந்த ஊரைச் சுற்றி மிகச்சிறந்த சபைகள் சில இருக்கின்றன. இந்தச் சகோதரர் இங்கே, மிக அருமையான ஒரு சபையை வைத்துள்ளார், மேலும் ஒத்துழைப்பு நல்கும் பிற போதகர்கள், நான் இதுவரை சந்திக்காதவர்கள், இங்கே பின்னால் இருக்கிறார்கள். அங்கே சில மிகச்சிறந்த சபைகள் இருக்கின்றன. காலையில் அந்த சபைகளில் ஏதேனும் ஒன்றிலும், மற்றும் உங்கள் விருப்பத்திற்குரிய சபையிலும் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் ஒரு சபையில் உறுப்பினராக இருந்தால், நாளை உங்கள் கடமையின் ஸ்தானத்தில் நீங்கள் நிற்க வேண்டும். 3 மேலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்தக் கூட்டம் முடிவடைவதற்கு ஏற்பாடு செய்ததற்காகச் சகோதரன் க்ளென் அவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். ஏனெனில் இது மனிதர்களிடையேயான உண்மையான ஐக்கியத் தையும் சகோதரத்துவத்தையும் காட்டுகிறது; ஒவ்வொரு நபரும் அவரவர் சபையில், உங்களுக்கான இடத்தில், உங்கள் கடமையின் ஸ்தானத்தில் நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; அங்கே இருப்பது உங்கள் கடமையாகும். ஞாயிறு பிற்பகலில் என்னுடைய சேவையை வைத்துக்கொண்டு, ஞாயிறு பிற்பகலில் கூட்டத்தை முடித்துக்கொள்வதை நான் எப்பொழுதும் ஒரு வழக்கமாகக்கொள்ள முயற்சித்திருக்கிறேன்; நமக்குச் சுவிசேஷ கூடாரம் (Gospel tent) கிடைத்த பிறகும் நாம் அதையே செய்வோம்: ஞாயிறு பிற்பகல் சேவைக்குப் பிறகு, ஞாயிறு பிற்பகலிலேயே மூடிவிடுவோம், காலை ஆராதனை வைக்கமாட்டோம், அப்போதுதான் ஜனங்கள் அவரவர் சபைக்குச் செல்ல முடியும். 4 ஒவ்வொரு நபரும் ஒரு சபைக்குச் செல்லவும், ஒரு கிறிஸ்தவராகச் சபையில் அங்கம் வகிக்கவும் கடமைப்பட்டிருப்பதாக நாங்கள் உணருகிறோம். இப்போது, வேதா... அநேகர், "ஓ, நான் வீட்டிலேயே இருந்து என் வேதாகமத்தை வாசிக்கிறேன். அதுவே எனக்குப் போதும்," என்று சொல்கிறார்கள். இல்லை, நாம் சபை கூடிவருதலை விட்டுவிடக்கூடாது என்று வேதாகமம் சொல்கிறது. நாம் அதைச் செய்தாக வேண்டும்; நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், எல்லா சபைகளும் அப்படியே. இன்று காலையில் ஒரு சிறிய பாப்டிஸ்ட் பிரசங்கியார் பேசுவதை நான் கேட்டேன், அவர் பெயர் எனக்கு மறந்துவிட்டது, இங்கிருக்கும் கை (Guy) என்று தொடங்கும் ஏதோ ஒரு பெயர். நான் வானொலியில் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தப் பிரசங்கியார் இங்கே எங்கேயாவது இருந்தால், நான் நிச்சயமாக அவரைப் பாராட்டுகிறேன். சகோதரரே, நீங்கள் அந்தச் செய்தியைத் தொடர்ந்து அளியுங்கள்; அது மிகவும் நன்றாக இருக்கிறது. கை ஸ்மித் அல்லது... ஜான்சன்; அவர்தான் அது. சகோதரன் ஜான்சன், நான் உங்கள் கையை உயர்த்தச் சொல்ல மாட்டேன்; ஆனால் நீங்கள் இங்கே இருந்தால், நான் நிச்சயமாக உங்களைப் பாராட்டுகிறேன். அது ஒரு உண்மையான செய்தி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே உள்ள நம்முடைய சகோதரரும், அவருடைய செய்தியை நீங்கள் இன்று கேட்டீர்கள். மற்றும் அவர்கள் எல்லாரும். பாருங்கள், நாம் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மகத்தான நோக்கத்திற்காக ஒன்றாக இணைந்து செயல் படுகிறோம். ஓ, தடைகளை மட்டும் நம்மால் உடைத்தெறிய முடிந்தால் எப்படி இருக்கும். 5 நேற்று இரவு நான் மருத்துவ அறிவியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்: கைரோபிராக்டிக் (chiropractic), ஆஸ்டியோபதி (osteopathic), மற்றும் இன்னும் பல, அறுவை சிகிச்சை, மற்றும் மருத்துவ அறிவியல், மற்றும் அந்த காரியங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பேசினேன். அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போராடாமல், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முயற்சித்தால், அது எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும். ஒரு மருத்துவர், ஒரு கைரோபிராக்டராக இருப்பவர் தனக்கு உதவ முடியும் என்று கண்டால், அவர்கள் நண்பர்களாக இணைந்து செயல்படலாம்; எலும்பை அமைப்பதிலோ அல்லது எதுவாக இருந்தாலும் அது தனக்கு மிஞ்சிய காரியம் என்பதை ஒரு கைரோபிராக்டர் கண்டு கொள்ளலாம்... பின்னர் அந்த ஆஸ்டியோபதி மருத்துவர், தசை சம்பந்தமான நிலைகளைத் தன்னால் குணப்படுத்த முடியாது என்றும், நோயாளிக்கு அறுவை சிகிச்சை தேவை என்றும் கண்டறிந்து, அவரை அறுவை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினால், அது எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் இருக்கவேண்டிய விதம் அதுவே. இப்போது, அது மருத்துவ சங்கத்திற்கான காரியம். இப்போது, போதகர்கள், மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட் மற்றும் பிரஸ்பிடீரியன், பெந்தெகோஸ்தே ஆகிய நாம் அனைவரும், நாம் யாராக இருந்தாலும், அதே விதமாக இருக்க வேண்டும். அதுதான் சரி. 6 நான் ஜெஃபர்சன்வில்லியில் உள்ள பாப்டிஸ்ட் கூடாரத்திலும் (Baptist Tabernacle), மில்டவுன் பாப்டிஸ்ட் சபையிலும் மற்றும் பிற இடங்களிலும் போதகராக இருந்தபோது, எனக்கு நினைவிருக்கிறது, எனக்குச் சொந்தமாக ஒரு கூடாரம் இருந்தது, அது ஜெஃபர்சன் வில்லியில் இன்றும் நிற்கிறது... உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகச் சொல்கிறேன், இப் போது அங்கே ஒரு மெத்தடிஸ்ட் பிரசங்கியார், என் இடத்திலிருந்து பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் நான் அங்கே போதகராக இருந்தபோது, நான் பிறந்த கென்டக்கியின் அதே பகுதியில் பிறந்த ஒரு நல்ல நண்பர் எனக்கு இருந்தார், அவருக்கு நியூ ஆல்பானியில் மெயின் ஸ்ட்ரீட் மெத்தடிஸ்ட் சபை இருந்தது, அது எங்களுக்குக் கீழே சுமார் ஐந்து மைல் தொலைவில் இருந்தது, அது மிகவும் உயிரோட்டமுள்ள ஒரு சிறிய சபை. ஏன், எங்களுக்குள் மிகச் சிறந்த ஐக்கியம் இருந்தது. அவர் எழுப்புதல் கூட்டம் நடத்தும்போது நான் என் சபையை மூடிவிட்டு அங்கே செல்வேன். அவரும் எனக்காக அதையே செய்வார். 7 இப்போது, நாங்கள் ஒருவரையொருவர் கொஞ்சம் கேலி செய்துகொள்வோம், அது பிரசங்கிகளுக்குள் சகஜம், உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக இப்போது, பொதுமக்களாகிய உங்களுக்கு இது தெரியாது. புரிகிறதா? ஆனால் நாங்கள் ஒருவரையொருவர் கேலி செய்து கொள்வோம். உதாரணமாக அவர் என்னிடம் சில நேரங்களில் சொல்வார் - நான் வருவேன், யாராவது உள்ளே வருவார்கள், இரட்சிக்கப் படுவார்கள், நான் சொல்வேன், "நல்லது சகோதரரே, நீங்கள் முன்பு எந்தச் சபையில் இருந்தீர்கள்?" "நல்லது, என் ஜனங்கள் மெத்தடிஸ்ட், சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் எனக்குத் தெளிப்பு ஞானஸ்நானம் (sprinkle) கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் (புரிகிறதா?); நான் தெளிப்பு ஸ்நானத்தை விசுவாசிக்கிறேன்." "சரி," நான் சொல்வேன், "சகோதரரே, உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், நீங்கள் ஒரு சகோதரராக இருந்தாலும், இங்கே ஒரு நல்ல உறுப்பினராக இருக்க முடியாது; ஆனால் எனக்கு நியூ ஆல்பானியில் ஜான்சன் என்ற பெயருள்ள ஒரு நல்ல நண்பர் இருக்கிறார்; அவர் ஒரு மெத்தடிஸ்ட் மற்றும் அவர் தெளிப்பு ஸ்நானம் கொடுக்கிறார். எனவே நான் என்ன சொல்கிறேன் என்றால்: நான் உங்களை அங்கே அழைத்துச் சென்று சகோதரன் ஜான்சனிடம் பேசுகிறேன், ஏனென்றால் அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் முழுமையான ஒரு கிறிஸ்தவர், ஒரு சிறந்த உயிரோட்டமுள்ள சபை, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட, மிகவும் நல்ல ஜனங்கள்." நான் சொல்வேன், "நான் உங்களை அங்கே அழைத்துச் சென்று அவரிடம் பேசுகிறேன். ஆனால், அங்கே கொஞ்சம் வறட்சியாக இருக்கும்; அங்கே தண்ணீர் அதிகம் இருக்காது, ஆனால் அவர் உங்களைச் சரியாக நடத்துவார்." 8 சரி, அவருக்கு ஒரு உறுப்பினர் கிடைப்பார், அவர் சொல்வார், "இப்போது, சகோதரன் ஜான்சன், நான் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவதை விசுவாசிக்கிறேன். நான் ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன்." அவர் சொல்வார், "சரி, நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்: நான் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை, ஆனால் பில்லி, மேலே ஜெஃபர்சன்வில்லியில், கூடாரத்தில் (Taber nacle), அவர் ஒரு பாப்டிஸ்ட், மற்றும் நான்... அவர் ஒரு நல்ல மனிதர்; நீங்கள் அவருக்கு ஒரு நல்ல உறுப்பினராக இருப்பீர்கள். ஆனால் நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்: அவர் ஒரு பாப்டிஸ்ட்; ஒவ்வொரு குமிழியும் மேலே வருவது நிற்கும் வரை அவர் உங்களைத் தண்ணீருக்கு அடியில் வைத்திருப்பார்." எனவே, அவர் செய்வார்... இப்படியாக, நாங்கள் ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொள்வோம். ஆனால் நாங்கள் ஒருவருக் கொருவர் ஐக்கியம் கொண்டிருந்தோம். சகோதரன் ஜான்சனிடம் ஒரு குறையும் இல்லை, அற்புதமான மனிதர், இறையியலிலும் பேசுவதிலும் நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க மரித்தார் என்ற அதே கொள்கையில் நாங்கள் இருக்கிறோம். அதுதான் விஷயம். நாம் அனைவரும் அதை நம்புகிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். மற்றபடி நம்முடைய சிறிய அற்பமான காரியங்களை, நாம் மறந்துவிட்டு கர்த்தருக்கு ஊழியம் செய்வதில் தொடர்ந்து முன்னேற வேண்டும். நான் ஒருவருடன் உடன்பட முடியவில்லை என்றால், அவர் என் சகோதரர் இல்லை என்று அர்த்தமல்ல. அது மிகவும் நல்லது, மற்ற மனிதரும் என்னைப் பற்றி அப்படியே நினைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் அது... 9 நாங்கள் ஒன்பது ஆண் பிள்ளைகள். எனக்கு அடுத்த சகோதரன், ஒரு பெரிய ஆறடி உயரமானவன், சுமார் நூற்றுத் தொண்ணூறு பவுண்டுகள் எடை கொண்டவன், பொன்னிற முடி, தட்டையான மூக்கு, சதுரமான தாடை. ஏன், அவன் என்னைப் போலவே இல்லை; எங்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. மேலும் அங்கே... ஏன், அவனுக்குக் கோல்ஃப் (golf) விளையாடப் பிடிக்கும், நானோ அது வேடிக்கையானது என்று நினைக்கிறேன். எனக்கு வேட்டையாடப் பிடிக்கும், அவனோ அது வேடிக்கையானது என்று நினைக்கிறான். எனக்குச் செர்ரி பழத் துண்டுகள் (cherry pie) பிடிக்கும், அவனுக்கு ஆப்பிள் பழத் துண்டுகள் பிடிக்கும். எங்கள் இருவருக்கும் வித்தியாசங்கள் உள்ளன; நாங்கள் ஒரே மாதிரி இல்லை; எங்கள் சுபாவம் ஒரே மாதிரி இல்லை; ஆனால் அவனுடைய தகப்பன் தான் என்னுடைய தகப்பன். பிரான்ஹாம் குடும்பத்தால் அவனுடைய தனித்துவங்களுடன் அவனையும், என்னுடைய தனித்துவங்களுடன் என்னையும் ஏற்றுக் கொள்ள முடியுமென்றால், நாங்கள் சகோதரர்கள். உங்கள் விசித்திரமான உபதேசத்தின் அடிப்படையில் தேவன் உங்களையும், என் விசித்திரமான உபதேசத்தின் அடிப்படையில் என்னையும் ஏற்றுக்கொண்டு, நம் இருவருக்கும் பரிசுத்த ஆவியைக் கொடுக்க முடியுமென்றால், நாம் சகோதரர்கள். அது சரி, எது எப்படி இருந்தாலும், நாம் சகோதரர்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ் துவின் இரத்தம் சகல அநியாயங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கும்போது, நாம் ஒருவரோ டொருவர் ஐக்கியமாயிருக்கிறோம். எல்லா பாவமும் நீக்கப்படுகிறது. 10 இப்போது, இந்தக் கைக்குட்டைகள் விஷயத்தில், வேறெதையும் விடக் கைக் குட்டைகள் மூலமாகவே எனக்கு அதிக வெற்றி கிடைக்கிறது என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக அமெரிக்க மக்களிடத்தில். அமெரிக்க மக்களுக்கு, யாராவது அவர்களைத் தொட வேண்டும், அல்லது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அல்லது அவர்கள் மீது கைகளை வைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் தலைக்குள் இருக்கிறது. அவர்கள் அதை எங்கிருந்து பெற்றார்கள், அது வெறும் ஒரு யூதப் பாரம்பரியம். அதன் புறஜாதி வழியை நீங்கள் நம்பும்படி செய்ய நான் முயற்சிக்கிறேன். பாருங்கள், யூதர்கள் சொன்னார்கள், "இப்போது, நீர் வந்து என் சிறு மகள் மேல் உம்முடைய கைகளை வையும், அவள் பிழைப்பாள்." யவீரு, அவன் ஒரு யூதன். ஆனால் ரோமன் சொன்னான், "நீர் என் வீட்டிற்குள் வருவதற்கு - என் கூரையின் கீழ் வருவதற்கு நான் பாத்திரன் அல்ல." அவன் சொன்னான், "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப் பட்டவன், நான் ஒருவனைப் பார்த்து, 'போ,' என்றால், அவன் போகிறான். எனக்குக் கீழுள்ள அனைத்தும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்." வியாதிகளின் மேல் இயேசுவுக்கு இருந்த மேலான அதிகாரத்தை அவன் அங்கீகரித்தான். அவன் சொன்னான், "நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் வேலைக்காரன் பிழைப்பான்." இப்போது, அங்கே பாருங்கள், அதுதான் விஷயம். இப்போது, இயேசு யவீருவைப் பற்றி அதிகம் சொல்லவில்லை, அவன் கேட்டது அவனுக்குக் கிடைத்தது. அவர் சென்று மகளின் மீது தன் கையை வைத்தார். ஆனால் பின்தொடர்ந்து வந்த இந்த மக்களிடம் அவர் சொன்னார்; அவர் சொன்னார், "இப்போது, அதுதான் பெரிய விசுவாசம். இஸ்ரவேலிலும் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் காண வில்லை." பார்த்தீர்களா? 11 இப்போது, நமக்கு அந்தப் பெரிய விசுவாசம் வேண்டும். நாம் ஒரு உயர்வான தளத்தில் ஓட வேண்டும். அது இல்லை... நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு விரும்புகிறார். இப்போது, உங்களில் அநேகர், புத்தகத்தை வாசிப்பதில்... இன்றிரவு நடப்பது போலச் சில இரவுகள் மட்டும் கூட்டம் நடப்பது மிகவும் வருந்தத் தக்கது... இது மக்களுக்குப் போதுமானதாக இல்லை. என்னுடைய ஊழியம் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது. ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பல்வேறு இடங்களில், ஒன்று மற்றும் இரண்டு மற்றும் மூன்று இரவுகள், நூறு முதல் ஐந்து லட்சம் மக்கள் வரை கூடுவார்கள். அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் அறிமுகமா வதற்குள், விடைபெற வேண்டிய நேரம் வந்து விடும். அது மக்களுக்குச் செய்யும் நியாயம் அல்ல. அதனால்தான், இந்தப் பெரிய கூடாரத்தைப் (tent) போட்டு, ஒவ்வொரு இடத்திலும் நான்கு முதல் ஆறு வாரங்கள் தங்கியிருக்குமாறு ஒரு தரிசனத்தின் மூலம் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். அநேக நேரங்களில் மக்கள் வரிசையில் வருகிறார்கள்; அவர்கள் சுகமடைகிறார்கள்; அவர்கள் போய் விடுகி றார்கள். மக்கள் வந்து வேதாகமத்தை எடுப் பதையும், முற்றிலும் பார்வையற்றவர்கள், அங்கே நின்று, இருபது, முப்பது ஆண்டுகளாக முதல்முறையாக வாசிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இரண்டு வாரங் களுக்குப் பிறகு, அவர்கள் மேடைக்கு வந்த முதல் முறை இருந்ததைப் போலவே பார்வை யற்றவர்களாக மாறிவிடுகிறார்கள், புரிந்து கொள்ளாமல் (பாருங்கள்), அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் அலைந்து திரிகிறது என்பதை உணராமல் இருக்கிறார்கள்; அது தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளுடன் திரும்பி வருகிறது. அதைத்தான் வேதாகமம் சொல்கிறது. உள்ளே நுழைகிறது, முன்பு இருந்ததை விட ஏழு மடங்கு மோசமாகிறது. 12 அது என்னவென்று பாருங்கள், நீங்கள் எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். நோய்கள் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு மருத்துவர் தவிர, இங்கே உள்ள மக்களில் ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே புற்றுநோய் எதனால் ஆனது, கட்டி, கண்புரை, காசநோய் என்றால் என்ன, ஒரு கிருமி என்றால் என்ன, அது எப்படி வருகிறது, அதை இங்கே கொண்டு வந்தது எது, அதன் உயிர் எங்கிருந்து வந்தது, அந்த விஷயங்கள் அனைத்தும் உண்மையில் தெரிந்திருக்கும் என்று நான் துணிந்து சொல்வேன். அதை அறியாததினால்... விசித்திரமான விஷயம் என்னவென்றால், பல நேரங்களில் மருத்துவர்களுக்கே தெரிவ தில்லை. அந்த வளர்ச்சி அங்கே இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் அதை உண்டாக்கியது எது? அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக அது அங்கே இருக்க வேண்டும். அது ஒரு உயிர் (life); அது உங்கள் உயிர் அல்ல; அது உங்களுக்குள் வந்திருக்கும் வேறொரு உயிர். அது மற்றொரு செல், செல்களின் வளர்ச்சி, செல்களின் பெருக்கம், அதுதான் நீங்கள். அதுதான் ஒரு கிருமி. ஒரு புற்றுநோய் கிருமி, கட்டி, கண்புரை, அல்லது வேறெந்த கிருமியாக இருந்தாலும் சரி. அது ஒரே நோக்கத்திற்காக உங்களுக்குள் இருக்கிறது; அது உங்கள் சரீர மாம்சத்தில் இருக்கும் ஒரு மரணம், ஒரு புற்றுநோய், உங்கள் இரத்தத்தை உறிஞ்சி, உங்களைக் கொல்கிறது. அது ஒரு வளர்ச்சி; அதற்கு எந்த வடிவமும் இல்லை. உங்கள் தந்தையின் சுபாவத்தின்படியே நீங்கள் வடிவம் பெறுகிறீர்கள். அல்லது ஏதோ - ஏதோ ஒன்று அதன் இனத்தின்படியே, ஒவ்வொரு விதையும் அதன் இனத்தின்படியே இருக்கும். நீங்கள் ஒரு மனிதப் பிறவியின் விதை; அது ஒரு மனிதப் பிறவியை உருவாக்கும். ஒரு நாயின் விதை ஒரு நாயை உருவாக்கும், ஒரு பறவையினுடையது ஒரு பறவையை உருவாக்கும். 13 ஆனால் ஒரு புற்றுநோய், கட்டி, கண்புரை, அந்த நோய்கள் எதுவாயினும், அவைகளுக்கு எந்த... அவைகள் ஆவிக்குரிய காரியங்கள். அவை எந்த வகையான தீய வளர்ச்சியாகவோ (malignancy) அல்லது எதுவாகவோ உருவாகி, பரவுகின்றன. அவற்றில் சில... சரி, பல வகையான புற்றுநோய்கள் உள்ளன, அவற்றில் சில சர்கோமாக்கள் (sarcomas) என்று அழைக்கப்படுகின்றன, மற்றும் திறந்த புற்றுநோய், மற்றும் சில சிவப்பு புற்றுநோய், கருப்பு புற்றுநோய் என்று அழைக்கப்படுகின்றன, மற்றும், ஓ, பல வகைகள். கட்டிகள், அவற்றில் சில சிறியவை; சில பெரியவை. அவற்றில் சில கால்களுடன் வளரும், மேலும் கேன்சர் (cancer) என்ற வார்த்தை "கிராப்" (crab - நண்டு) என்ற வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது "அதுபோலவே கால்கள் வெளியே ஓடுவது" என்று அர்த்தம். ஆனால் அந்த விஷயங்கள் அனைத்திற்கும் பின்னால் ஒரு உயிர் இருக்க வேண்டும்; ஏனென்றால் அவை உயிருடன் இருக்கின்றன, அவை தின்கின்றன. அது ஒரு உயிர் என்றால், அது எங்கிருந்து வந்தது? இப்போது, உங்களுக்குத் தெரியும், நான் ஒரு கலவையான கூட்டத்தில் இருக்கிறேன், நீங்கள் ஒரு அருமையான பார்வையாளர்கள். மேலும் அது... நான்... நீங்கள் ஒருபோதும்... நீங்கள் உங்கள் மருத்துவருக்குச் செவி சாய்க்கிறீர்கள், நான் உங்கள் சகோதரன். 14 கவனியுங்கள், குழந்தையையும் தாயையும் போல. அது எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியும், தேவனால் நியமிக்கப்பட்ட பரிசுத்த விவாகம். ஆனால் இந்தப் புற்றுநோய் எங்கிருந்து வந்தது? அதை யார் கொண்டு வந்தது? அது எங்கே - எப்படி வந்தது? உங்கள் உயிரை எடுக்க அது இங்கே இருக்கிறது. அது எங்கிருந்து வந்தது? அதன் சுபாவம் என்ன? அது ஒரு கொலைகாரன். இப்போது, மருத்துவர் அந்தப் பொருளை, அந்த வளர்ச்சியை கையாளுகிறார். தெய்வீக சுகம் அந்த உயிரை (life) கையாளுகிறது. அந்த உயிர் வெளியேறும்போது... இங்கே எத்தனை மான் வேட்டைக்காரர்கள் இருக்கிறீர்கள், உங்கள் கையை உயர்த்துங்கள், பார்ப்போம்? சரி. நன்றி, அங்கே பின்னால் எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறார். சரி, இங்கே ஒரு கசாப்பு கடைக்காரர், பிணத்தை அடக்கம் செய்பவர் (undertaker), இறந்த பிறகு எதையாவது கையாளும் எவரேனும் இருக்கிறார்களா? இன்றிரவு நீங்கள் ஒரு மானைக் கொன்று, சகோதரரே, வயலில் அதைச் சுட்டு, அதைத் தராசில் வைத்து அது எவ்வளவு எடை இருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் முகாமுக்குத் திரும்பிச் செல்லும்போது பையன்களிடம் என்ன சொல்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். காலையில் அது பவுண்டுகள் குறைந்த எடையுடன் இருக்கும்; அது சுருங்குகிறது. ஒரு சிறிய விலங்கு இங்கே கிடக்கட்டும்; யாராவது இறக்கட்டும். பிணத்தை அடக்கம் செய்பவர் பொய் பற்களை, அல்லது செயற்கை கண்ணை வெளியே எடுப்பார், ஏனென்றால் அது சுருங்குகிறது, அந்த உடல். சாலையில் அடிபட்ட ஒரு சிறிய நாய், அது சுருங்கிவிடும். ஆனால் அதை எழுபத்திரண்டு மணி நேரம், மூன்று பகல் மற்றும் இரவுகள் அந்த வெயிலில் கிடக்க விடுங்கள்; பின்னர் அதைத் தராசில் வைத்து, அது எவ்வளவு எடை இருக்கிறது என்று பாருங்கள். அது முன்னெப்போதையும் விட அதிக எடையுடன் இருக்கும். அது வீங்குகிறது, சிதைகிறது, உடைகிறது. 15 இப்போது, புற்றுநோய், அதிலிருந்து உயிர் வெளியேறும்போது, நோயாளிக்கு நிம்மதி கிடைக்கிறது. கண்புரை, அது எதுவாக இருந்தாலும், அது சுருங்குகிறது, ஓ, சில - சில நாட்களுக்கு, ஒருவேளை மூன்று பகல் மற்றும் இரவுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும். அதனால்தான் இயேசுவின் சரீரம் மூன்று பகல் மற்றும் இரவுகள் கல்லறையில் கிடக்க முடியவில்லை, ஏனென்றால் தாவீது சொன்னார், "என் பரிசுத்தர் அழிவைக் காண நான் விடமாட்டேன் - ஒட்டேன்." ஒரு செல் கூட அழியாது; அழிவு உண்டாகிறது. அதனால்தான் சிலர், "ஓ, அவர் கல்லறையில் கிடக்கவே இல்லை. அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் இறந்து ஞாயிறு காலையில் உயிர்த்தெழுந்தார்," என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த மூன்று பகல் மற்றும் இரவுகளுக்குள் தான் வெளியே வரப்போகிறோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது, ஏனென்றால் ஒரு தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட வேதாக மத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம், ஒரு வார்த்தை, "என் பரிசுத்தர் அழிவைக் காண ஒட்டேன்," என்று சொன்னது. அந்த எழுபத்திரண்டு மணி நேரத்திற்குள் அழிவு ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்; அதற்கு இடைப்பட்ட நேரத்தில், தேவன் அவரை வெளியே கொண்டு வருவார். யோசித்துப் பாருங்கள், தெய்வீக சுகத்திற்காகப் புதிய ஏற்பாட்டில் உங்களுக்குத் தொள்ளாயிரத்து சொச்சம் வாக்குறுதிகள் இருக்கும்போது. அதை யோசித்துப் பாருங்கள்; உங்களால்... அதை நம்புவது கடினமாக இருக்கிறது, இல்லையா? 16 ஆனால் எப்படியாயினும், இந்த வளர்ச்சி இறந்துபோகும்போது, அது சுருங்குகிறது. நோயாளி மகிழ்ச்சியடைகிறார், ஓ, எவ்வளவு மகிழ்ச்சி. சில நாட்களில் அவர்கள் முதலிலி ருந்ததை விட மோசமாக இருப்பதை உணர் கிறார்கள். "ஓ, சரி," அவர்கள் சொல்கிறார்கள், "நான் என் சுகத்தை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்." விசுவாசம் அதை எடுத்துப் போட்டது எவ்வளவு உறுதியோ, அதே அளவு அவிசுவாசம் அதை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. பின்னர் அது உண்மையில் செயல்படத் தொடங்குகிறது. ஆனால் சுமார் எழுபத்திரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் நோய்வாய்ப்படும்போது, நீங்கள் அப்படித் தான் ஆக வேண்டும்: உங்கள் உடலில் ஒரு இறந்த சதைப்பிண்டம் இருக்கிறது. இரத்தத்தைச் சுத்திகரிப்பது எது? இதயம் உடலை - இரத்தத் தைச் சுத்திகரிக்கிறது, மேலும் அது... இதயம் அதை பம்ப் (pump) செய்கிறது, ஒரு தொற்றை ஏற்படுத்துகிறது, காய்ச்சலை ஏற்படுத்துகிறது, மற்றும் அனைத்து வகையான உணர்வுகள் மற்றும் நோய்களை ஏற்படுத்துகிறது. எழுபத்திரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, புற்றுநோய், கட்டி அல்லது எதற்காவதாய் நீங்கள் ஜெபிக்கப்பட்டிருந்து, நீங்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டு அதிக காய்ச்சலைப் பெறத் தொடங்கினால், நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள் என்பதற்கு உலகிலேயே சிறந்த அறிகுறிகளில் அது ஒன்றாகும். தொடர்ந்து முன்னேறுங்கள்... பாருங்கள், உங்கள் விசுவாசம் என்பது நீங்கள் உணர்வது அல்ல; உங்கள் விசுவாசம் என்பது நீங்கள் நம்புவது. நீங்கள் உண்மை யிலேயே அதை நம்பினால், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றிக் கவலைப் பட மாட்டீர்கள், நீங்கள் சுகமடையவில்லை என்று ஒருபோதும், ஒருபோதும் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் எப்போதும் அதை நம்புவீர்கள். அதுதான் அதைச் செய்கிறது. புரிகிறதா? 17 நான் சுகமளிக்கும் கூட்டங்களை நடத்தும்போது மேடையில் நடப்பது அதுதான். நூற்றுக்கணக்கான மக்கள் அப்படி, அவர்கள் மேடைக்கு வருகிறார்கள், "ஓ, சகோதரன் பிரான்ஹாம், என்னிடம் முழு விசுவாசம் உள்ளது." அது மை (ink) ஆக இருந்தால், அது "i" என்ற எழுத்துக்குப் புள்ளி வைக்கக் கூடப் போதாது. பாருங்கள், உங்களுக்கு விசுவாசத் திற்குப் பதிலாக நம்பிக்கை (hope) இருக்கிறது. விசுவாசம் என்பது உறுதியானது (positive). இல்லை, அதை எதுவும் அசைக்க முடியாது; அது உறுதியானது. நீங்கள் எவ்வளவு நோய்வாய்ப்பட்டாலும், எல்லாம் எப்படி நடந்தாலும், எதுவும்... இப்போது, நீங்கள் பாசாங்கு (bluff) செய்ய முயன்றால், அது பாசாங்கை ஏற்காது. பிசாசு... அவன் ஒரு பாசாங்குக்காரன், மேலும் எப்படிப் பாசாங்கு செய்வது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் சரக்கு (goods) இருக்கும்போது, அதற்குக் கூச்சலிடத் தேவையில்லை, கால்களை உதறி அலறத் தேவையில்லை; அதற்கு விசுவாசம் தேவை. அவன் அதை அங்கீகரிப் பான். கவலைப்பட வேண்டாம், வார்த்தையை மட்டும் சொல்லுங்கள். அங்கே கீழே இருந்த சீஷர்களைப் பாருங்கள், இந்தக் குழந்தையின் விஷயத்தில் அவர்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள், அநேகமாக அதை உலுக் கவும் மற்ற எல்லாவற்றையும் செய்யவும் முயன் றிருக்கலாம். ஆனால் இயேசு, "இவனை விட்டு வெளியே போ," என்று சொன்னார். அது முடிந்தது. அந்தப் பிசாசு அது விசுவாசம் என்பதை அங்கீகரித்தது. புரிகிறதா? எண்ணிக்கை அல்ல, தரம் தான் முக்கியம். புரிகிறதா? சரீர முயற்சி அற்பப் பிரயோஜ னமுள்ளது. நீங்கள் தரை முழுவதும் ஓட வேண்டியதில்லை. ஓடுவதாலோ, அலறுவ தாலோ, சத்தமிடுவதாலோ சுகம் பெறுவதை நான் குறை சொல்லவில்லை. நீங்கள், "சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் சத்தமிடுவதை (shouting) நம்புகிறீர்களா?" என்று கேட்கலாம். நிச்சயமாக, ஐயா. அப்படி நினைக்க வேண்டாம். சத்தமிடுவதை நம்புகிற ஒரு பாப்டிஸ்ட் நான். மேலும் நான் நம்புகிறேன்... 18 இப்போது, நாம் ஒருபோதும் - எங்களைப் போன்ற பாப்டிஸ்டுகள் நீங்கள் இங்கே வடக்கே செய்யும் பாப்டிஸ்டுகள் போலச் செய்வதில்லை. தெற்கே உள்ள நாங்கள் பழைய பாணி பாப்டிஸ்டுகள், கென்டக்கியின் மலைகளில் உள்ள பழைய மிஷனரி பாப் டிஸ்டுகள், நாங்கள் பீடத்திற்கு வரும்போது, நாங்கள் கீழே சென்று ஒருவருக்கொருவர் கைகுலுக்கி எங்கள் பெயர்களைப் புத்தகத்தில் எழுதவில்லை. நாங்கள் ஒரு நிலை அடையும் வரை ஒருவரையொருவர் முதுகில் தட்டிக் கொள்வோம். நாங்கள் பெற்றுக்கொண்டோம். அது சரி. நாம் அதில் விறைப்பாகிவிட்டது மிகவும் வருந்தத்தக்கது, இல்லையா, சகோதர பாப்டிஸ்டே? அது சரி, சரி. அந்தப் பழைய சபைகள், அது பாப்டிஸ்ட், பிரஸ்பிடீரியன் என்று கவலைப்படவில்லை; அவர்கள் எழுப்புதல் கூட்டம் நடத்தும்போது நாங்கள் உள்ளே நுழைந்தோம், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தோம், சத்தமிட்டோம், கர்த்தரைத் துதித்தோம். ஆற்றங்கரையில் உங்கள் பணப்பை (pocketbook) தொலைந்து போனாலும், அதில் நூறு டாலர் இருந்தாலும், யாராவது அதைக் கண்டெடுத்தால் அதை உங்களிடம் கொண்டு வருவார்கள். அது நன்றாக இருந்தது. உண்மையாகவே, நான் எந்த நேரத்திலும் அதை ஏற்றுக்கொள்வேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 19 இன்றிரவு நான் உங்களிடம் பேச விரும்புகிறேன், ஏனென்றால் எனக்குத் தொண்டை மிகவும் மோசமாக இருக்கிறது, சோர்வாக இருக்கிறது; நான் மிகவும் சோர்ந்து போயிருக்கிறேன். நாளைப் பிற்பகலுக்குப் பிறகு நான் கிளம்ப வேண்டும், நேராக வீட்டிற்குச் சென்று, அங்கே பேசிவிட்டு, நேராகத் திரும்பி வந்து, புதன்கிழமை இரவு சார்லோட்டில், அங்கே... இடத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை, அது ஃபாக்ஸ் ஆடிட்டோரியம் அல்லது ஃபாக்ஸ் தியேட்டர் என்று நினைக்கிறேன். அங்கே இருக்கும் ஊழியரை நான் சந்தித்தது கூட இல்லை, அவர் யார் என்று; ஆனால் அவர் சகோதரன் பிக்பியின் மைத்துனர் என்று எனக்குத் தெரியும். அவருக்குச் சகோதரன் பிக்பியுடன் ஏதாவது தொடர்பு இருந்தால், அவர் ஒரு நல்ல மனிதர். சகோதரன் பிக்பி ஒரு சிறந்த மனிதர். இந்தச் சகோதரருக்கு அவரைத் தெரியும் மற்றும் அவரைப் பரிந்துரைக்கிறார், எனவே... உங்களை எனக்கு நினைவில்லை; நான் உங்களைச் சகோதரன் க்ளென் என்று அழைக்கப் போகிறேன். மறுநாள் நான் உங்களை அப்படித்தான் அழைத்தேன், எனவே நான் அவரை ஸ்பிர்கிள், ஸ்பார்சன் என்று அழைக்க விரும்புகிறேன், நான் அதைக் குழப்பிக் கொள்கிறேன். 20 ஆகவே இப்போது, உங்கள் கைக் குட்டைகளைக் கொண்டு வருவதில், இப்போது அது வேதாகமம். இப்போது, உங்களில் அநேகர், நான் உங்கள் கடிதங்களைப் படித்து வருகிறேன், "சகோதரன் பிரான்ஹாம், என் கைக்குட்டையை அபிஷேகம் செய்வீர்களா?" என்று கேட்டிருந்தீர்கள். இப்போது, அது சரிதான். கர்த்தர் செய்வதை நாங்கள் பாராட்டுகிறோம். அவர் ஆசீர்வதிக்கும் எதற்கும் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். ஆனால் வேதாகமத்தின்படி நீங்கள் என்னோடு சாட்சி யிடுவீர்களானால், பவுல் கைக்குட்டைகளை அபிஷேகம் செய்யவில்லை. அவர் தன் சரீரத்திலிருந்து, கைக்குட்டைகளையும் கச்சை களையும் எடுத்துக்கொண்டார். புரிகிறதா? இப்போது, சூனேம் ஊராள் எலிசாவிடம் வந்தபோது நீங்கள் அதைப் பெற்றீர்கள் என்று நான் நினைக்கிறேன். தேவன் தனது தீர்க்கதரிசிக்குள் இருப்பதை அவள் அறிந்திருந்தாள், எனவே தன் குழந்தை ஏன் இறந்தது என்பதைக் கண்டறிய அவள் சென்றாள். எலிசா தான் தொட்ட அனைத்தும் ஆசீர்வதிக்கப்பட்டவை என்பதை அறிந்தி ருந்தார், எனவே அவர் கேயாசியிடம், "இந்தத் தடியை எடுத்துக்கொண்டு போய்ப் பிள்ளையின் மேல் வை," என்று சொன்னார். ஆனால் அந்தப் பெண்ணின் விசுவாசம் அந்தத் தடியின் மீது இல்லை; அது தீர்க்கதரிசியின் மீது இருந்தது. எனவே அவள், "எனக்குத் தேவையானதை நான் கண்டுபிடிக்கும் வரை அல்லது அறியும் வரை நான் உம்மை விட்டுப் போகமாட்டேன்," என்று சொன்னாள். எனவே அவர் அவளுடன் சென்றார். நீங்கள் கவனியுங்கள், அது அவருடைய ஜெபம் அல்ல; அவர் இறந்த குழந்தையின் மீது தன் உடலை வைத்தார், அது உயிர்பெற்றது. புரிகிறதா? 21 இப்போது, இந்தக் கைக்குட்டைகள், நாங்கள் வாரத்திற்கு ஆயிரக்கணக்கில் எல்லா இடங்களுக்கும், உலகம் முழுவதும் அனுப்பு கிறோம். எந்த நேரத்திலும் உங்களுக்கு ஒன்று தேவைப் பட்டால், ஜெஃபர்சன்வில்லி, இந்தியானாவிற்கு எனக்கு எழுதுங்கள்; நாங்கள் அதை உங்களுக்கு அனுப்புவோம். இப்போது, அந்த... நான் சென்ற இடங்களில் உலகம் முழுவதும் எங்களுக்கு ஒரு ஜெபக் குழு உள்ளது. இன்று நாங்கள் ஒரு உலக உருண்டையைப் பார்த்துக்கொண்டிருந்தோம், உலகில் கர்த்தர் என்னைச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுமதிக்காத இடங்கள் மிகச் சிலவே உள்ளன. அதற்குள் நாங்கள் ஒரு ஜெபக் குழுவை உருவாக்குகிறோம், மக்கள் அதிகாலை ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணிக்கு எழுகிறார்கள், உலகம் முழுவதும், மூன்றாம், ஆறாம் மற்றும் ஒன்பதாம் மணி நேரத்தின்படி, காலை ஒன்பது மணி, மதியம் பன்னிரண்டு மணி, மற்றும் பிற்பகல் மூன்று மணி. எல்லோரும் ஒருவருக்கொருவர் ஒரே மனதுடன் ஜெபிக்கும்போது, ஏதாவது நடக்க வேண்டும்; அவர்களில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். புரிகிறதா? நீங்கள் இதில் இணைய வேண்டும், எங்களுடன் ஜெபிக்கவும் மக்களுக்கு ஊழியம் செய்ய எங்களுக்கு உதவவும் வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நாம் மேலே செல்லும்போது ஊழியத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 22 இப்போது, எனக்கு எந்த வானொலி நேரமும் இல்லை, விற்பனை செய்ய என்னிடம் எதுவும் இல்லை; எங்களிடம் புத்தகங்கள் உள்ளன, ஆனால் நான் புத்தக விற்பனையாளன் அல்ல. எனக்குக் கிடைக்கும் விலையை விட நாற்பது சென்ட் குறைவாகவே அந்தப் புத்தகங்களை நான் வாங்குகிறேன். அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்... நான் ஒருபோதும் புத்தகங்களை வாங்கி அதில் நூற்றுக்கணக்கான டாலர்களை இழக்காமல் இருந்ததில்லை. அவற்றை வைத்திருப்பவர்களுக்கு, "ஏழை முதியவர், பெண்கள் யாராவது வந்து, அதை வாங்கப் பணம் இல்லையென்றால், எப்படியாவது அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்," என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அவர்கள் அவற்றைக் கிழித்துப் போடுகிறார்கள் மற்றும் எல்லாவற்றையும் செய்கிறார்கள்; நாங்கள் அவற்றை இழக்கிறோம். எனவே நான் எப்போதும் புத்தகங்களால் கடனில்தான் இருக்கிறேன். அங்கே - என்னைப் பற்றி மக்கள் எழுதிய பல புத்தகங்கள் என்னிடம் உள்ளன, நான் ஒருபோதும் புத்தகங்கள் எழுதுவதில்லை, ஆனால் நான் - நான் ஒரு புத்தக விற்பனை யாளன் அல்ல. படங்களை, நான் டக்ளஸ் ஸ்டுடியோ விலிருந்து வாங்குகிறேன்; அவை காப்புரிமை பெற்றவை. வேறு எந்த வழியிலும் அவற்றைத் தொட உங்களுக்குத் துணிவிருக்காது. அவை காப்புரிமை பெற்றவை. நான் டக்ளஸ் ஸ்டுடி யோவிலிருந்து அவற்றை வாங்குகிறேன், பின்னர் அவற்றை விற்கிறேன், ஆயிரக்கணக்கில் வாங்கி, நான் செலுத்தும் விலைக்கே அவற்றை விற்கிறேன், இதனால் மக்கள் செய்திக்காக அவற்றைப் பெற முடியும். 23 எனக்கு எந்த வானொலி நிகழ்ச்சியும் இல்லை; நான் எப்போதுமே என் சபையைச் சிறியதாகவே வைத்திருக்கிறேன், எனக்குப் பணம் தேவைப்படாத வகையில் என் சபை சிறியதாக இருக்கிறது. என் வாழ்நாளில் நான் ஒருபோதும் காணிக்கை எடுத்ததில்லை. நான் இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பிரசங்கித்து வருகிறேன், என் வாழ்நாளில் ஒருபோதும் காணிக்கை எடுத்ததில்லை. ஒரு முறை நான் எடுக்க ஆரம்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. இப்போது, உங்களுக்குத் தெரியுமா, நம்மில் யாருக்காவது எப்போதாவது, நம்மால் சமாளிக்க முடியாத ஏழ்மை நிலை ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள் எப்போதாவது அந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்களா? நிச்சயமாக, வந்திருப்பீர்கள். என்னால் சமாளிக்க முடியவில்லை, அது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பன்னிரண்டு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. நான் என் மனைவியிடம் சொன்னேன்; "இன்றிரவு நான் சபையில் காணிக்கை எடுக்கப் போகிறேன்," என்று சொன்னேன். அவள், "நீ செய்வதைப் பார்க்க நான் வரப்போகிறேன்," என்றாள். 24 எனவே நான் என் தொப்பியை எடுக்குமாறு டீக்கன்களில் ஒருவரிடம் சொன்னேன்; நான் சொன்னேன், "மக்களே, உங்களிடம் கேட்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது," ஆனால் நான் சொன்னேன், "நான் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறேன், நீங்கள் எனக்கு... எனக்குச் சிறிய காணிக்கை வேண்டும். உங்களால் முடிந்தால், ஐந்து சென்ட் (nickel) அல்லது பத்து சென்ட் (dime), ஏதோ ஒன்று போடுங்கள், இந்தச் சிறிய சூழ்நிலையை நான் கடக்க உதவுங்கள், நான் அதைப் பாராட்டுவேன்." எனவே அந்த டீக்கன் என் தொப்பியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார். நான் கீழே பார்த்தேன், அங்கே அமர்ந்திருந்த ஒரு வயதான தாய், எப்போதும் எனக்காக ஜெபிப்பவர்... உங்களுக்கு நினைவிருக்கிறதா, வயதான பெண்கள் முன்பெல்லாம் உட்புறத்தில் பாக்கெட்டுடன் கூடிய ஒரு சிறிய கவச உடை (apron) அணிந்திருப்பார்கள்? நீங்கள் எப்போதாவது அப்படி ஒன்றை பார்த்திருக் கிறீர்களா? இப்போது, பழைய காலத்து ஆட்கள், என் பாட்டி தனது புகையிலை மற்றும் சிறிய மூங்கில் குழாயை (cane pipe) அதில் வைத்துக்கொள்வார், உங்களுக்குத் தெரியும், ஆண்கள் அவர் புகைபிடிப்பதைப் பார்க்கக் கூடாது என்பதற்காக. 25 ஆகவே, ஆனால் இந்தச் சிறிய வயதான பெண்மணிக்கு அது போன்ற ஒரு சிறிய பாக்கெட் இருந்தது, அவர் அதன் மேல் ஒரு பிடியுடன் கூடிய அந்தச் சிறிய பணப்பைகளில் ஒன்றை வெளியே எடுத்தார், மேலும் அந்த ஐந்து சென்ட் நாணயங்களை (nickels) எடுக்க உள்ளே துழாவத் தொடங்கினார். நான் உங்களுக்குச் சொல்கிறேன்: என் இதயம் என் வாயிலிருந்து குதித்துவிடும் என்று நினைத்தேன். நான் விரும்பியிருந்தாலும் என்னால் அதை எடுத்திருக்க முடியாது. நான் சொன்னேன், "ஓ, நான் உங்களைச் சும்மா கேலி செய்தேன்; நான் அப்படிச் சொல்லவில்லை." எல்லோரும் என்னை மிகவும் வேடிக்கையாகப் பார்த்தார்கள்; நான் சொன்னேன், "நான் சும்மா சொன்னேன்; நான் ஒருபோதும் காணிக்கை எடுத்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும்." எனவே நான் வீட்டிற்குச் சென்றபோது, ஜான் ரியான் என்ற பெயருடைய ஒரு வயதான மனிதர் இருந்தார், சமீபத்தில்தான் மகிமைக்குச் சென்றார், மிகவும் வயதான மனிதர். அவர் அங்கே ஒரு பழைய சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தார்; அவர் தாவீது வம்சத்தைச் சேர்ந்தவர் போலத் தோற்றமளித்தார். அவருக்கு நீண்ட முடியும் தாடியும் இருந்தது. அவர் கீழே வந்தார்; அவர் பழைய சைக்கிளை விட்டுவிட்டு, அதை எனக்குக் கொடுத்தார். நான் சென்று பத்து சென்ட் (dime) எடுத்துக்கொண்டு, பத்து சென்ட் கடைக்குச் சென்று, கொஞ்சம் பெயிண்ட் வாங்கி, அதற்குப் பெயிண்ட் அடித்து, ஐந்து டாலருக்கு விற்றேன், எல்லாவற் றிற்கும் மேலாகக் காணிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. எனவே தேவன் ஒவ்வொரு தேவையையும் சந்திப்பார், இல்லையா? 26 எனவே அந்த விஷயங்களில், நான் அதை எதற்காகச் சொன்னேன் என்றால், "எனக்கு எழுதுங்கள்," என்று நான் சொல்லும்போது, கடிதங்களுக்குப் பதில் அளிப்பதில் எங்களுக்குக் கடினமான நேரம் இருக்கிறது. அது உங்களிடம் பணம் கேட்கவோ அல்லது பில் (bill) போடவோ அல்ல, ஏனென்றால் பில் போடுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. சபையில் போடுவதற்கு உங்களிடம் பணம் இருந்தால், அதை உங்கள் போதகர்களிடம் கொடுங்கள். இங்கே உங்களைச் சுற்றியுள்ள உங்கள் சொந்த வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் காரியங்களுக்கு ஆதரவ ளியுங்கள். என்னுடையது எனக்கு... எனக்கு அது தேவையில்லை; இது முற்றிலும் இலவசம்; எங்களிடம் உள்ள அனைத்தும் இலவசம். எனவே நான் அதைச் சொல்கிறேன், உங்களுக்கு அந்தத் துணிகளில் ஒன்று வேண்டுமென்றால், அனுப்புங்கள். சில நேரங்களில் மக்கள் அதற்கு உதவச் சிறிது போடுகிறார்கள்; மற்றும் - மற்றும் நாங்கள் வாரத்திற்குப் பல நூறு டாலர்கள் மதிப்புள்ள தபால்தலைகள் மற்றும் அது போன்றவற்றை வாங்குகிறோம். சில நேரங்களில் அது செய்யப்படுகிறது, ஆனால் நீங்கள் - நீங்கள் அப்படிச் செய்யக் கோரப்படவில்லை. சும்மா அனுப்பிப் பெற்றுக்கொள்ளுங்கள்; அதை உங்கள் வேதாகமத்தில் வைத்துக்கொள்ளுங்கள்; அது நல்லது. 27 இப்போது, நான் அதை மறப்பதற்கு முன், இந்தக் கைக்குட்டைகளுக்காக இப்போது ஜெபிக்க விரும்புகிறேன். இப்போது, நான் மட்டும் ஜெபிக்க விரும்பவில்லை; நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது யாருடைய அப்பாவோ இவற்றுக்காகக் காத்தி ருக்கிறார், யாருடைய அம்மாவோ, அவர்கள் ஒருவருக்குப் பிரியமானவர்கள். அவர்கள் தேவனுடைய பிள்ளைகள், விசுவாசிகள். எனவே நாம் ஒன்றாக ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, விசுவாசிக்கிற ஜனங்களின் கூட்டமாக நாங்கள் உம்மிடம் தாழ்மையுடன் வருகிறோம். "எங்கே இரண்டு மூன்று பேர் என் நாமத்தினால் கூடியிருக் கிறார்களோ, அவர்கள் நடுவில் இருப்பேன். அவர்கள் எதைக் குறித்து ஒருமனப்பட்டு வேண்டிக் கொள்வார்களோ, அதை அவர்கள் பெறுவார்கள், அது அவர்களுக்குக் கொடுக்கப் படும்," என்று நீர் உம்முடைய வார்த்தையில் சொல்லியிருக்கிறீர். 28 இப்போது, இதோ இந்தக் கைக்குட்டைகள் இருக்கின்றன, அப்போஸ் தலனாகிய பவுலின் சரீரத்திலிருந்து கைக்குட்டை களையும் கச்சைகளையும் எடுத்துச் சென்றார்கள் என்று வேதாகமத்தில் நாங்கள் போதிக்கப் பட்டிருக்கிறோம்; அசுத்த ஆவிகள் ஜனங்களை விட்டு நீங்கின; வியாதிகள் குணமாக்கப்பட்டன. பிதாவே, நாங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் அல்ல என்பதை உணருகிறோம், ஆனால் நீர் இப்போதும் இயேசுவாகவே இருக்கிறீர். சுகப்படுத்தியவர் நீர் தான், பவுல் அல்ல; நீர் அவருடன் இருந்தீர் என்பதை அவர்கள் அங்கீகரித்தார்கள். நிச்சயமாக, ஒரு நெருக் கடியான நேரத்தில் நீர் அப்படிச் செயல் பட்டுவிட்டு, அதே போன்ற சூழ்நிலை எழும்போது, நான் சொன்னது போல், நீர் அதே வழியில் செயல்பட வேண்டும். இதைக் கேட்பதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள். எங்களிடம் எந்த நன்மையான காரியமும் இல்லை. ஆனால் நீர் எங்களை அப்படிச் செய்யும்படி சொன்னதினால் தான். கம்பத்தின் மேல் இருந்த அந்தச் சர்ப்பத்தைப் போல, சர்ப்பத்திலோ கம்பத்திலோ எந்த வல்லமையும் இல்லை, ஆனால் கீழ்ப்படிதலே அந்த முடிவுகளைக் கொண்டு வந்தது. இன்றிரவு அது அப்படியே ஆகக்கடவது, பிதாவே. அங்கே மலையோரத்திலோ, பின்புறத் திலோ, மலைகளுக்கு அப்பாலோ, நோய்வாய்ப் பட்ட தன் குழந்தைக்காகக் கைக்குட்டை வரும் என்று ஒரு ஏழைத் தாய் தரையில் நடந்துகொண்டிருக்கிறாள். கையில் வெள்ளைப் பிரம்புடன், ஓர் ஏழை வயதான பார்வையற்ற அப்பா இன்றிரவு அங்கே ஒரு சிறிய அறையில் அமர்ந்திருக்கிறார்; "கேள்வியினால் விசுவாசம் வரும்," என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். இந்தக் கைக்குட்டை திரும்பி வருவதற்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். ஓ தேவனே, மருத்துவமனையில் இன்னும் அநேகர். 29 இஸ்ரவேலருக்குக் கானான் தேசத்தை, வாக்களிக்கப்பட்ட தேசத்தை நீர் வாக்களித்தீர் என்று வேதாகமத்தில் நாங்கள் போதிக்கப் பட்டிருக்கிறோம். ஒரு நாள் அவர்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குச் செல்லத் தங்கள் நிலைப்பாட்டை எடுத்தபோது செங்கடல் அவர்கள் வழியில் குறுக்கிட்டது. பார்வோனின் படையால் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். ஒரு பக்கம் மலைகளும் பாலைவனங்களும், பாதையில் செங்கடலும் இருந்தது. ஒரு எழுத்தாளர் சொன்னார், "தேவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் ஊடாகக் கோபக்கண்களுடன் கீழே பார்த்தார். அவர் செங்கடலைப் பார்த்தபோது, அது பயந்து போனது, ஏனென்றால் வாக்குத்தத்தத்தைப் பெற்ற தேவனுடைய ஜனங்களை அது துண்டித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். அது பயந்து பின்வாங்கியது. இஸ்ரவேல் பயணத்தில் கடந்து சென்றது." ஓ தேவனே, இன்றிரவு, இந்தக் கைக் குட்டைகள் நோயாளிகள் மற்றும் பாதிக்கப் பட்டவர்கள் மீது வைக்கப்படும்போது, இயேசுவின் இரத்தம் மூலமாக நீர் கோபக்கண்களுடன் பார்ப்பீராக; ஜனங்களைப் பிடித்திருக்கும் நோயிகள் பயப்படட்டும். ஏனெனில் ஈஸ்டர் காலையில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை நிரூபித்தது, அது பின்வாங்கட்டும்; வேதாகமம் வாக்குறுதி அளித்துள்ளபடி அவர்கள் நல்ல ஆரோக்கியத்தின் வாக்குறுதியைப் பெறட்டும். அதை அருளும், ஆண்டவரே, இந்த நோக்கத்திற்காகவே உமது நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இந்தக் கைக்குட்டைகளை நாங்கள் அனுப்புகிறோம். ஆமென். 30 அந்தக் கைக்குட்டைகளுக்காக ஜெபித்த மைக்கு மிக்க நன்றி. இப்பொழுது, நாம் நேரடியாக வார்த்தைக்குள் கடந்து செல்வோம். நான் வார்த்தையை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கிறீர்களா? எனக்கு இன்னும் கொஞ்சம் தொண்டைச் சத்தம் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவேளை நாளை பிற்பகல், இன்றிரவு நான் அதிகம் சிரமப்படாமல் இருந்தால், பிற்பகலில் ஒரு சுவிசேஷத் தலைப்பில் உங்களுடன் சிறிது நேரம் பேசுவேன். இன்றிரவு நான் ஒரு சிறிய முன்னுரையை மட்டும் கொடுக்கலாம் என்றும், ஒருவேளை நோயாளிகளுக்கான ஜெபத்தில் கர்த்தர் நமக்கு என்ன செய்வார் என்பதைப் பார்க்கலாம் என்றும் நினைத்தேன். இப்போது, யோவான் 12-ம் அதிகாரம், 37-ம் வசனத்தில் நாம் இதை வாசிக்கிறோம், 37-ல் தொடங்கி 40-ம் வசனம் வரை உள்ளடக்கியது: அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை: அற்புதம் என்றால் என்ன? அது விளக்க முடியாத ஒன்று. 38-வது வசனம்: ஆண்டவரே, எங்கள் மூலமாய் அறிவிக்கப் பட்டதை நம்பினவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படிக்கு இது நடந்தது. ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமற் போனார்கள்; ஏனெனில் ஏசாயா மறுபடியும்: அவர்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும் பாமலும், நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படிக்கு, அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார் என்று சொல்லியிருக்கிறான். தீர்க்கதரிசி சொல்லியிருந்தபடியால் அவர் களால் முடியவில்லை. இப்போது, நான் தேர்ந்தெடுத்த மற்றொரு இடம் யோவான் 10-ம் அதிகாரம் மற்றும் 37-ம் வசனம் மற்றும் 38-வது: என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் (இயேசு சொன்னார்), என்னை விசுவாசிக்காதிருங்கள். நான் செய்திருந்தேனானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். 31 அவர் தமது வார்த்தையை வாசிப்பதற்குத் தமது ஆசீர்வாதத்தைக் கூட்டுவாராக. இப்போது, இந்தச் சிந்தனைக்கு வருகையில், நாம் இந்த யுகத்தில் ஜீவனுள்ள தேவனுடைய ஓர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அசைவை எதிர்கொண்டிருக்கிறோம்; நிச்சயமாக, நம்மிடம் பல காரியங்கள் இருப்பதை நாங்கள் உணருகிறோம். பிரஸ்பிடீரியன், கத்தோலிக்கர், மெத்தடிஸ்ட் ஆகிய உங்களுக்கு, பல மதவெறித்தனங்கள் (fanaticisms) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேக மில்லை, அது நம்மிடமும் உண்டு. நாங்கள் அதை ஒப்புக்கொள்வோம்; அது எல்லா வற்றிலும் இணைந்திருக்கிறது. மதவெறி கொண்ட பிரஸ்பிடீரியன்களை நான் பார்த்திருக் கிறேன்; மதவெறி கொண்ட பாப்டிஸ்டுகளை நான் பார்த்திருக்கிறேன்; மதவெறி கொண்ட கத்தோலிக்கர்களை நான் பார்த்திருக்கிறேன்; மதவெறி கொண்ட பெந்தெகோஸ்தேக்காரர்களை நான் பார்த்திருக்கிறேன்; தெய்வீக சுகமளித்தலில் மதவெறியை நான் பார்த்திருக்கிறேன்; இயற்கைக்கு அப்பாற்பட்டதன் பாவனைகளை (impersonations) நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் எதைப் பேசுகின்றன? ஒரு உண்மையானதைப் பற்றிப் பேசுகின்றன. இவையெல்லாம் ஒரு உண்மையான ஒன்று இருப்பதாலேயே உண்டா கின்றன என்பதை அர்த்தப்படுத்துகின்றன. இப்போது, ஒரு மெய்யான ஜீவனுள்ள தேவன் இருக்கிறார், அவர் தமது வார்த்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறார். இப்போது, ஊழியம்... நான் கல்வி கற்கவில்லை, ஆகவே அவருடைய மக்களுக்கு ஊழியம் செய்ய அவர் எனக்கு இறையாண்மை மிகுந்த கிருபையினால் மற்றொரு வழியைக் கொடுத்தார், அது தரிச னங்கள் மூலமாக ஆகும். இப்போது, இன்றிரவு நான் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு, வேதவசனங்கள் மற்றும் பலவற்றின் மூலம், "தரிசனங்கள் என்பவை யாவை" என்பதை விளக்கலாம் என்று நினைத்தேன். 32 தரிசனம் என்றால் என்ன? அநேக நேரங்களில் யாராவது கேட்டிருக்கிறார்கள், "சகோதரன் பிரான்ஹாம், சில காரியங்களைச் சொல்ல நீங்கள் தூண்டப்படுகிறீர்களா? அதை உங்கள் மனதில் நினைத்துக்கொள்கிறீர்களா?" இல்லை, ஐயா, நான் அதைப் பார்க்கிறேன். நான் உங்களைப் பார்ப்பது போலவே, அது அங்கிருக்கிறது: நீங்கள் இங்கே நிற்கிறீர்கள் என்பது மட்டுமே உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் ஒருவேளை நாற்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்று வேறொருவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவர்கள் உடுத்தி யிருக்கும் விதம், இருக்கும் நிலை மற்றும் அனைத்தையும் கூடப் பார்க்கலாம். பின்னர் நான் பேச வேண்டும், நான் பேசும்போது, தரிசனத்தைப் பார்த்துக் கொண்டி ருக்கும்போது, நான் இங்கே சத்தமாக இருக்கிறேனா இல்லையா, அவர்கள் என்னைக் கேட்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அதனால்தான், இந்தக் கூட்டத்திலுள்ளவர்கள் என் குரலின் எதிரொலியைக் கேட்கும் இந்தச் சிறிய இடத்தில், நீங்கள் அதை உண்மையில் புரிந்துகொள்கிறீர்களா என்று இங்கே உள்ள ஒலிப்பதிவாளர் மற்றும் ஒவ்வொருவரிடமும் நான் கேட்கிறேன். 33 ஆனால் ஒரு தரிசனம் என்பது, ஒரு அறிவு வார்த்தையின் (word of knowledge) மூலமாக, நடந்து முடிந்த ஒன்றையோ அல்லது நடக்கப்போகும் ஒன்றையோ முன்னமே காணும்படி அல்லது தீர்க்கதரிசனமாய்ப் பார்க்கும் படி ஒரு நபருக்கு தேவன் அருளுவதாகும். இப்போது, நான் இதை மிகவும் எளிமையாக்கப் போகிறேன். இங்கே ஒளிவீசும் கண்களை உடைய சிறு பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். இயேசு தாமதித்தால், அவர்களே நாளைய ஆண்கள் மற்றும் பெண்கள். சுவிசேஷத்தை வயது வந்தவர்கள் மற்றும் பெரியவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் நாம் பல நேரங்களில் அதை மிகவும் சிக்கலாக்கிவிடுகிறோம் என்று நான் நினைக்கிறேன், அந்தச் சிறு குழந்தைகளும் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதை நாம் உணருவதில்லை. 34 இப்போது, ஊருக்கு ஒரு சர்க்கஸ் (circus) வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது, முதல் காரியமாக, நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், வரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளாய் இருக்கின்றன. வேதாகமம் அதைச் சொல்கிறது. கவலைப் படுகிறதினால் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுகிறவன் யார்? தேவன் உங்களை உருவாக்கியபடியே நீங்கள் இருக்கிறீர்கள். இங்கே சில காலத்திற்கு முன்பு, ஒரு பெண்மணி கூட்டத்திற்கு வந்தார். அவர் வீட்டில் இருந்தார்; ஏதோ ஒன்று அவரைத் தாக்கியது. அவருக்குக் கீல்வாதம் (arthritis) இருந்தது; அவர் முடங்கிப்போயிருந்தார். கர்த்தர் அவரைச் சுகப்படுத்தப்போகிறார் என்று ஏதோ ஒன்று அவரைத் தாக்கியது. அவர் அதைத் திட்டவட்டமாக அறிந்திருந்தார். அவர் அதை ஊகிக்கவில்லை; அது அப்படித்தான் என்று அவருக்குத் தெரியும். எனவே அவர் ஒரு வாடகை வண்டி (cab) பிடித்து, படுக்கையிலிருந்து (stretcher) இறங்கி வாடகை வண்டிக்குள் ஏறி, இடத்திற்கு வந்தபோது... அன்று இரவு கூட்டத்தில், அவருக்காக ஜெபிக்கப்படக்கூட இல்லை, ஆனால் தேவனுடைய ஆவியானவர் கிரியை செய்வதையும் அசைவாடுவதையும் அவர் கண்டபோது, அவர் சொன்னார், "அதுதான், கர்த்தராகிய இயேசுவே; இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். உமக்கு நன்றி." அவர் வாடகை வண்டியிலிருந்து இறங்கியபோது, ஓட்டுநர் சொன்னார், "அம்மா, கூட்டம் முடிந்த பிறகு உங்களை அழைத்துச் செல்ல நான் திரும்பி வர வேண்டுமா?" "எனக்கு நீங்கள் தேவைப்பட மாட்டீர்கள்; நான் நடந்தே வீட்டிற்குச் செல்லப் போகிறேன்," என்று அவர் சொன்னார். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, கர்த்தர் அந்த முடங்கிய கால்களை நேராக்கினார், அவர் எழுந்து நடந்தே வீட்டிற்குச் சென்றார். நிச்சயமாக அது எங்கும் பரவியது. மற்றொரு பெண்மணி சொன்னார், "உங்களுக்குத் தெரியுமா, நானும் அதே காரியத்தைச் செய்யப் போகிறேன்." அவர் ஒரு வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு போனார், வாடகை வண்டியைக் கிளம்பச் சொன்னார். ஆனால் வாடகை வண்டி மீண்டும் வந்து அவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர் வேறொருவருடைய விசுவாசத்தைப் போலப் பாவனை செய்ய முயன்றார். நீங்கள் அதைச் செய்ய முடியாது. பிசாசுக்கு அதைவிட நன்றாகத் தெரியும்; நீங்கள் அவனை ஏமாற்ற முடியாது. நீங்கள் எதை அறிக்கை செய்கிறீர்களோ, அது உங்களிடம் இருக்க வேண்டும். 35 இப்போது, உண்மையில் உங்கள் இருதயத்தில்... பார்வையினால் உண்டாகும் விசுவாசத்தைப் பற்றி நான் பேசிக் கொண்டி ருந்தது போல. இந்தச் சட்டை வெள்ளை நிறம் என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள், உங்கள் கையை உயர்த்துவீர்களா? இது வெள்ளை என்று நீங்கள் நம்புகிறீர்களா? நல்லது, ஒருவேளை இது சிவப்பு என்று நான் சொன்னால், நீங்கள் அதை நம்புவீர்களா? இல்லை, ஐயா. உங்கள் பார்வையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இது வெள்ளை என்று உங்களுக்குத் தெரியும். நல்லது, உங்கள் விசுவாசத்தில் அதே வகையான நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், இன்றிரவு நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பார்வை இது வெள்ளை என்று சொல்வது எவ்வளவு நிச்சயமோ, உங்கள் விசுவாசத்தினால் நீங்கள் சுகமடையப் போவதும் அவ்வளவு நிச்சயம், அது முடிந்தது. எல்லாம் முடிந்துவிட்டது, இனி அதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. விசுவாசம் ஏற்கனவே பற்றிக்கொண்டது. வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலம் அது வர வேண்டும்; அதுதான் முதல் வழி. ஆனால் தேவன் தமது சபையை ஒன்றிணைப்பதற்காகச் சபையில் வெவ்வேறு வரங்களை வைத்திருக்கிறார். ஆண்டுகளாக... 36 பாருங்கள், வேதாகமம் சொன்னது, தீர்க்கதரிசி சொன்னார், "வெளிச்சமும் இராது, இருளும் இராது என்று ஒரு காலம் வரும். ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்." இப்போது, பரிசுத்த ஆவியானவர் முதன்முதலில் சபையின் மேல் இறங்கியபோது, அது எருசலேமில் உள்ள கிழக்கு மக்களிடத்தில் இருந்தது; அங்கேதான் பரிசுத்த ஆவி இறங்கியது. ஆதிகாலச் சபையின் ஆரம்ப பெந்தெகோஸ்தே காலத்தில் சபையினால் பெரிய அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப் பட்டன. பின்னர் அடுத்த சுற்றில் அப்போஸ்தலர்கள், பின்னர் கத்தோலிக்கச் சபை உள்ளே வந்தது, பின்னர் பதினைநூறு ஆண்டுகள், பின்னர் லூத்தரன். அதன்பின்னர் அங்கிருந்து கீழே, ஒளி அணைந்துபோன ஒரு காலம் இருந்தது, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை நீங்கள் காணவும், நீங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று அறியவும் போதுமான பகல்வெளிச்சம் இருந்தது. ஆனால் பரிசுத்த ஆவியின் உண்மையான பிரகாசமான ஒளி இந்த யுகங்களில் ஒருபோதும் பிரகாசிக்கவில்லை; நிச்சயமாக, அது பிரகாசிக்காது என்று வேதாகமம் சொன்னது. அது பிரகாசிக்காது என்று தீர்க்கதரிசி சொன்னது போலவே; ஏசாயா சொன்னதினால் அவர்கள் விசுவாசிக்க மாட்டாமற் போனார்கள் என்பது எவ்வளவு நிச்சயமோ, தீர்க்கதரிசி சொன்னதினால் இதுவரை ஒளி இருக்கவில்லை. 37 சரி மற்றும் தவறு செய்ய வேண்டும் என்று அறிந்துகொள்ளப் போதுமான ஒளி இருந்தது. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கவும், அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், சபை புத்தகத்தில் உங்கள் பெயரைச் சேர்க்கவும், நல்ல வாழ்க்கை வாழவும் போதுமான ஒளி இருந்தது. ஆனால் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைப் பொறுத்தவரை, சூரியனின் நேரடி கதிர்கள் பிரகாசிப்பது போல, பெந்தெகோஸ்தே நாளுக்குப் பிறகு இதுவரை இருந்ததில்லை. ஆனால் வேதாகமம் சொன்னது, மற்றும் தீர்க்கதரிசி சொன்னார், "மாலை வேளையில் வெளிச்சம் உண்டாகும்." இப்போது, பூகோள ரீதியாக, சூரியன் கிழக்கில் உதிக்கிறது; அது முதலில் பெந்தெகோஸ்தே ஆசீர்வாதமாக இருந்தது. அது மேற்கில் மறைகிறது; மற்றும் நாகரீகம் மேற்கு நோக்கிப் பயணித்துள்ளது. நாம் இப்போது மேற்கு கடற்கரை (West Coast) வரை வந்துவிட்டோம், அது மீண்டும் சுழன்று வருகிறது. எனவே மாலை நேர சூரியன் மறைகிறது, இந்தக் கடைசி நாட்களில் தேவன் பிரகாசிக்கிறார், பெந்தெகோஸ்தே மக்கள் மீது பிரகாசித்த அதே சூரியன், அதே அடையாளங்கள் மற்றும் அற்புதங்களுடன் இன்று சபையின் மீது மீண்டும் பிரகாசிக்கிறது. மாலை நேரம் வரும்போது ஒளி பிரகாசிக்கும். மேகங்கள் அகன்றுவிட்டன; இயேசு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் நம் கூட்டங்களுக்குள் வருகிறார்; அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். அன்று அவர்களுக்குச் செய்தது போலவே அவர் தம்மை உயிருள்ள வராகக் காட்டுகிறார். 38 அவர் இங்கே தம்மை உயிருள்ளவராகக் காட்டுகிறார். மேகங்கள் இப்போது முற்றிலுமாக அகன்றுவிட்டன; இது மாலை நேர வெளிச்சம். வாழ்வதற்கு எப்பேர்ப்பட்ட ஒரு மகிழ்ச்சியான காலம். வேதாகமம் சொன்னது, "இந்தக் கடைசி நாளில் வாலிபர் தரிசனங்களைக் காணவும், மூப்பர்கள் சொப்பனங்களைக் காணவும் அவர் செய்வார்; அவர் மாம்சமான யாவர்மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவார்." அவர் அதை வாக்களித்தார். கடைசி நாட்களில் தீர்க்கதரிசிகளை அவர் வாக்களித்தார். கடைசி நாட்களில் அடையாளங் களையும் அற்புதங்களையும் அவர் வாக்க ளித்தார். பெந்தெகோஸ்தே நாளில் இருந்த அதே முடிவுகள் கடைசி நாட்களில் மீண்டும் வரும் என்று அவர் வாக்களித்தார். இதுதான் அது; நாம் இங்கே இருக்கிறோம். எனக்கு இன்னும் கொஞ்சம் குரல்வளம் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 39 சரி, எப்படியாயினும், தரிசனம் என்றால் என்ன? ஒரு தரிசனத்தில் என்ன உடைகிறது? என்ன பரிமாணம் (dimension)? என்ன அணு விடுவிக்கப்படுகிறது? அது ஒருபோதும் அறியப்படாது; அது தேவனுடைய இரகசியம். ஆனால் தரிசனம் என்றால் என்ன என்பதை, குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி இங்கே சொல்கிறேன். ஊருக்கு ஒரு மிகப்பெரிய சர்க்கஸ் வருகிறது. நாமனைவரும் சிறு பையன் களாகவும் சிறுமிகளாகவும் இதைச் சுற்றி வெளியே நிற்கிறோம், உள்ளே செல்ல நம்மிடம் பணம் இல்லை. உங்களுக்குத் தெரியும், நாம் யானைகளைப் பார்க்க விரும்புகிறோம், இல்லையா? பாருங்கள்? நாம் ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் - மற்றும் உள்ளே இருக்கும் எல்லா விதமான காரியங்களையும் பார்க்க விரும்புகிறோம். அதைத்தான் - நாம் பார்க்க விரும்புகிறோம். பாருங்கள்? ஆனால் உள்ளே செல்ல நம்மிடம் பணம் இல்லை. ஆனால் நம்மில் சிலர் இருக்கிறோம், இவரைப் போலப் பெரிய அகன்ற தோள்களை உடையவர்கள் மற்றும் வலிமையானவர்கள். ஒருவேளை நம்மில் சிலர்... அவர் வலிமையானவர். ஒருவேளை நம்மில் சிலர் உயரமாகவும் ஒல்லியாகவும் இருக்கலாம். இப்போது, நாம் - ஒருவேளை நாம் உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்தால், சரி, நாம் - நாம் குள்ளமாகவும் வலிமையாகவும் இருக்க விரும்புகிறோம். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை; தேவன் நம்மை உயரமாகவும் ஒல்லியாகவும் படைக்கிறார். நாம் உயரமாக இருக்க விரும்பினால்... குள்ள மாகவும் வலிமையாகவும் இருப்பவர் உயர மாகவும் ஒல்லியாகவும் இருக்க விரும்புகிறார்; அவரால் அதை மாற்ற முடியாது; தேவன் அவரைப் படைத்தபடியே அவர் இருந்தாக வேண்டும். பாருங்கள், தேவன் நம்மை ஒவ்வொரு விதமாகப் படைக்கிறார். 40 தேவன் பல்வகையானவர் (God of variety). அவர் மஞ்சள் பூக்கள், மற்றும் வெள்ளை பூக்கள், மற்றும் - மற்றும் நீல பூக்கள், மற்றும் சிவப்பு பூக்களை உண்டாக் குகிறார். பாருங்கள், அவர் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக உண்டாக்குவதில்லை. அவர் மிகச் சிறிய மலைகள், மிகப் பெரிய மலைகள், மிகச் சிறிய மரங்கள் மற்றும் பெரிய மரங்களை உண்டாக்குகிறார். அவர் மலைகளையும் பாலைவனங்களையும் உண்டாக்குகிறார்; அவர் நீர்நிலைகள், மற்றும் ஏரிகள், மற்றும் ஓடைகள், மற்றும் ஆறுகள் மற்றும்... பாருங்கள்? அவர் பல்வகையான தேவன். அவர் நம்மில் சிலரைச் சிவப்பு முடியுடனும், நம்மில் சிலரை வெள்ளை முடியுடனும், நம்மில் சிலரைக் கருப்பு முடியுடனும் (பாருங்கள்) உண்டாக்குகிறார்; அவர் நம்மைப் பல விதங்களில் உண்டாக்குகிறார். அவர் அதை அப்படித்தான் விரும்புகிறார். அவர் அதைச் செய்யும் விதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். பாருங்கள்? எனக்குக் கூட அது அப்படித்தான் பிடிக்கும், உங்களுக்குப் பிடிக்காதா? எல்லோருக்கும் அப்படித்தான் பிடிக்கும். பாருங்கள்? 41 இப்போது, நாம் இப்படியாக இருக்கிறோம்: நாமனைவரும் ஒரு பெரிய கார்னிவலில் (carnival) இருக்கிறோம். இன்றிரவு இந்தக் குழுவுடன் நாம் நின்று கொண்டிருக்கும்போது, ஒருவேளை கர்த்தர் என்னை உங்களை விடச் சற்று உயரமாகப் படைத்திருக்கலாம். ஆனால் ஒருவேளை அதைச் செய்வது அவருடைய கிருபையாக இருந்திருக்கலாம், ஆனால் நீங்கள் என்னை விடச் சற்று வலிமையானவர். இப்போது, நாம் சுற்றிலும் பார்க்கிறோம், முதல் காரியமாக நாம் பார்க்கிறோம்: இங்கே மேலே உயரத்தில் மரத்தில் ஒரு துவாரம் (knothole) இருக்கிறது. சரி, நானே எட்டிப் பார்க்கும் அளவுக்குப் போதுமான உயரத்தில் இல்லை, நிச்சயமாக, நீங்களும் இல்லை. ஆகவே, உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நான் விரும்புகிறேன், நீங்களும் விரும்புகிறீர்கள். எனவே நீங்கள் சொல்கிறீர்கள், "சகோதரன் பிரான்ஹாம், உள்ளே என்ன இருக்கிறது என்று பாருங்கள்." "ஒரு நிமிடம் இருங்கள்," என்று சொல்கிறேன். நான் கீழே குனிந்து ஒரு பெரிய குதி குதிக்கிறேன்; என் விரல்கள் பலகையின் உச்சியைப் பற்றிக்கொள்கின்றன. நான் மிகவும் கடினமாக இழுத்து, இந்தச் சிறிய துவாரத்தின் வழியாகப் பார்க்கிறேன்; நான் சொல்கிறேன், "நான் - நான் - நான் - நான் ஒரு யானையைப் பார்க்கிறேன்." "ஓ, பார்த்தீர்களா?" "ஆமாம்." "வேறென்ன பார்த்தீர்கள், சகோதரன் பிரான்ஹாம்?" சரி, நான் மீண்டும் முயற்சி செய்கிறேன், நான் மேலே எகிரி அதைப் பற்றிக்கொண்டு, என் விரல்களால் பிடித்துக்கொள்கிறேன், "ஒரு ஒட்டகச்சிவிங்கி, ஆம், ஐயா." 42 இப்போது, சிறிது நேரத்திற்குப் பிறகு, கார்னிவல் உரிமையாளர் வருகிறார், "என்ன விஷயம், பையா?" "ஓ," நான் சொல்கிறேன், "நான் அந்தத் துவாரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்." அவர் சொல்கிறார், "இப்போது, ஒரு நிமிடம் இரு." அவர் என் கழுத்தின் பின்பகுதியைப் பிடித்து என்னைத் தூக்குகிறார்; அவர் சொல்கிறார், "நீ அங்கே பார். இப்போது, நீ இங்கே ஆரம்பி, அது இதுதான், இது இதுதான், இது அதுதான், மற்றும் இது அதுதான்," என்று வரிசையாகச் சொல்கிறார். "அதுதான் முழு விஷயம். பார்த்தாயா?" பின்னர் அவர் என்னைக் கீழே இறக்கி விடுகிறார். நான் மூச்சுவாங்கித் திணறவில்லை. அவர் என்னைத் தூக்கினார். இப்போது, நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? 43 இப்போது, பெரியவர்களே, ஒரு நபர் மேடைக்கு வரும்போது, ஒரு தரிசனம் உருவாகிறது என்றால், அது அவர்களுடைய விசுவாசம். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்தப் பெண்ணைப் போல. அவருக்கு எதுவும் தெரியவில்லை... அவள் அவரைத் தொட்டது அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொன்னார், "நான் பலவீனமடைந்தேன்." அது என்ன? அந்தப் பெண் அவர் மூலமாக இழுத்துக் கொண்டிருந்தாள், தேவனை, தன் சுகத்திற்காகத் தனக்குத் தேவையாய் இருந்ததை. இப்போது, எது மிகப் பெரிய அற்புதம்? அந்தப் பெண் அவருடைய விசுவாசத்தைத் தொட்டுச் சுகமடைந்ததா - அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு வெளியே சென்றதும் அவர், "என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டதா. யாருக்கும் தெரியவில்லை. அவள் சொன்னாள், "நான் இல்லை." அவர்கள் அனைவரும் மறுத்தார்கள். அந்தக் கால்வாய் (channel) என்று நாம் அழைப்பதை அவர் கண்டுபிடிக்கும் வரை அவர் சுற்றிலும் பார்த்துக்கொண்டே இருந்தார். அதை அப்படிச் சொல்லலாம். அவர் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்த அந்தக் கால்வாய், அவர் சொன்னார், "ஓ, நீதான் அது." அவள் வந்து காலில் விழுந்து, "ஆம், அது சரி," என்றாள். 44 இப்போது, அதில் அவர் - அவர் பலவீனமடைந்தார். ஆனால் இப்போது, தேவன் தமது வரத்தைப் பயன்படுத்த விரும்பியபோது, கிறிஸ்துவை. அவர் கிறிஸ்துவை எடுத்துக் கொண்டு சொன்னார், "இப்போது, காத்திரு, நீ இந்த வீட்டை விட்டு, வெளியே போய் நான்கு நாட்கள் இரு. அவர்கள் உன்னைத் தேடி ஆள் அனுப்புவார்கள், ஆனால் நீ போகாதே, ஏனென்றால் லாசரு சாகப்போகிறான். நான்காம் நாளில் நீ திரும்பி வா; கல்லறையின் மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருப்பதை நீ காண்பாய். நான் எனக்கு மகிமையைக் கொண்டுவரப் போகிறேன், நீ அவர்களைக் கல்லை அகற்றச் சொல்ல வேண்டும், பின்னர் நீ பேசு. நீ லாசருவின் பெயரைச் சொல்லும்போது, அவன் வெளியே வருவான்." பிதாவுக்குக் கீழ்ப்படிந்த இயேசு, பிதா தமக்கு முதலில் ஒரு தரிசனத்தில் காண்பிக்கும் வரை, தாம் ஒன்றும் செய்வதில்லை என்று சொன்னார். வேதாகமம் அப்படிச் சொல்கிறதா? நாம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டி ருந்ததிலிருந்து இந்த வாரத்தில் எத்தனை பேர் அதை வாசித்திருக்கிறீர்கள்? யோவான் 5:19. ஆம், ஐயா. இயேசு சொன்னார், "பிதா எனக்கு முதலில் காண்பிக்கும் வரை, நான் ஒன்றும் செய்வதில்லை, பின்னர் அவர் எனக்குச் சொல்வதை நான் செய்கிறேன். அவர் எனக்குக் காண்பித்தாலொழிய நான் ஒன்றும் செய்வதில்லை." அது சரி. இயேசு அதைச் சொன்னார். அவர் உண்மையைச் சொன்னாரா? அவர் சொல்லித்தான் ஆக வேண்டும். 45 அப்படியானால், இயேசுவுக்கு அந்தத் தரிசனம் வந்தபோது, திரும்பி வந்தார். "அவர் அதை அவரிடம் சொன்னாரா?" என்று நீங்கள் கேட்கலாம். ஏன், கல்லறையினிடத்தில் அவர் அப்படிச் சொன்னார். "பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்; நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்தி ருக்கிறேன்; ஆனாலும் இங்கே நிற்கிறவர்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்," என்றார். பாருங்கள், அவர் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார். அவர், "லாசருவே, வெளியே வா," என்றார். அவருக்குத் தெரியும். அங்கே பாருங்கள், அவர் சொன்னார், அங்கே, அவர் அங்கே போய்ச் சேரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை, "நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்தி ருக்கிறான்; நான் அங்கே இராததினால் உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன், ஆனால் அவனை எழுப்பப் போகிறேன்," என்றார். பாருங்கள்? பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது, ஏனென்றால் பிதா அவருக்குக் காண்பித்திருந்தார். 46 இப்போது, அங்கே எந்த வல்லமையும் இழக்கப்படவில்லை. தேவன் தமது வரத்தைப் பயன்படுத்தினார். இப்போது, அந்தப் பெண் தனக்குத் தேவையானதைத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளத் தேவனுடைய வரத்தைப் பயன்படுத்தினாள். தேவன் தாம் விரும்பியதைக் காண்பிக்கத் தமது சொந்த வரத்தைப் பயன்படுத்தினார். இப்போது, இன்றும் அதே காரியம்தான். இப்போது, ஒரு தரிசனம் - ஒரு நபர் பார்வையாளர்களில் நிற்கிறார்... சிலரால் அதைக் கற்பனை செய்துகொள்ளவே முடிவ தில்லை. "சகோதரன் பிரான்ஹாம், உங்களை எது அவ்வளவு பலவீனமாக்குகிறது? உங்களை எது அப்படி விழச் செய்கிறது?" நீங்கள் ஒருமுறை அந்த இடத்தில் நின்று பார்க்க வேண்டும். பாருங்கள்? அது மக்களின் விசுவாசம் அதைச் செய்கிறது. நீங்கள் மேலே தூக்கும்போது... 47 இங்கே நிற்கும் நபரைப் போல... இங்கே ஒரு நபர் நிற்கிறார். சரி, யார்? எனக்குத் தெரியாது? இப்போது, அது என்ன? எனக்குள் நான் ஒப்புக்கொடுக்கிறேன். அந்த நபர் அசைகிறார். அந்த நபர் அங்கே நிற்கிறார்; முதல் காரியம், அவர்கள் கிறிஸ்தவரா இல்லையா என்பதை நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்; அவர்களுக்கு ஒரு வரவேற்கும் ஆவி (welcome spirit) இருக்கிறது. இப்போது, அது என்ன? இங்கே சவால் வருகிறது, என்ன... அவர் புற்றுநோயின் கடைசி நிலையில் இருப்பதாக ஒரு மருத்துவர் சொல்வதை நான் கேட்கிறேன். புற்றுநோய், ம்ஹூம், அது சரி. வேறென்ன? ஓ, என், பாருங்கள்? நீங்கள் ஏற்கனவே சோர்ந்து போய்விட்டீர்கள். சரி, நாம் பேசுவோம், அவர் என்ன... இதோ அது மீண்டும் போகிறது, நீங்கள் கீழே வரும்போது, ஏன், நீங்கள் எங்கிருந்தோ வந்தீர்கள், உங்களுக்குச் சில குறிப்பிட்ட - குறிப்பிட்ட காரியங்கள் இருந்தன... "ஆம், அது சரி." பாருங்கள்? அது நீங்கள் தேவனுடைய வரத்தைப் பயன் படுத்துவது. 48 இப்போது, யாரோ ஒருவர் கேட்கிறார், "சகோதரன் பிரான்ஹாம், அது மட்டும்தானா நேரம்?" அது ஒரு ஆரம்பநிலை நேரம் மட்டுமே; அது உண்மையில் தேவனுடைய பூரண சித்தம் அல்ல, தேவன் அதை அனுமதிக்கிறார். தேவனுடைய சித்தம்... இன்றிரவு என்னுடன் இங்கே இரண்டு பையன்கள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் கத்தோலிக்கர், மற்றவர் எனக்குத் தெரியாது, அவர் எந்தச் சபையையும் சார்ந்தவர் என்று நான் நினைக்கவில்லை: ஒருவர் குழாய் பொருத்துபவர் (steam fitter), மற்றவர் ஏதோ ஒரு வகையான மதுக்கூடத்தில் (tavern) வேலை செய்தார் என்று நினைக்கிறேன். அவர்கள் ஹம்மண்ட், இந்தியானாவுக்கு வந்தார்கள், அவர்கள் அந்தக் காரியங்களைப் பார்த்தார்கள், "அதில் ஏதோ தந்திரம் இருக்கிறது," என்று சொன்னார்கள். எனவே அவர்கள் சொன்னார்கள், அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக ஒரு எஃப்.பி.ஐ (FBI) துப்பறியும் குழுவை அமைத்துக்கொண்டார்கள். எனவே அவர்கள் என்னைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் நான் வசிக்கும் ஜெஃபர்சன்வில்லிக்கு நழுவி வந்து, வீட்டில் அது நடக்கிறதா என்று பார்க்க விரும்பினார்கள். ஏன், அது கூட்டத்தில் நடப்பதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக வீட்டில் நடக்கிறது. அது தேவன் தமது சொந்த வரத்தைப் பயன்படுத்துவது. 49 இன்று காலை... நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இன்று காலை, கர்த்தர் உரைக்கிறதாவது, என் இருதயத்தின் மேல் என் வேதாகமம் இருக்கிறது, தேவனே என் நியாயாதிபதி, மிக அதிகாலையில், நான் விழித்தேன், அறையில் நடந்து கொண்டி ருந்தேன். அவர் அருகில் இருப்பதை நான் உணர்ந்துகொண்டே இருந்தேன், ஒரு ஆறாவது அறிவைப் போல. நான் அவரைப் பார்க்க வில்லை, ஆனால் அவர் அங்கே இருப்பதை நான் அறிந்தேன். நான் சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்; முன்னும் பின்னும் நடந்தேன். சவரம் செய்ய எழுந்தேன்; சூரியன் உள்ளே பிரகாசித்துக் கொண்டிருந்தது. நான் சொன்னேன், "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?" நான் காத்துக்கொண்டே இருந்தேன்; எதுவும் ஒன்றும் சொல்லவில்லை. நான் படுக்கையின் ஓரத்தில் மண்டியிட்டேன்; ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் சொன்னேன், "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்? உமது ஊழியக்காரன் இந்த நாளில் செய்ய வேண்டியது ஏதேனும் இருக்கிறதா?" அப்போது ஒரு தரிசனம் வந்தது, அது அந்த நாளுக்கானது என்ன என்பதையும், அந்த நாள் முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்பதையும் எனக்குச் சொன்னது. நான் ஜீன், லியோவை அழைத்தேன் (திரு. மெர்சியர், மற்றும் திரு. கோட்; அவர்கள் இன்றிரவு இங்கே இருக்கிறார்கள்), அறைக்கு வரும்படி என் மகனை அழைத்தேன். நான் சொன்னேன், "எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது; இது கர்த்தர் உரைக்கிறதாவது. என் வாழ்நாளில் நான் சென்றிராத ஒரு குறிப்பிட்ட நகரத்திற்கு இன்று நான் செல்லப் போகிறேன்; நாம் ஒரு குறிப்பிட்ட நிலையைச் சந்திக்கப் போகிறோம். இயற்கையையே மாற்றக்கூடிய ஒரு அற்புதம் அங்கே நடக்கப்போகிறது. ஒரு பெரிய சுகமளித்தல் நடக்கப்போகிறது." என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கினேன். நான் சொன்னேன், "திரும்பி வரும் வழியில் வெஸ்டர்ன் யூனியன் (Western Union) இருக்கும் ஒரு இடத்திற்குச் செல்லப் போகிறோம், அங்கே வேறொரு நாட்டிலிருந்து என்னை அனுப்பிய ஒருவருக்கு ஒரு செய்தி இருக்கப்போகிறது, அவர் நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் நான் அந்த நபரிடம், "இல்லை, என்னால் அதைச் செய்ய முடியாது," என்று சொல்ல வேண்டும், அதை நான் செய்வது போலத் தோன்றினாலும், நான் அவர்களிடம் இல்லை என்று சொல்ல வேண்டும். 50 அவர்கள் இப்போது இங்கே இருக்கிறார்கள். என் மகனை அவன் காரை எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன் - கட்டளை யிட்டேன். அவன் காரை எடுத்தான், இன்று நாங்கள் நூறு மைல்களுக்கும் மேல் ஓட்டிச் சென்று, நேராக அந்த இடத்திற்குச் சென்றோம், அதன் ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு சரியாக இருக்க முடியுமோ அவ்வளவு சரியாக இருந்தது. தேவன் இயற்கையின் முழு நடைமுறையையும் மாற்றி ஒரு அற்புதத்தைச் செய்தார். அதைப்பற்றி நீங்கள் பின்னர் கேள்விப்படுவீர்கள். பாருங்கள்? சரியாகத் திரும்பி வந்தோம், அவர் கேட்டார், "இப்போது, வெஸ்டர்ன் யூனியன் குறித்து என்ன?" அந்த மனிதர் இங்கே, இந்தக் கட்டிடத்தில் நின்றிருந்தால், அந்தச் சிறிய வெஸ்டர்ன் யூனியனில் இருந்தது; அவர்கள் இங்கே ஓட்டி வந்தார்கள், "இல்லை, இது ஒரு கிளை அலுவலகம்; நீங்கள் இங்கே கீழே உள்ள வேறொரு இடத்திற்குச் செல்ல வேண்டும்," என்றார்கள். அங்கே கீழே சென்றோம், அங்கே அந்தத் தந்தி (telegram) இருந்தது, இப்போதுதான் வந்த ஒவ்வொரு வார்த்தையும், தரிசனம் காட்டிய அதே விதத்தில் இருந்தது. பாருங்கள்? அது நூற்றுக்கணக்கான முறை நடக்கிறது. பாருங்கள்? அது - அது என்னை ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை; அது தேவன் தமது வரத்தைப் பயன்படுத்துவது. 51 ஆனால் நீங்கள் அதிலிருந்து இழுப்பது, அது நீங்கள் தேவனுடைய வரத்தைப் பயன்படுத்துவது. நீங்கள் சொல்கிறீர்கள், "சகோதரன் பிரான்ஹாம், எனக்கு என்ன பி... என்று உங்களால் சொல்ல முடியுமா" இல்லை, ஐயா, என்னால் அதைச் செய்ய முடியாது. நான் விரும்புவதை என்னால் செய்ய முடியாது; அதைச் செய்வது அவரே. என்னால் நானாகவே ஒரு தரிசனத்தைப் பார்க்க முடியாது; அதைச் செய்வது அவரே. ஆனால் அவர் என்னிடம் சொன்னார், "நீ மக்களை உன்னை நம்பும்படி செய்தால்," அன்று இரவு தூதன் என்னைச் சந்தித்தபோது, புத்தகத்தை வாசிக்கிறவர்களே. அவர் சொன்னார், "நீ மக்களை உன்னை நம்பும்படி செய்ய முடிந்தால், நீ ஜெபிக்கும் போது உண்மையுள்ளவனாயிரு, அந்த ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்காது." அதனால்தான் நேற்று இரவு நான் செய்ததைச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் தவறாகப் பேசியிருந்தால், என்னை மன்னிக் கவும். நான் சொன்னபோது, "நீங்கள் அமை தியாக இருக்க வேண்டும்." நான், "அமைதியாக இருங்கள், அசையாதீர்கள்," என்று சொல்லும் போது, நீங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், நீங்கள் நம்பவில்லை என்று அர்த்தம். பாருங்கள், நீங்கள் அதை நம்ப வேண்டும். பாருங்கள்? "நீ நம்பினால், மக்களை உன்னை நம்பும்படி செய்தால், நீ ஜெபிக்கும் போது உண்மையுள்ளவனாயிரு, அப்போது எதுவும் நிற்காது." ஆனால் எதுவாக இருந்தாலும்... 52 இங்கே வெகு காலத்திற்கு முன்பு அல்ல, ஒரு பெண்மணி பீடத்திற்கு, மேலே - மேடைக்கு மேலே வந்தார். அவர் இரண்டு ஊன்று கோல்களுடன் (crutches) நடந்து வந்தார், மேலே நடந்து வந்தார்; நான் சொன்னேன், "அம்மா..." பரிசுத்த ஆவியானவர் செய்தார், ஊழியக்காரனின் உதடுகள் மூலமாக. இந்த ஒலிப்பதிவுக் கருவிகள் (recorders) எல்லாவற்றையும் பார்க்கிறீர்களா? அப்படித்தான் சரியாக என்ன சொல்லப்படுகிறது என்பதை நான் கேட்கிறேன். தரிசனத்தின் கீழ் நான் என்ன சொல்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இங்கே ஒலிப்பதிவு செய்யும் பையன்கள் அதை எடுக்கிறார்கள், அதைத் திரும்ப எடுத்துச் செல்கிறார்கள், நாங்கள் பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஒவ்வொரு கூட்டத்தையும் வைத்திருக்கிறோம், சரியாகச் சொல்லப்படுகிறது. ஒரு முறை கூட அது தவறியதில்லை. அது ஒருபோதும் தவறாது. நான் நாற்பது சொச்சம் ஆண்டுகளாகத் தரிசனங்களைப் பார்த்திருக்கிறேன், அது ஒருபோதும் தவறியதில்லை. நான் ஒரு பாவியாக இருந்தபோதே தரிசனங்களைப் பார்த்தேன். ஏன்? அது ஒரு வரம். எனக்கு நினைவிருக்கும் முதல் தரிசனம், நான் - எனக்கு இரண்டு வயது கூட ஆகாதபோது அதை நான் பேசியதை என் அம்மா என்னிடம் சொன்னார். "வரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளாய் இருக்கின்றன." நீங்கள் அப்படித்தான் பிறந்திருக்கிறீர்கள்; அந்தப் பண்பு உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் நீலக் கண்கள், அல்லது கருப்புக் கண்கள், அல்லது பழுப்பு நிறக் கண்களுடன் பிறந்தது போல, அல்லது எதுவாகவோ. இது தேவன் செய்த ஒன்று. அதுதான் அது சரியாக இருக்கக்கூடிய ஒரே வழி. அது தேவனிடமிருந்து வர வேண்டும், நீங்கள் உருவாக்கிய ஒன்று அல்ல; தேவன் இருப்பதற்கு நியமித்தது எதுவோ அதுவே. அப்படியானால் அது தேவனால் உண்டானது. நீங்கள் சும்மா பாசாங்கு செய்து இட்டுக்கட்டினால், உங்கள் கை - அது தவறாகி விடும். பாருங்கள்? 53 இப்போது, இதைக் கவனியுங்கள். எப்போதும்... இந்தப் பெண்மணி வந்தபோது அவர் தன் ஊன்றுகோல்களை வைத்திருந்தார்; அவர் நடந்து வந்தார், நான் சொன்னேன், "அம்மா, நீங்கள் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள், ஏனென்றால் யாரோ ஒருவர் உங்களை வரச் சொன்னார்கள். உங்களுக்கு விசுவாசத்தில் நம்பிக்கை கூட இல்லை." அது அவரை வருத்தப்படுத்தியது. அவர் சொன்னார், "நான் ஒரு குறிப்பிட்ட - குறிப்பிட்ட சபையைச் சேர்ந்தவள்." மேலும் அவர் சொன்னார், "நான் என் சபையை நேசிக்கிறேன்." நான் சொன்னேன், "நீங்கள் அதைச் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்." அவர் சொன்னார், "சரி, உங்களால் எனக்கு உதவ முடியுமா?" நான் சொன்னேன், "இல்லை அம்மா; என்னால் முடியாது." நான் சொன்னேன், "கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட கிரியைகளில் உங்கள் தனிப்பட்ட விசுவாசத்தினால் தான் உங்கள் உதவி வரவேண்டும்." அவர் சொன்னார், அவர் சொன்னார், "சரி, நான் அதை நம்புகிறேன்." நான் சொன்னேன், "உங்கள் முழு இருதயத்தோடும் அதை நம்புவீர்களா?" அவர் சொன்னார், "ஆம்." நான் சொன்னேன், பின்னர் நான் அவரை மீண்டும் திரும்பிப் பார்த்தேன், அவர் மீதிருந்த இருள் விலகிவிட்டது. நான் சொன்னேன், "நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் என்னை நம்புகிறீர்களா?" "ஆம்." நான் சொன்னேன், "அப்படியானால் நீங்கள் அங்கே படியின் முனை வரை நடந்து சென்று, உங்கள் ஊன்றுகோல்களைத் தூக்கியெறிந்து விட்டு, மேடையிலிருந்து கீழே நடந்து செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." அவர் சொன்னார், "இத்தனை ஆண்டுகளாக இந்த ஊன்றுகோல்களில் இருந்த பிறகு நான் அதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?" நான் சொன்னேன், "இப்போது, நீங்கள் என்னை நம்புவதாகச் சொன்னீர்கள் என்று நினைத்தேன்," பாருங்கள்? நான் சொன்னேன், "இப்போது, நீங்கள் எப்போதும் அந்த ஊன்றுகோல்களில்தான் இருப்பீர்கள்." 54 அந்தச் சமயத்தில் அவர்கள் ஒரு வயதான பெண்ணை உள்ளே கொண்டு வந்தார்கள், சில உதவியாளர்கள் அவரைப் பாதியளவு தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் அவரை ஐந்து அல்லது ஆறு வரிசைகள் பின்னால் உட்கார வைத்தார்கள். இது ஹூஸ்டன், டெக்சாஸில் நடந்தது, அந்தப் பெரிய புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முந்தைய இரவு - சில இரவுகளுக்கு முன்பு, அங்கே பெரிய சாம் ஹூஸ்டன் கொலிசியத்தில் (Sam Houston Coliseum). உதவியாளர்கள் அவரைத் தூக்கியிருந்தார்கள், ஒரு வாலிபன் அவருக்கு ஒரு இருக்கை கொடுத்தான். அவர்கள் அவரை உட்கார வைத்தார்கள், அந்த ஏழை முதியவர் மிகவும் முடங்கிப்போயிருந்தார். இந்தப் பெண்மணிக்குச் சென்றிருக்க வேண்டிய அந்த ஆசீர்வாதம், அந்தப் பெண்ணின் மேல் அந்த ஒளி (Light) நின்றது, அந்த வயதான பெண்ணைச் சுற்றி வட்டமிட்டது. நான் அவரைப் பார்த்தேன்; நான் சொன்னேன், "சகோதரி, நீங்கள் ஒரு விசுவாசியா?" "ஆம்." நான் சொன்னேன், "அவர்கள் உங்களை விமானம் மூலம் இங்கே கொண்டு வந்தார்கள்; நீங்கள் ஓஹியோவிலிருந்து வந்திருக்கிறீர்கள்." அவர் சொன்னார், "அது சரி." அவர் சொன்னார், "அது சரி." நான் சொன்னேன், "ஏனென்றால் நீங்கள் பல கூட்டங்களுக்குப் பின்தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றும், ஒருபோதும் சரியான நேரத்தில் வர முடியவில்லை." "அது சரி," என்றார். நான் சொன்னேன், "இயேசு உங்களைச் சுகப்படுத்தியிருக்கிறார்; எழுந்து நில்லுங்கள், உங்கள் ஊன்றுகோல்களைத் தூக்கியெறியுங்கள்." கஷ்டப்பட்டு அசைய முடிந்த அந்தப் பெண்மணி, தன் ஊன்றுகோல்களைத் தூக்கியெறிந்து விட்டு, கட்டிடம் முழுவதும் தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடி, அலறிக் கொண்டும் சத்தமிட்டுக்கொண்டும் சென்றார். பாருங்கள்? அது அவருடைய விசுவாசம். பாருங்கள்? எதுவாக இருந்தாலும் சரி. பாருங்கள்? இந்தப் பெண்மணிக்கு விசுவாசம் இல்லை, அந்தப் பெண்மணிக்கு விசுவாசம் இருந்தது. தரிசனங்கள் உங்கள் விசுவாசத் தினாலும் தேவனுடைய சித்தத்தி னாலும் வருகின்றன. 55 இப்போது, எனக்கு நேரம் இருந்தால், சமீபத்தில் நடந்த ஒரு சிறிய கதையை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். எத்தனை முறை என்னால்... ஆயிரக்கணக்கான தரிசன சம்பவங்கள் உள்ளன. இதை உங்களுக்கு முடிந்தவரை விரைவாகச் சொல்கிறேன். நான் ஃப்ளோரிடாவில் சகோதரன் பாஸ்வொர்த்தைச் சந்திக்கச் செல்லும் வழியில் இருந்தேன். ஒரு சிறு பையன் கொல்லப் படுவதைப் பற்றிய ஒரு தரிசனத்தை நான் கண்டேன். சகோதரர்களே, நாம் சிறு பையன்களாக இருந்தபோது அணிந்தது போல, அவன் சிறிய குட்டைக் கால்சட்டை (short pants) அணிந்திருந்தான், நீண்ட, வரிவரியான காலுறைகள் (rib stockings), ஒரு சிறிய, நாம் அழைக்கும், ஒரு கிராக் ஹேர்கட் (crock haircut), சிறிய பழுப்பு நிறக் கண்கள். அவன் ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டிருந்தான்; அவன் நாக்கு வெளியே தள்ளியிருந்தது; அவன் கண்கள் பின்னோக்கிப் பார்த்தன, அவன் சாலையின் ஓரத்தில் கிடந்தான். அங்கே பெரிய பசுமைமாறா மரம் (evergreen tree) ஒன்று நின்றது, பாறைகள் எல்லாம் ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டிருந்தன. நான் கீழே சென்று மேடையில் நின்று முன்னறிவித்தேன், நான் சொன்னேன், "திரு. லிண்ட்சே, 'வாய்ஸ் ஆஃப் ஹீலிங்' (Voice of Healing) இந்தக் கட்டுரையை வெளியிடும். இந்தக் குழந்தை கொல்லப்படுவதை நான் கண்டேன், நான் அவனை எங்காவது கண்டு பிடிப்பேன். இது கர்த்தர் உரைக்கிறதாவது." நான் சொன்னேன், "இதை உங்கள் வேதாகமத்தின் முகப்புத்தாளில் (flyleaf) எழுதிக் கொள்ளுங்கள்." நீங்கள் என் வேதாகமத்தைக் கவனித்தால், முகப்புத்தாள்களில் தரிசனங்கள் மற்றும் நடக்கப் போகும் காரியங்கள் எழுதப்பட்டிருக்கும். ஒன்று கூடத் தவறியதில்லை. ஆனால் இந்த கடைசி ஒன்று, அது இப்போதுதான் நடக்கிறது. அது தவற முடியாது. தேவனிடத்தில் தோல்வி இல்லை. பாருங்கள்? அது நானாக இருந்தால், அது ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகும்; அது அவராக இருந்தால், அது தவற முடியாது. 56 இப்போது, கவனியுங்கள், அதற்கு இரண்டு இரவுகளுக்குப் பிறகு, ஒரு பதற்றமான தந்தை என்னை அழைத்து வந்த இடம் தெரிந்ததால் அங்கே வெளியே நின்று கொண்டிருந்தார், நான் இந்தக் கூடாரத்திற்குச் செல்ல உதவ உதவியாளர்கள் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்... உதவியாளர்கள் என்னிடம் வந்து, "நாங்கள் அங்கே ஒரு தந்தையைத் தடுத்து நிறுத்த வேண்டி யிருக்கிறது," என்று சொன்னார்கள். நான் கேட்டேன், "ஏன்?" "இன்று காலை அவருடைய சிறு பையன் ஒரு பாசன வாய்க்காலில் மூழ்கிவிட்டான், அவர் அந்தப் பிணத்தை எடுத்துச்செல்ல அடக்கம் பண்ணுகிறவர்களைக் கூட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்," என்று சொன்னார்கள். மேலும், "அது அங்கே கரையில் கிடக்கிறது," என்றும் சொன்னார்கள். 57 நிச்சயமாக, நான் எங்கே தங்குகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் நான் தனிமைப்படுத்திக் கொள்பவன் அல்ல; நான் மக்களை நேசிக்கிறேன். மக்களைச் சந்திக்க எனக்குப் பிடிக்கும்; உங்கள் ஒவ்வொரு வருடனும் வீட்டிற்குச் சென்று நீங்கள் சோள அப்பமும் தட்டப்பயிறும் (corn pone and black-eyed peas) எவ்வளவு நன்றாகச் சமைப்பீர்கள் என்று பார்க்க விரும்புகிறேன். எனக்கு அவை பிடிக்கும். ஆனால் நான் - நான் ஒரே நேரத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் ஊழியக்காரனாக இருக்க முடியாது. நான் விழிப்போடிருக்க, இந்தக் காரியங்களின் நிமித்தம் நான் என்னைத் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது, ஆயத்தமாக இருக்க முடியும். பிதா உங்களை என்ன செய்யச் சொல்கிறாரோ, அதைச் செய்யுங்கள். ஆயிரக் கணக்கானோர் அமர்ந்திருக்கும் கூட்டங்களை நான் நிறுத்திவிட்டு, பரிசுத்த ஆவியின் நடத்துதலைப் பின்தொடர வெளியே நடந்திருக்கிறேன். ஒரு முறை கூட அது தவறியதில்லை. எனவே இந்தத் தந்தை - நான் சொன்னேன், "சரி, நான் போய் அந்தக் குழந்தையைப் பார்க்கிறேன்." அவர்கள் என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். இல்லை, அது அந்தக் குழந்தை இல்லை. அந்தப் பையன் கருப்பு முடியுடையவன், நல்ல உடை அணிந்திருந்தான், சுமார் ஐந்து வயதுடைய மிகச் சிறிய பையன்; இந்தப் பையன் சுமார் எட்டு அல்லது பத்து வயதுடையவன். நான் சொன்னேன், "இல்லை, அது அந்த - அது அந்தக் குழந்தை இல்லை, ஐயா. மன்னிக்கவும், ஆனால் இது அது இல்லை." தன் சிறு பையனுக்காக மிகவும் அழுதுகொண்டிருந்த அந்தத் தந்தைக்காக நான் ஜெபம் ஏறெடுத்து விட்டு, சென்றுவிட்டேன். என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; விழிப்போடிருக்க, நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது, ஆயத்தமாக இருக்க வேண்டும். பிதா உங்களை என்ன செய்யச் சொல்கிறாரோ, அதைச் செய்யுங்கள். ஆயிரக் கணக்கானோர் அமர்ந்திருக்கும் கூட்டங்களை நான் நிறுத்திவிட்டு, பரிசுத்த ஆவியின் நடத்துதலைப் பின்தொடர வெளியே நடந்திருக்கிறேன். ஒரு முறை கூட அது தவறியதில்லை. எனவே இந்தத் தந்தை - நான் சொன்னேன், "சரி, நான் போய் அந்தக் குழந்தையைப் பார்க்கிறேன்." அவர்கள் என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். இல்லை, அது அந்தக் குழந்தை இல்லை. அந்தப் பையன் கருப்பு முடியுடையவன், நல்ல உடை அணிந்திருந்தான், சுமார் ஐந்து வயதுடைய மிகச் சிறிய பையன்; இந்தப் பையன் சுமார் எட்டு அல்லது பத்து வயதுடையவன். நான் சொன்னேன், "இல்லை, அது அந்த - அது அந்தக் குழந்தை இல்லை, ஐயா. மன்னிக்கவும், ஆனால் இது அது இல்லை." தன் சிறு பையனுக்காக மிகவும் அழுதுகொண்டிருந்த அந்தத் தந்தைக்காக நான் ஜெபம் ஏறெடுத்துவிட்டு, சென்றுவிட்டேன். 58 இப்போது, அமெரிக்கா முழுவதிலும் கனடா வழியாகவும், அநேகமாக இங்கேயும் கூடத் தங்கள் புத்தகத்தில் அதை எழுதி வைத்திருக்கும் மக்கள் இருக்கலாம். ஏய், அதைக் கேள்விப்பட்டவர்கள் எத்தனை பேர், உங்கள் கைகளைப் பார்ப்போம், தங்கள் புத்தகத்தில் அதை வைத்திருப்பவர்கள் யார்? தங்கள் வேதாகமத்தின் முகப்புத்தாளில் (flyleaf) எழுதி வைத்திருப்பவர்கள். பல்லாயிரக் கணக்கானோர். மேலே குயோப்பியோ (Kuopio), பின்லாந்தில்... நான் இங்கிலாந்தில் இருந்திருக் கிறேன், பிரான்ஸ் மற்றும் வெவ்வேறு இடங்களைச் சுற்றியும் இருந்திருக்கிறேன், அங்கே மேலே... நான் குயோப்பியோ, பின்லாந்தில் இருந்தேன், நாங்கள் மலையின் மேல் இருந்தோம். நான் பல நாட்களாகச் சாப்பிடவில்லை, ஜெபித்துக்கொண்டிருந்தேன். திரு. லிண்ட்சே மற்றும் அவர்கள் என்னுடன் இருந்தார்கள்; நான் சொன்னேன், "ஏதோ ஒன்று நடக்கப்போகிறது." "அது என்ன, சகோதரன் பிரான்ஹாம்?" என்று கேட்டார்கள். நான் சொன்னேன், "எனக்குத் தெரியாது." நான் அந்தத் தரிசனத்தை மறந்துவிட்டேன். நான் சொன்னேன், "எனக்குத் தெரியாது, ஆனால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது." "நீங்கள் அது என்னவென்று நினைக் கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான் சொன்னேன், "எனக்குத் தெரியாது." நாங்கள் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம், எங்களுக்கு முன்னால் சுமார் ஒரு மைல் தூரத்தில் கீழே பார்த்தோம், மலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தது, போர்க்காலங்களில் ரஷ்யர்கள் எப்படி உள்ளே வந்து, நகரத்தின் மீது மொய்த்து, இயந்திரத் துப்பாக்கியால் சுட்டார்கள் மற்றும் பலவற்றை அங்கே மேலே நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். நான் நினைத்தேன், "சரி, பாவம் இந்தச் சிறிய ஃபின்னிஷ் (Finnish) மக்கள், அவர்கள் எவ்வளவு அருமை யானவர்கள், அவர்கள் எவ்வளவு தகுதியுள்ளவர்கள்." நான் பார்த்தேன், அங்கே ஒரு கார், ஆட்டோமொபைல், அமெரிக்கத் தயாரிப்பான ஃபோர்டு (Ford) கார் இருந்தது. ஓ, முழு தேசத்திலும் அவர்களிடம் இருநூறு கார்கள் கூட இருக்காது என்று நான் நினைக்கிறேன். அது இரண்டு சிறு குழந்தைகளை மோதியிருந்தது, அவர்களில் ஒருவன் மீது அவர்கள் காரை ஏற்றினார்கள், அவனை நசுக்கியது, காரின் பின்பக்கமாக அவனை வெளியே தூக்கி யெறிந்தது. ஓட்டுநர், ஃபெண்டர் (fender) மற்றொறுவனின் தாடையின் ஓரத்தில் இடித்தது, அவனை மரத்தில் மோதியது, அவனது மூளை பின்பக்கமாக நசுங்கியது, மற்றும் அவனது முதுகு. 59 சரி, சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தோம். திரு. மூர், அநேகமாக நாளை கூட்டத்திற்கு வருவார், அல்லது மற்ற கூட்டத்தில் என்னைச் சந்திப்பார்... திரு. லிண்ட்சே, திரு. பாக்ஸ்டர், அநேக சாட்சிகள் உடனிருந்தார்கள். நாங்கள் காரிலிருந்து இறங்கியபோது, அவர்களும் பார்க்க இறங்கினார்கள். அந்தச் சிறு பையன் ஒரு மேலங்கி (coat) போர்த்தப்பட்டுப் படுத்திருந்தான். மற்றொரு கார் மற்றச் சிறு பையனை ஏற்றியிருந்தது; அவன் இறக்கவில்லை, எனவே அவர்கள் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். இந்தச் சிறு பையன் அங்கே கிடந்தான், அவன்... [ஒலிநாடாவில் பதிவு விடுபட்ட இடம்] அவர்களால் அவனை நகர்த்த முடியவில்லை, ஏனென்றால் பெற்றோர்கள் அவனைப் பார்க்கும் வரை அவனை நகர்த்துவது சட்டத்திற்குப் புறம்பானது; அவர்கள் தாயையும் தந்தையையும் தேடிச் சென்றிருக்கிறார்கள். சரி, நான் நினைத்தேன், "ஓ, என், அந்த ஏழைத் தாயும் தந்தையும் தங்கள் பையன் அங்கே இறந்து கிடப்பதைக் காணும்போது என்ன நினைப்பார்கள்." நான் நினைத்தேன், "எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தந்தி வந்து, சிறிய பில்லி பால் கொல்லப்பட்டு, இதுபோலச் சாலையில் நசுங்கிக்கிடந்தால் நான் எப்படி உணருவேன்? இந்தக் கூட்டங்களுக்காக இங்கே கடல்களுக்கு அப்பால் இருக்கும் நான், என்ன செய்வேன்?" நான் நினைத்தேன், "வயலில் மண்வெட்டியுடன் இருக்கும் அந்தச் சிறிய அப்பா என்ன செய்வார்? கோடாரியுடன் கம்புகளை வெட்டிக்கொண்டிருக்கும் அல்லது ஏதோ செய்துகொண்டிருக்கும் அந்தச் சிறிய தாய், பாவம் அந்தச் சிறியவள் என்ன நினைப்பாள்?" 60 நான் அழ ஆரம்பித்தேன்; நான் - நான் ஜெபித்தேன். சகோதரன் மூர் மற்றும் அவர்கள் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தார்கள், நான் நினைத்தேன், "நான் அந்தக் குழந்தையைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்." எனவே அவர்கள் மேலங்கியை உயர்த்தினார்கள், அந்தப் பாவம் சிறியவன் அங்கே கிடந்தான், அவன் காதுகள் மற்றும் எல்லாவற்றிலிருந்தும் இரத்தம் வெளியேறியிருந்தது; நான் சொன்னேன், "ஓ, என்." இப்போது, ஒரு நபர் எவ்வளவு அறிவீனமாக மாற முடியும் என்பதைக் கவனியுங்கள். நான் சொன்னேன், "ஓ, என், அவனை மூடுங்கள்." நான் - நான் இப்படி விலகிச் செல்ல ஆரம்பித்தேன், யாரோ என் தோளின் மேல் தங்கள் கையை வைப்பதை உணர்ந்தேன். சகோதரன் மூர் அல்லது சகோதரன் லிண்ட்சே இருவரில் ஒருவராக இருக்கும் என்று நினைத்தேன். "வாய்ஸ் ஆஃப் ஹீலிங்" (Voice of Healing) பத்திரிகையின் ஆசிரியர் சகோதரன் மூர் மற்றும் சகோதரன் லிண்ட்சே பற்றி எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர் அங்கேயே இருந்தார், எல்லாவற்றையும் பார்த்தார். ஆகவே, அவர் கையை வைத்தார், நான் சொன்னேன், "சகோதரரே..." சகோதரன் மூர் நின்றுகொண்டிருந்தார்... பத்து அடி தூரத்தில் எனக்குப் பக்கத்தில் யாரும் இல்லை. ஒரு கை என் தோளின் மேல் இருந்தது. பாருங்கள், தேவன் பேசும்போது, தேவன் அந்தக் காரியத்தை உறுதிப்படுத்துவார். நான் நினைத்தேன், "இது யாருடைய கை?" நான் திரும்பிப் பார்த்தபோது, அந்தக் கை என்னை விட்டு நீங்கியது. நான் நினைத்தேன், "நான் - நான் அதை கற்பனை செய்தேனா?" நான் திரும்பி மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்; அந்தக் கை மீண்டும் வந்தது. நான் மீண்டும் சுற்றிலும் பார்த்தேன், அவர்கள் அந்தச் சிறு பையனை வேறொருவருக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அநேக மக்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். நான் கீழே பார்த்தேன்; நான் மேலே பார்த்தேன், அங்கே அந்தப் பசுமைமாறா மரங்கள் (evergreen trees), அந்தப் பாறைகள் ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டிருந்தன. நான் மீண்டும் பார்த்தேன்; நான் சொன்னேன், "திற... [ஒலிநாடாவில் பதிவு விடுபட்ட இடம்] 61 ஓ, அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது நண்பர்களே. நரகத்திலுள்ள எல்லாப் பிசாசுகளாலும் இப்போது அதைத் தடுத்து நிறுத்த முடியாது. தேவன் அப்படிச் சொன்னார். நான் சொன்னேன், "சகோதரன் மூர்." அவர் சொன்னார், "ஆம், சகோதரன் பிரான்ஹாம்." "சகோதரன் லிண்ட்சே, சகோதரன் பாக்ஸ்டர்." "ஆம்." "உங்கள் வேதாகமத்தை உடனே எடுங்கள்." "என்ன விஷயம்?" நான் சொன்னேன், "முகப்புத்தாளைத் (flyleaf) திருப்புங்கள்." அவர்கள் சொன்னார்கள், "சரி, என்ன..." நான் சொன்னேன், "பாருங்கள். பசுமை மாறா மரங்கள், ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்ட பாறைகள் உள்ள ஒரு நாட்டில் நாம் இருப்போம், சுமார் ஒன்பது வயதுடைய ஒரு சிறு பையன், கிராக் ஹேர்கட் (crock haircut), பழுப்பு நிற முடி, பழுப்பு நிறக் கண்கள், நாக்கு வெளியே தள்ளியிருக்கும், அவனது காலுறைகள் வழியாகக் கால்கள் வெளியே வந்திருக்கும், வரிவரியான காலுறைகள்...?... " அவர் சொன்னார், "அது அவன்தான்." நான் சொன்னேன், "நிச்சயமாக, அது அவன்தான்." ஆமென். ஓ, என், அதை விளக்க யாராலும் முடியாது; அந்த உணர்வு என்ன என்பதை விளக்க வழியில்லை. அது விசுவாசம் அல்ல; அது விசுவாசத்திற்கு அப்பற்பட்டது; அது அப்போது தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தை (Spoken Word). நான் மொழிபெயர்ப்பாளர் மூலமாகச் சொன்னேன்; நான் சொன்னேன், "இந்தக் குழந்தை அடுத்த ஐந்து நிமிடங்களில் உயிரோடு தன் காலில் நிற்கவில்லையென்றால், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி. இப்போது, அமைதியாக நில்லுங்கள், தேவனுடைய மகிமையைப் பாருங்கள்." 62 தரிசனத்தில் இருந்தபடியே நான் என்னை நிலையில் நிறுத்திக்கொண்டேன். நான் சொன்னேன், "பரலோகப் பிதாவே, இரண்டு வருடங்களுக்கு முன்பு தாய்நாட்டில் இதை வாக்களித்தவரே, இதை நிறைவேற்றிக் கொண்டு வந்தவரே... இப்போது, கம்யூனிஸ்டுகள் அனைவரும் சுற்றிலும் இருப்பதால், அவர்கள் உமது ஒரே குமாரனை மறுதலிக்கிறார்கள்; இது நடக்கும்படி நீர் முன்னமே நியமித்திருப் பதாலும், இந்தத் தரிசனத்தைத் தாய்நாட்டில் எனக்குக் காண்பித்திருப்பதாலும்; ஆகையால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவனுடைய ஆவி மீண்டும் திரும்பும்படி நான் கேட்கிறேன்." அந்தச் சிறு பையன் தன் கால்களில் குதித்து எழுந்தான், அலறினான், எவ்வளவு சுகமாகவும் சாதாரணமாகவும் இருக்க முடியுமோ அவ்வளவு சுகமாகச் சுற்றிலும் ஓட ஆரம்பித்தான். இப்போது, அந்தப் பையனின் பெயர் புத்தகத்தில் இருக்கிறது, நீங்கள் இன்று அவனுக்கு எழுதிக் கேட்க விரும்பினால் கேட்கலாம். அன்று இரவு நான் கூட்டத்திற்குச் சென்றபோது, அவர்கள் என்னைச் சாலை முழுவதும் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆயிரக்கணக்கானவற்றில் அது ஒன்று. சாலை முழுவதும், அவர்கள் என்னை அழைத்துச் சென்றபோது, அந்தப் போர்வீரர்கள் குழுவுடன், பாவம் சிறியவர்கள் இன்னும் சவரம் செய்யக் கூட இல்லை, ஃபின்னிஷ் இராணுவத்தில் உள்ள சிறிய பதினாறு வயது பையன்கள், பெரிய காலணிகள் (boots) அணிந்து, மிகப் பெரிய நீண்ட கோட்டுகளை அணிந்து, தங்கள் துப்பாக்கி முனையில் கத்திகள் பொருத்தப்பட்ட நிலையில்... 63 நான் சாலையில் நடந்து சென்றபோது அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள்... சகோதரர்களே, மரியாதைக்குரிய ஒரு மனிதன் உண்மையுள்ளவனாய் இருப்பான். நான் சாலையில் நடந்து சென்றபோது, அங்கே ரஷ்யப் போர்வீரர்கள் நின்றார்கள், ரஷ்ய மரியாதை (salute) செய்தார்கள், கண்ணீர் அவர்கள் கன்னங்களில் வழிந்தோடியது; அவர்கள் சொன்னார்கள், "இதுபோன்ற ஒரு தேவனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்." நிச்சயமாக, என்ன விஷயம்? கம்யூனிஸ் டுகளை உருவாக்குவது எது? ஏனென்றால் சபை அதன் தரநிலைகளைக் குறைத்துவிட்டது. அது சரி. நீங்கள் அதை ஒரு சமூக சுவிசேஷமாக (social gospel) மாற்றிவிட்டீர்கள்; நீங்கள் அதைச் சடங்குகளுக்குள் மட்டுப்படுத்தி விட்டீர்கள். சுவிசேஷத்திற்கு இப்போதும் அதே வல்லமை இருக்கிறது. அந்த ரஷ்யப் போர்வீரர்கள் ஃபின்னிஷ் போர்வீரர்களை அணைத்துக்கொண்டு ஒருவரையொருவர் தழுவிக் கொள்வதை நான் பார்த்தேன். ஒரு ரஷ்யரையும் ஃபின்னையும் ஒருவரையொருவர் தழுவிக்கொள்ளச் செய்யும் எதுவும் போர்களை என்றென்றைக்கும் முடிவுக்குக் கொண்டுவரும். அது சரி. கிறிஸ்துவே பதில். அது சரி. நமக்கு வட்டமேசை மாநாடுகளோ, பெரிய நான்கு கூட்டங்களோ, அது போன்றவைகளோ தேவையில்லை. இன்று நமக்குத் தேவையானது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், எளிமையாக இருந்தாலும், அதன் வல்லமையிலும் உயிர்த் தெழுதலின் செயல்விளக்கத்திலும் பிரசங்கிக்கப் பட வேண்டும். அதுதான் உலகத்திற்குத் தேவை. அதற்குத்தான் அது பசியாக இருக்கிறது. அனைவரும், எல்லாரும் அதற்காகப் பசியாக இருக்கிறார்கள். 64 நியமிக்கப்பட்ட அனைத்தும், "பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்." நீங்கள் அவர்களுக்குச் சோளக் கதிரின் தண்டு (corn cobs) கொடுத்துப் போஷிக்க முடியாது, அவர்களுக்குச் சோளம் கிடைக்க வேண்டும், சோளம் இருந்த இடம் அல்ல, ஆனால் சோளமே கிடைக்க வேண்டும்: சும்மா ஒரு வறண்ட கிணற்றில் அல்ல, நாம் சரித்திரத்தின் ஒரு சுவிசேஷம் என்று அழைப்பது போல ஒரு சுவிசேஷம் அல்ல, ஆனால் ஜீவனுள்ள கிறிஸ்துவின் சுவிசேஷம். குளிரில் உறைந்து சாகும் ஒரு மனிதனிடம், வரையப்பட்ட ஒரு பெரிய தீமூட்டத்தைக் காட்டுவதால் என்ன பயன்? சரித்திரம் அதைத்தான் செய்கிறது. அது ஒரு நெருப்பை வரைகிறது. குளிரில் உறையும் ஒரு மனிதன் வரையப்பட்ட படத்தினால் கதகதப் படைய முடியாது. அவனுக்கு நிஜம் வேண்டும். இன்று உலகத்திற்குத் தேவையானது - பரிசுத்த ஆவி மற்றும் அக்கினியின் படம் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவி மற்றும் அக்கினியின் ஞானஸ்நானத்தின் மூலமாக மீண்டும் உயிர்த்தெழுந்த உண்மையான கிறிஸ்துவே. இன்று உலகத்திற்கு அதுதான் தேவை: ஒரு எதார்த்தம், அவர்கள் சார்ந்திருக்கக்கூடிய ஒன்று, வார்த்தைகளின் அறிவிப்பு அல்ல, ஆனால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மெய்நிலை உணர்தல். ஆமென். 65 இப்போது, அன்று இரவு உள்ளே சென்றதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், இந்தச் சிறிய போர்வீரர்கள் என்னைப் பாதுகாத்து அழைத்துச் சென்றார்கள், துப்பாக்கி முனையில் கத்திகள் பொருத்தப்பட்டிருந்தன, மக்கள் தெருவில் நின்று அழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் இருபதாயிரம் சொச்சம் மக்களை உள்ளே அனுமதித்தார்கள், பின்னர் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மேலும் இருபதாயிரம் பேரை உள்ளே அனுமதித்தார்கள். நான் உள்ளே சென்றபோது, இந்தப் பெரிய கட்டிடத்தில், பெண்கள் பகுதி வழியாக, பெண்கள் தங்கும் விடுதி (dormitory) வழியாகச் சென்று கொண்டி ருந்தேன். அப்போது ஒரு கதவு சத்தமாகச் சாத்தப்பட்டது, ஒரு சிறுமி வெளியே வந்தாள். எனக்குச் சிறு குழந்தைகளை மிகவும் பிடிக்கும், ஓ, நாளை மறுநாள் நான் வீட்டிற்குச் செல்லும்போது, சிறிய ஜோசப்பை என் முதுகிலும், ரெபேக்காவை ஒரு கையிலும், சாராளை மறுகையிலும் வைத்துக்கொண்டு, எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியான நேரம் இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நான் அவர்களை நேசிக்கிறேன், சிறிய அப்பாவிப் பிள்ளைகள். 66 நான் நினைத்தேன்... அங்கே அவர்கள் பிற்பகல் கூட்டம் நடத்தியபோது, திரு. பாக்ஸ்டர் மற்றும் அவர்கள் செய்வார்கள்; பிற்பகல் கூட்டத்திற்காக மக்கள் அனைவரும் அங்கே கீழே இருப்பார்கள், சிறு பிள்ளைகள் தெருவில் இருப்பார்கள். நான் அந்தப் பழைய பணத்தில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு அங்கே கீழே சென்று இந்த மிட்டாய்களை (candy) வாங்குவேன். மிட்டாய் வாங்க எனக்குப் பின்னால் ஒரு நகரத் தெரு முழுவதும் குழந்தைகள் வரிசையாகப் பின்தொடர்வார்கள். உங்களுக்குத் தெரியும், நான் அதை அந்தச் சிறியவர்களிடம் கொடுப்பேன், அவர்களின் சிறிய காதுகளைப் பிடித்து, உங்களுக்குத் தெரியும், அவர்களின் சிறிய மூக்கை இழுப்பேன். உங்களுக்குத் தெரியும், அதுபோல நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களால் பேச முடியவில்லை; அதாவது அவர்களால் தங்கள் மொழியைப் பேச முடிந்தது, ஆனால் என்னால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் பெரியவர்கள் வருவதை நான் பார்த்தால்; நான் மூலையில் நழுவிச் சென்று ஹோட்டலுக்குள் திரும்பி விடுவேன், உங்களுக்குத் தெரியும். இப்படியாக, ஒரு சிறந்த நேரம்... அன்று இரவு உள்ளே செல்லும்போது, கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டது, தங்கும் விடுதியிலிருந்து ஒரு சிறிய ஃபின்னிஷ் சிறுமி வெளியே வந்தாள்; அவள் ஊன்றுகோல்களை வைத்திருந்தாள். நான் அவளைப் பார்த்தேன், அவள் - மிகவும் கூச்சசுபாவமுள்ளவளாகத் தெரிந்தாள். நான் அந்தச் சிறியவளைப் பார்த்தேன். "தெருவில் காணப்பட்டால், அருகில் செல்லவோ அல்லது வேறெதற்கோ போகக் கூடாது," என்று அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது. ஓ, அது என்னை வருத்தப்பட வைக்கிறது. ஆனால் அது எப்படி என்று உங்களுக்குத் தெரியும்; அது ஒரு நெரிசல், எனவே அவர்கள் அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது. 67 எனவே நான் பார்த்தேன், அவள் அங்கே நின்றுகொண்டிருந்தாள். அவள் இருந்த விதத்தை நான் பார்த்தேன். ஒரு கால் மற்றதை விடச் சற்று குட்டையாக இருந்தது. இந்தக் கால் எதற்கும் பயன்படாமல் இருந்தது. அவள் ஒரு - ஒரு - ஒரு தாங்கி (brace) போட்டிருந்தாள், அது அவள் காலணியின் (shoe) மேல் சென்று, இடுப்பு வரை வந்து சுற்றியிருந்தது, இந்த வழியில் ஒரு தாங்கி சுற்றியிருந்தது, அவளது காலணியின் கால்விரல் பகுதியில், ஒரு கொக்கி (snap) வைத்திருந்தாள், ஒரு தோல் பட்டை மேலே ஓடி இங்கே தாங்கியின் பின்புறத்தைப் பிடித்திருந்தது. அவள் நடக்கப் போகும்போது, அவள் தன் சிறிய ஊன்றுகோல்களை வெளியே வைப்பாள், இந்தத் தோல் பட்டையை எடுப்பாள்; அது அந்தக் காலை உயர்த்தும், அதை வெளியே வைப்பாள்; இந்தத் தாங்கி அது கீழே விழாதபடிப் பிடித்துக்கொள்ளும், அவள் அப்படித்தான் நடந்தாள். அவள் தன் சிறிய காலை உயர்த்தி, வெளியே வைத்து நடப்பாள். இப்போது, ஒரு கணம் கவனியுங்கள். இங்கே உள்ள ஒவ்வொரு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு சிறு குழந்தை உங்களுக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும். அந்தச் சிறியவளைப் பார்க்கும்போது, இப்போது என் சிறிய ரெபேக்காவின் அதே வயது இருக்கும். நான் அவளைப் பார்த்தேன்; அந்தக் குழந்தை என்னிடம் வர விரும்புவதை நான் அறிந்தேன். ஒரு அப்பாவாக அல்லது அம்மாவாக உங்களிடம் பேசுவதற்கு நான் இப்போது என் நிலையைத் தாழ்த்திக்கொள்கிறேன். அந்தக் குழந்தை என்னிடம் வர விரும்புகிறாள் என்பதை நான் அறிந்தேன், நான் சொன்னேன், "நீ என்னைப் பார்க்க வேண்டுமா, செல்லமே?" நிச்சயமாக நான் சொன்னது அவளுக்குப் புரியவில்லை. அந்த ஃபின்னிஷ் போர்வீரன், "ம்ம்ம்ம், ம்ம்ம்ம், ம்ம்ம்ம்," என்றான். நான் சொன்னேன், "ஒரு நிமிடம் இருங்கள்." 68 நான் அவளை மீண்டும் பார்த்தேன்; அவள் தன் சிறிய தலையை உயர்த்தினாள், அவளது சிறிய கத்தரிக்கப்படாத தலைமுடி மற்றும் அவளது சிறிய பாவாடைகள் மிகவும் தாழ்வாகவும் கிழிந்தும் தொங்கிக் கொண்டிருந்தன; அவள் ஒரு சிறிய ஃபின்னிஷ் போர்க்கால அனாதை என்பதைக் கண்டு பிடித்தேன். அவளுக்கு அப்பாவோ அம்மாவோ இல்லை, அவள் ஒரு கூடாரத்தில் வசித்து வந்தாள். ரஷ்யர்கள் எல்லை தாண்டி வந்தபோது போரில் அவளுடைய அப்பாவையும் அம்மா வையும் கொன்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு அது தெரியாது. ஆனால் அவளுடைய சிறிய கிழிந்த ஆடைகளை நான் பார்த்தேன், அவள் தன் சிறிய தலையை உயர்த்தினாள், அவளுடைய சிறிய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது, அவளுடைய சிறிய குழந்தை நீலக் கண்கள். நான் சொன்னேன், "நீ என்னைப் பார்க்க வேண்டுமா, செல்லமே?" நான் இதே கோட்டு சூட் (suit) அணிந்திருந்தேன். இந்தச் சூட் எனக்குக் கொடுக்கப் பட்டது...?... அவள் அப்படி என்னைப் பார்த்தாள். நான் என்ன சொல்கிறேன் என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை; நான் அவளுக்கு அப்படிச் சைகை காட்டினேன். சரி, முதலில் அவள் பயந்தது போல நடித்தாள், பின்னர் அவள் தன் சிறிய ஊன்றுகோலை வெளியே வைத்து, தன் சிறிய தோளை உயர்த்தினாள். நான் இப்படியே அசையாமல் நின்று அந்தக் குழந்தையைப் பார்த்தேன். நான் கல்நெஞ்சக்காரன் போல நடிக்கலாம், ஆனால் எனக்கு - எனக்கு ஒரு இதயம் இருக்கிறது. 69 அந்தச் சிறியவள் என் அருகில் வந்தபோது, அவள் தன் சிறிய ஊன்றுகோலைக் கீழே வைத்தாள். நான் நினைத்தேன், "அவள் என்ன செய்யப் போகிறாள், அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நான் பார்க்கப் போகிறேன்." அவள் தன் சிறிய ஊன்றுகோலை அப்படி என் பக்கத்தில் கீழே வைத்தாள், அவள் இந்த பாக்கெட்டை இங்கே பிடித்தாள். அவள் என் கோட்டை உயர்த்தி, என் கோட்டை முத்தமிட்டாள், அதைக் கீழே விட்டாள். நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று நான் பார்க்கிறேன். அவள் தன் சிறிய ஊன்றுகோல்களை வெளியே வைத்து, தன் சிறிய பாவாடைகளை எடுத்து அப்படி வெளியே இழுத்தாள், சிறிய ஃபின்னிஷ் மக்களுக்கு மிகவும் உரித்தான பாணியில், அவள், "கீட்டோஸ் (Kiitos)," என்று சொன்னாள். "கீட்டோஸ்," என்றால் "நன்றி" என்று அர்த்தம். நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நான் அப்படியே சத்தமிட்டு அழ வேண்டும் போல உணர்ந்தேன். நான் உள்ளே வருவதற்காக அவர்கள் அங்கே "விசுவாசிக்க மட்டுமே (Only Believe)" பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன், "அவள் சிறிய இருதயத்தை ஆசீர்வதியும்." நான் பார்த்தபோது, ஒரு தரிசனத்தைக் கண்டேன். நிச்சயமாக, நான் உலகின் மிகப் பெரிய மாய்மாலக்காரனாக இருந்திருந்தாலும், தேவன் அவள் விசுவாசத் தைக் கனப்படுத்தியிருப்பார். அது சரி. நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன், அங்கே அவள் தாங்கிகள் இல்லாமல் நடந்து சென்றாள். நான் சொன்னேன், "செல்லமே, கவனி," ஓ, என், நான் சொன்னேன், "அவளுக்கு அதை எப்படித் தெரியப்படுத்துவது?" நான் சொன்னேன், "கண்ணே, இயேசு உன்னைச் சுகமாக்குகிறார். உனக்கு - உனக்குப் புரிகிறதா செல்லமே? நீ - நீ..." 70 அப்போது அந்தச் சிறிய போர்வீரன்... அந்தக் கூட்டத்திலிருந்து யாரோ வெளியே வந்தார்கள், "ப்ளா, ப்ளா, ப்ளா," என்று என் கையைப் பிடித்தார்கள், நான் போய்விட்டேன். நான் நினைத்தேன், "சரி, தேவன் எப்போதாவது அவளுக்குத் தெரியப்படுத்துவார்." நான் உள்ளே சென்றேன், அங்கே - கர்த்தர் பார்வையாளர்கள் மத்தியில் அசைவாடி, அங்கிருந்த மக்களுக்கு அவர்களின் காரியங்கள் எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கிய பிறகு. அவர்கள் சுகம் பெற்றுக்கொண்டார்கள் என்று எழும்ப ஆரம்பித்தார்கள். பின்னர் ஃபின்னிஷ் மக்கள் அனைவருக்கும் ஜெப அட்டைகளை (prayer cards) விநியோகித்தபோது, அவர்கள் சிலரை அழைத்தார்கள். பின்னர் நான் சொன்னேன், "சரி," என் சகோதரன் என்னிடம் வந்து, என் பக்கங்களில் மெதுவாகத் தட்டி, "அது போதும், பில்லி; அது போதும், நீ போக வேண்டும்," என்றான். திரு. பாக்ஸ்டர் என் கையைப் பிடித்தார்; நான் சொன்னேன், "நான் ஏவப்படுவதாக உணருகிறேன்; இன்னும் சிலரை மட்டும் அழைப்போம்." நான் சொன்னேன், "ஐந்து அல்லது ஆறு பேருக்கு மேல் அழைக்க வேண்டாம், சும்மா... அதைச் செய்ய நான் ஏவப்படுவதாக உணருகிறேன், சகோதரன் பாக்ஸ்டர்." அவர் சொன்னார், "சரி, அவர்களை அழையுங்கள்." 71 நான் சொன்னேன், "இன்னும் சிலர், அடுத்த ஐந்து பேர் மேலே வரட்டும்," அதுபோல. அவர்கள் அதை அங்கே மொழி பெயர்த்தார்கள். தேவனுடைய இறையாண்மை மிகுந்த கிருபையினால், அவள்தான் அடுத்த ஆளாக இருந்தாள். இங்கே அவள் வந்தாள்; அவர்கள் அவளை அவள் இருந்த அறையிலிருந்து வெளியே அந்தச் சிறிய இடத்திலிருந்து கொண்டு வந்தார்கள், ஆயிரக் கணக்கான மக்களுக்கு முன்னால் அவளை மேடைக்குக் கொண்டு வந்தார்கள். நான் சொன்னேன், "திருமதி. ஐசக்‌சன் (Mrs. Isaacson), நான் சொல்வதைச் சொல்லுங்கள்." "சரி, சகோதரன் பிரான்ஹாம்," என்றார். நான் சொன்னேன், "செல்லமே, அறையில் வெளியே இருந்த சிறுமி நீதானே." "ஆம்," அவள்தான். நான் சொன்னேன், "இயேசு உன்னைச் சுகப்படுத்தினார், கண்ணே. நான் ஏற்கனவே தரிசனத்தைக் கண்டேன்; நீ சுகமடைந்து விட்டாய். இப்போது, நீ அங்கே சென்று அங்கிருக்கும் ஆண்களை அந்தத் தாங்கிகளைக் கழற்றச் சொல், நீ அதைச் செய்த பிறகு உன் சிறிய கையை இடுப்பில் வை, உன் கால் எவ்வளவு குட்டையாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் உன் சிறிய காலை நழுவ விடு, பின்னர் வந்து சகோதரன் பிரான்ஹாமிடம் காட்டு." சரி, அவள் அங்கே சென்றாள். மொழிபெயர்ப்பாளர் அதை மொழிபெயர்த்து, அவளை அங்கே அழைத்துச் சென்றபோது, நான் அடுத்த நபரை அழைத்தேன். தரிசனம் விலகிய அதே நேரத்தில், இங்கே அவள் ஊன்று கோலைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டும், தாங்கிகளைத் தலைக்கு மேல் தூக்கிப்பிடித்துக்கொண்டும், மேடையின் குறுக்கே ஓடி, குதித்துக்கொண்டும், தேவனைத் துதித்துக்கொண்டும் வந்தாள். தேவன்... 72 நமக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் கொடுக்க முடியுமா? நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். செய்வீர்களா? சிரமப்படுகிறீர்கள், அது வெப்பமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நீங்கள் - நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால் மற்றுமொரு சிறு குழந்தையைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இது நீளமானது, ஆனால் ஒரு நிமிடம். மற்றொரு சிறு பையன் சாகும் நிலையில் கிடந்தான். சேவையின் இரண்டாவது இரவில், இது இருந்தது... ஓ, அந்த மற்றொரு பையனின் சிறிய தாய் பதற்றமாக இருந்தாள். அவர்கள் என்னை இரவில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் என்னை அவர் மேலாகத் தான் இழுத்துச் செல்ல வேண்டி யிருந்தது. அவள் ஃபின்னிஷ் மொழியில் அலறிக் கொண்டிருந்தாள், இருபதுகளில் இருந்த ஒரு இளம் தாய். எனவே நான் அறைக்குச் சென்றேன், ஏனென்றால் அவருக்காக நான் நிற்பது விதிகளுக்கு எதிரானது. நான் மேலே சென்றேன். 73 அன்று இரவு நான் உள்ளே சென்றபோது அந்தச் சிறிய தாய் மீது இழுத்துச் செல்லப் பட்டேன். அன்று, அதற்கு முந்தைய நாள், திருமதி. ஐசக்‌சன் சொன்னார், "சகோதரன் பிரான்ஹாம், அவருக்கு ஒரு நிமிடம் கொடுக்க முடியுமா." நான் கூடத்தில் (hall) இருந்தேன். நான் சொன்னேன், "சரி, அவரை மேலே அழைத்து வாருங்கள்." அவரும் அவர் கணவரும் மேலே வந்தார்கள். நான் சொன்னேன், "இப்போது, நீங்கள் எனக்காக மொழிபெயருங்கள்." அவள், அந்தச் சிறிய தாய் பதற்றத்துடன், உங்களுக்குத் தெரியும், தன் சிறிய கைகளைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். பெண்களே, அவர்கள் உடுத்துவது போல நீங்கள் உடுத்த வேண்டி யிருந்தால் எப்படி இருக்கும்? கோடைக் காலத்தில், அது போன்ற மிகப் பெரிய தடிமனான ஆடைகள், மற்றும் பெரிய பூட்ஸ் (boots) அணிந்து வைக்கோல் அள்ளுவார்கள் (pitch hay). உங்கள் வீட்டு முற்றத்தில் இந்தச் சிறிய பழைய தேவபக்தியற்ற ஆடைகளை அணிவதைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள். பாருங்கள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? ஆனால் உண்மையில் நேர்மையான, அருமையான மக்கள்... 74 அங்கே அவள் நின்றுகொண்டிருந்தாள், சிறிய முகம் மற்றும் அவளுடைய வெள்ளை முடி அப்படிப் பின்னோக்கி இழுக்கப் பட்டிருந்தது. அவள் எதையோ தன்னால் முடிந்த வரை வேகமாக உளறிக் கொண்டி ருந்தாள். நான் சொன்னேன், "திருமதி. ஐசக்..." "அவள் தன் சிறு பையனை நீங்கள் எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறாள்," என்று சொன்னார். நான் சொன்னேன், "சகோதரி, நான் - அதைச் செய்ய எனக்கு வழி இல்லை." நான் சொன்னேன், "அது..." அவள் சொன்னாள், "சரி, என் சிறு பையன் இறக்கவில்லை, மற்றச் சிறு பையன் இறந்து விட்டான், நீங்கள் அவனை எழுப்பினீர்கள்." நான் சொன்னேன், "இல்லை, அன்பான சகோதரி, அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை." நான் சொன்னேன், "தாய்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேவன் அந்தத் தரிசனத்தைக் காண்பித்தார். அது புத்தகங்களிலும் எல்லாவற்றிலும் எழுதப்பட்டிருக்கிறது." "சரி," அவள் சொன்னாள், "என் சிறு பையனுக்காகப் போய் ஒரு தரிசனம் பாருங்கள்." சரி, அது ஒரு தாயின் உயிர். நான் சொன்னேன், "சகோதரி, அது மிகவும் அருமையானது, ஆனால் என்னால் தரிசனங் களைப் பார்க்க முடியாது. தேவன் அவற்றைக் காட்ட வேண்டும்; அது நான் விரும்புவது அல்ல; அவர் விரும்புவது." அவள் சொன்னாள், "சரி..." 75 நான் சொன்னேன், "அது கிடக்கட்டும், நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்களா?" "இல்லை." சரி, நான் சொன்னேன், "பாருங்கள், நீங்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால், உங்கள் சிறு பையன் இறந்தால், அவன் பரலோகத்திற்குச் செல்வான்; அவன் மிகச் சிறிய பையன், வெறும் ஆறு வயது அல்லது ஐந்து வயது," என்று நினைக்கிறேன். நான் சொன்னேன், "அவன் பரலோகத்திற்குச் செல்வான். நீங்கள் உங்கள் பாவங்களில் மரித்தால், அவன் இருக்கும் இடத்திற்கு உங்களால் செல்ல முடியாது. ஆனால் தேவன் அவனை எடுத்துக்கொண்டு, நீங்கள் ஒரு கிறிஸ்தவராக மாறினால், நீங்கள் சென்று அவனுடன் வாழலாம்; அங்கே ஒருபோதும் விபத்து ஏற்படாது." நான் சொன்னேன், "அப்படியானால் பாருங்கள், என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி வேண்டுமென்றால், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்." "ஆம்." நான் சொன்னேன், "சரி, இப்போது பாருங்கள். நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, நீங்கள் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழப்போவதாகச் சொல்லக்கூடாது, ஒருவேளை நீங்கள் தேவனுடைய பார்வையில் கிருபையைப் பெறலாம்." சரி, அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை, எனவே அதைச் செய்வதுதான் சரியான காரியம் என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் தரையில் மண்டியிட்டார்கள், என்ன செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். அவர்கள் எழுந்தார்கள், இப்போது சும்மா ஒரு பாசாங்கு (make-up) அல்ல; அவர்கள் உண்மையிலேயே ஜெபித்து அழுதார்கள், சிறிய தாய் அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள், அவர்கள் ஒருவருக்கொருவர் அழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் எழுந்தார்கள், நான் சொன்னேன், "இப்போது, நீங்கள் செல்லுங்கள், தேவன் அநேகமாக உங்கள் குழந்தைக்கு ஏதாவது செய்வார்." 76 அவள் சொன்னாள், "வாருங்கள், மருத்துவ மனைக்குப் போகலாம்." நான் சொன்னேன், "இல்லை, அது விதிகளுக்கு எதிரானது. பாருங்கள், நான் உங்கள் குழந்தையைப் பார்க்கச் சென்று, பின்னர் வேறொரு குழந்தையைப் பார்க்கச் செல்லாமல் இருந்தால், அது அந்தத் தாயை வருத்தமடையச் செய்யும்." பாருங்கள்? நான் சொன்னேன், "நான் குழந்தைக்காக ஜெபிக் கிறேன். ஓ, சரி," நான் சொன்னேன், "நான் விதிமுறைகளை மீற (violate rules) வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்கள்; நான் அதைச் செய்யக்கூடாது." அவள் சொன்னாள், "சரி..." நான் சொன்னேன், "தேவன் எனக்கு ஒரு தரிசனம் காட்டினால், நான் உங்களுக்குச் சொல்வேன்." அவள் சொன்னாள், "இப்போது, போங்கள், தரிசனம் பாருங்கள்." நான் சொன்னேன், "சரி, என்னால் அதைச் செய்ய முடியாது, சகோதரி." அவள் சொன்னாள், "நான் காத்திருக்கிறேன்; நீங்கள் - நீங்கள் போய் தரிசனம் பாருங்கள்; நான் காத்திருப்பேன்." நான் சொன்னேன் - நான் சொன்னேன், "இல்லை, சகோதரி, இப்போது, அது அப்படி இல்லை. அவர் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் காட்டாமல் போகலாம். நீங்கள் வீட்டிற்குச் சென்று விசுவாசியுங்கள். 77 சரி, கடைசியாகத் திருமதி. ஐசக்‌சன் அவரை வெளியேற்றினார், தேவன் ஒரு தரிசனம் கொடுத்தால், திரும்ப அழைப்பதாகச் சொன் னார். அவள் சென்று பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது, முதல் காரியம் உங்க ளுக்குத் தெரியும் தொலைபேசி அடித்தது... இங்கே யாராவது பின்லாந்தில், அல்லது ஃபின்னிஷ் மக்கள் யாராவது இருந்திருக்கிறீர்களா? இது உங்களை புண்படுத்தாது என்று நம்புகிறேன், ஏனென்றால் அவர்கள் உலகின் மிகச்சிறந்த மக்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அதற்கு ஒரு சிறிய குச்சி இருக்கிறது, அதை நீங்கள் இங்கே வைத்துச் சுழற்ற (crank) வேண்டும். ஆகவே அந்தப் பெண்மணி அழைத்தார், "சகோதரன் பிரான்ஹாம் தரிசனம் பார்த்தாரா?" "இல்லை." மீண்டும் சுமார் பத்து நிமிடங்கள் கழித்து, மீண்டும் சுழற்றினார்கள், "சகோதரன் பிரான்ஹாம் தரிசனம் பார்த்தாரா?" "இல்லை." நாங்கள் சேவைக்குச் செல்லும் வரை அப்படியே இருந்தது, அன்று இரவு அந்தச் சிறுமி சுகமடைந்தாள். நான் உள்ளே வந்தேன்... இந்த வேதாகமம் அல்ல, வேறொரு வேதாகமம்... நான் மேலே நடந்தேன், என் சகோதரன்... 78 இப்போது, கனடா நண்பர்களே, வருத்தப்பட வேண்டாம். ஆனால் ஒருமுறை கனடாவில் எங்களுக்குச் சில மோசமான மிட்டாய்கள் (bad candy) கிடைத்தன; போருக்குப் பிறகு அதில் போடுவதற்குத் தேவையான பொருட்கள் அவர்களிடம் இல்லை. ஹோவர்ட் என்னிடம் சொன்னான், "பில்லி, கனடாவில் மிட்டாய் சப்பையாக (flat) இருக்கிறது என்று சொல்கிறாயே, இதைச் சுவைத்துப் பார்," என்றான். அவன் எனக்கு இரண்டு சிறிய மிட்டாய் துண்டுகளைக் கொடுத்தான். சரி, அவர்கள் அனைவரும் அறைகளுக்குச் சென்றார்கள், நான் என் அறைக்குச் சென்றேன். நான் என் அறையில் நின்று கொண்டிருந்தேன், அங்கே ஒரு மிகப் பெரிய பழைய சலவைக் கல் மேசை (marble table) இருந்தது, நான் வேதாகமத்தை என் இருதயத்தின் மேல் வைத்திருந்தேன். அந்த நேரத்தில், மே மாதத்தில், சூரியன் மறைவதே இல்லை. அது நள்ளிரவு சூரியன் உதிக்கும் தேசம். ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது; முழு வருடமும் ஒரே பகல் மற்றும் இரவாகிறது. எனவே நீங்கள் தெருவில் செய்தித்தாளை வாசிக்கலாம், ஏறக்குறைய. எனவே நான் கிழக்குப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், என் கையை ஜன்னலை நோக்கி இப்படி உயர்த்தியிருந்தேன். நான் சொன்னேன், "ஓ மகத்தான யேகோவா, ஒரு நாள் நீர் இயேசுவை அனுப்புவீர்; அவர் கிழக்கு வானத்திலிருந்து வருவார். எவ்வளவு அற்புத மான நேரம்." போர்வீரர்கள் மற்றும் அனை வரும் பூங்காவின் வழியாகச் சென்று கொண்டி ருந்தார்கள், அன்று இரவு நடந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள், நான் நினைத்தேன், "அது எவ்வளவு அருமையாக இருக்கிறது? அவர்களைப் பாருங்கள், வெறும் தாழ்மையான கிறிஸ்தவ மக்கள்." அவர்கள் பேசிக்கொண்டே செல்வதை, நான் சொன்னேன், "ஓ இயேசுவே, நீர் அற்புதமானவர்." அப்போது ஏதோ ஒன்று போவதைக் கேட்டேன் [சகோதரன் பிரான்ஹாம் காலைத் தரையில் தட்டுகிறார்] எனக்கு முன்னால் கீழே பார்த்தேன், அங்கே ஒரு பெரிய உயரமான பூச்சாடி (vase) இருந்தது, சுமார் இவ்வளவு பெரியது, அங்கே கீழே வைக்கப்பட்டிருந்தது, அதில் இரண்டு - நாங்கள் அவற்றை ஈஸ்டர் பூக்கள் (Easter flowers) என்று அழைப்போம். நீங்கள் அவற்றை டாஃபோடில் (daffodil) என்று அழைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அல்லது எது - அந்தச் சிறிய பழைய காலத்து வானொலி அல்லது போனோகிராஃப் ஒலி பெருக்கி குழாய்கள் (phonograph horns) போலத் தோற்றமளிக்கும், உங்களுக்குத் தெரியும், அவற்றில் சில மஞ்சள் மற்றும் சில வெள்ளை. அது டாஃபோடில்ஸா, அம்மா, அது ஜான்குவில்ஸா (jonquils) அல்லது டாஃபா-ஜான்குவில்ஸ். எனக்கு அவற்றைப் பற்றி அதிகம் தெரியாது. எப்படியிருந்தாலும், அவை சிறியவை - நம் நாட்டில் அவற்றை ஈஸ்டர் பூக்கள் என்று அழைக்கிறோம். 79 அவை அங்கே அமர்ந்திருந்தன, அவற்றில் ஒன்று தெற்கே நோக்கியும், ஒன்று வடக்கே நோக்கியும் சாய்ந்திருந்தன. தெற்கே நோக்கிச் சாய்ந்திருந்த ஒன்று முழுவதுமாகக் கீழே சாய்ந்திருந்தது; அல்லது வடக்கே நோக்கி இருந்தது முழுவதுமாகக் கீழே சாய்ந்திருந்தது. தெற்கே நோக்கி இருந்தது பாதியளவு கீழே சாய்ந்திருந்தது. நான் நினைத்தேன், "சரி இப்போது, ஒரு நிமிடத்திற்கு முன்பு அவை அங்கே இல்லை. அவை எங்கிருந்து வந்தன?" நான் இப்படியே நின்றுகொண்டிருந்தேன். இப்போது, நினைவில் கொள்ளுங்கள், ஒரு நாள் நான் உங்கள் அனைவரையும் மகிமையில் சந்திக்க வேண்டும். நான் என் தலையைத் திருப்பியபோது, அங்கே அவர் நின்றார், அங்கே நின்றார், அந்தத் தூதன், பெரிய மனிதர், கிறிஸ்துவைப் போல அல்ல, அவர் மிகப் பெரிய மனிதர், கருமையான தோல், பழுப்பு நிறம், தோள் வரை நீண்ட கருமையான முடி, வெள்ளை அங்கி அணிந்திருந்தார், கைகள் இப்படி மடிக்கப் பட்டிருந்தன, அவர் எப்போதும்... அதனால்தான் நான் மக்களை என் வலது பக்கத்திற்குக் கொண்டு வருகிறேன், மேடைக்குக் கொண்டு வருகிறேன்; அது அவரைக் கடந்து முதலில் வருகிறது. 80 எனவே நான் அங்கே நிற்பதைப் பார்த்தேன், அங்கே அவர் நின்றார். இப்போது, நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று கற்பனை செய்து பார்க்கலாம். என்னால் மூச்சுவிடக் கூட முடியவில்லை. நான் மீண்டும் உற்றுப் பார்த்தேன்; நான் திரும்பிப் பார்த்தேன். நான் என் விரலைக் கடிக்க ஆரம்பித்தேன். நான் மீண்டும் பார்த்தேன்; அவர் என்னைப் பார்த்தார், "உன் சகோதரன் உனக்கு என்ன கொடுத்தான்," என்று கேட்டார். நான் சொன்னேன், "இந்த இரண்டு மிட்டாய் துண்டுகள், ஐயா." அவர் சொன்னார், "நீ ஏன் அவற்றைச் சாப்பிடக்கூடாது?" சரி, நான் அவற்றில் ஒன்றை உடைத்து என் வாயில் போட்டேன்; மெல்ல ஆரம்பித்தேன், சுவை நன்றாக இருந்தது. நான் அதை விழுங்கினேன். நான் அதை விழுங்கியபோது, கீழே சாய்ந்திருந்த ஒன்று; வடக்கே நோக்கி இருந்த ஈஸ்டர் பூ... இப்போது, அவை பூகோள ரீதியாக அந்தக் குழந்தைகள் விழுந்த அதே திசையில் இருந்தன. வடக்கே நோக்கி இருந்தது, "வ்ஹூவ்! (Whew)" என்று மேலே எழுந்து நின்றது. நான் நினைத்தேன், "சரி, இப்போது அது..." நான் சொன்னேன், "அதன் அர்த்தம் என்ன?" அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நான் அந்தப் பூக்களை மீண்டும் பார்த்தேன். நான் அவரைச் சுற்றிலும் பார்த்தேன்; அவர் சொன்னார், "மற்றொன்றைச் சாப்பிடு." ஏன், நான் அதை என் வாயில் போட்டேன், நான் என் வாயில் வைத்ததிலேயே மிகவும் கசப்பான ஒன்று (bitterest thing) அது. ஓ, என், அப்படியொரு சுவை. நான் அதை அப்படி வெளியே எடுத்தேன். நான் - நான் அந்தப் பூவைப் பார்த்தேன், இப்போது தெற்கே நோக்கிச் சாய்ந்திருந்தது, அது "பியூ, பியூ, பியூ," என்று போய்க்கொண்டிருந்தது, ஒரு இதயத் துடிப்பு போலக் கீழே தாழ்ந்து கொண்டே சென்றது, "பியூ, பியூ, பியூ," என்று போனது. அவர் சொன்னார், "அதைச் சாப்பிடத் தவறினால் மற்றக் குழந்தையும் இறந்துவிடும்." 81 இப்போது, அதன் அர்த்தம் என்ன, மதகுருமார்களே என்னிடம் கேட்காதீர்கள்; எனக்குத் தெரியாது. நான் அதை உடனே என் வாயில் போட்டேன், மூச்சைப் பிடித்துக் கொண்டு, மிக வேகமாக மென்று, விழுங்கினேன். நான் அந்த முறை அதை விழுங்கியபோது, தெற்கே நோக்கிச் சாய்ந்திருந்த ஒன்று "வ்ஹூவ்!" என்று சென்று மற்றொன்றின் அருகில் எழுந்து நின்றது. அவர் சொன்னார், "போய் அந்தத் தாயிடம் சொல், கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் குழந்தை பிழைக்கும்." நான் கூடத்திற்குள் (hall) ஓடினேன், மிக வேகமாக, என் குரல்வளம் முழுவதையும் பயன்படுத்தி அலற ஆரம்பித்தேன், இங்கே சகோதரன் பாக்ஸ்டர் பைஜாமாவுடன் வந்தார், சகோதரன் மூர் கூடத்தில் ஓடி வந்தார்; நான் சொன்னேன், "திருமதி. ஐசக்‌சனை உடனே அழையுங்கள், மிக வேகமாக." எனவே அவர்கள் போய் அவரை அழைத்து வந்தார்கள். நான் சொன்னேன், "தாயை அழைத்துச் சொல்லுங்கள், கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் ஜெபங்கள் கேட்கப்பட்டன." 82 ஓ, என்ன ஒரு உணர்வு. அவள் வீட்டிற்கு அழைத்தாள். குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பெண் (babysitter) சொன்னார், "தாயும் தந்தையும் மருத்துவ மனைக்கு அழைக்கப் பட்டிருக்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும்..." ஏன், அது ஒரு மருத்துவமனை போலச் சிறிய வீடு. அவர் சொன்னார், "அவர்கள் அங்கே அழைக்கப் பட்டிருக்கிறார்கள்; குழந்தை சாகும் நிலையில் இருக்கிறது." அவர் சொன்னார், "அவர்கள் குழந்தையைக் கழுவக் கூட இல்லை, ஏனென்றால் முதுகு அவ்வளவு நசுங்கியிருந்தது." அவர் சொன்னார், "குழந்தை சாகும் நிலையில் இருக்கிறது, அவர்கள் அழைக்கப் பட்டிருக்கிறார்கள், அவர் ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பெண்ணாக அங்கே இருந்தார்." திருமதி. ஐசக்‌சன் சரியா வந்தார். நான் சொன்னேன், "அதை வைத்துவிட்டு மருத்துவ மனைக்கு அழையுங்கள்." எனவே அவர் வைத்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்தார், இணைப்பு கிடைத்தது, அவர் தாயைத் தொலைபேசியில் பிடித்தார். அவர் சொன்னார் - அந்தப் பெண் தன் குரல்வளம் முழுவதையும் பயன்படுத்தி அலறிக் கொண்டிருந்தார், திருமதி. ஐசக்‌சன் சொன்னார், "இப்போது, பார், அன்பே, அமைதியாக இரு, ஒரு நிமிடம்; நான் சொல்வதைக் கேட்கும் வரை அமைதியாக இரு." நான் - திருமதி. ஐசக்‌சன், சைகைகள் செய்வதை நான் கேட்க முடிந்தது, அவர் சொன்னார், "நான் அவரை அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன்; அவர் அலறுகிறார்." அவர் சொன்னார், "ஒருவேளை குழந்தை இறந்திருக்கலாம்." நான் சொன்னேன், "அவன் இறந்தி ருந்தாலும் அல்லது எதுவானாலும் கவலைப்பட வேண்டாம் என்று அவரிடம் சொல்லுங்கள், அவன் பிழைக்கப் போகிறான்." 83 எனவே அவர் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தார். அவர் சொன்னார், "இப்போது, பாருங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்." பாருங்கள்? அவர் சொன்னார், "சகோதரன் பிரான்ஹாம் இப்போதுதான் ஒரு பூ மேலே எழும்புவதைப் பற்றி ஒரு தரிசனம் கண்டார்." அவர் சொன்னார், "கர்த்தர் உரைக்கிறதாவது, உங்கள் குழந்தை பிழைக்கப் போகிறான் என்று சொல்லச் சொன்னார்." அவள் சுயநினைவுக்கு வந்தபோது, பேசக்கூடிய நிலைக்கு வந்தபோது, அவள் சொன்னாள், "எனக்கு அது எவ்வளவு நன்றாகத் தெரியும்." அவள் சொன்னாள், "அவன் இப்போதுதான் சுயநினைவுக்கு வந்தான், நாங்கள் அவனைக் கழுவி இப்போது வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்." தேவன் ஜெபத்திற்குப் பதில் அளித்திருந்தார். இப்போது, பாருங்கள், அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்தக் குழந்தை சுகமடைந்ததில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அந்தத் தாயின் விசுவாசமுள்ள ஜெபம் தேவனுடைய பார்வையில் கிருபையைப் பெற்றது. தேவன் என்னிடம் பேசி, "போய், அவளிடம் சொல்," என்றார். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? அது உங்களைப் பலவீனப்படுத்துவதில்லை; அது உங்களைச் சத்தமிட வைக்கிறது. அந்தக் காரியங்கள் உண்மையானவை. பரலோகத்திலுள்ள தேவ னுக்கு அது தெரியும். நீங்கள் அவர்களுக்கு எழுத விரும்பினால் அவர்களின் பெயர்களும் முகவரிகளும் அங்கே இருக்கின்றன. 84 அவர் அதே மகத்தான இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஆமென். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அவருடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. அவர் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது, அவர் அதை இறையாண்மையுடன் அளிக்கிறார்; எவர் விரும்புகிறாரோ, எவரால் அதைப் பெற்றுக் கொள்ள முடியுமோ, விசுவாசிக்க முடியுமோ, அதையே செயல்படுத்த முடியுமோ அவர்களுக்கானது அது. அதே முடிவுகள் ஒவ்வொரு முறையும் வரும். ஆமென். ஓ, நான் உணர்ச்சிவசப்படுகிறேன். ஒரு ஏழை பாவி, நரகத்தை நோக்கிச் செல்பவர் என்று அறிவது... உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கப் போதுமானது. மறுநாள் என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வெளியே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி எனக்கு ஒரு சிறிய மரப்பலகையைக் கொண்டு வந்தார், அதில், "சூரிய அஸ்தமனம் மற்றும் மாலை நட்சத்திரம், மற்றும் எனக்காய் ஒரு தெளிவான அழைப்பு," என்று எழுதியிருந்தது. நான் வீட்டிற்குள் ஒளிந்துகொண்டிருந்தேன், அங்கே அதிகமான மக்கள் சுற்றிலும் இருந்தார்கள். நான் சொன்னேன், "அன்பே, அதை நினைத்துப் பார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை குடித்துக்கொண்டிருப்பார்." நான் சொன்னேன், "இதை நினைத்துப் பார், நான் நகரத்திற்குச் சென்று ஒருவரிடம் பேசுவேன்; நான் ஒரு பிரான்ஹாம் என்பதாலேயே அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள். என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை." நான் சொன்னேன், "இப்போது, நினைத்துப் பார்; சிறிது நேரம் அமைதி கிடைப்பதற்காக நான் எங்காவது வனாந்திரத்தில் ஒளிந்திருக்க வேண்டியிருக்கிறது." இதைச் செய்தது எது? என் கல்வியா? என்னிடம் அது இல்லை. இதைச் செய்தது எது? ஆளுமையா? என்னிடம் அது இல்லை. இதைச் செய்தது எது? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, கீழே இறங்கி வந்தார்: அற்புதம்! கிருபை, எத்துணை மதுரம்! என்னைப் போல் ஒரு பாவியை மீட்டதுவே! தொலைந்து போயிருந்தேன், இப்போது காணப்பட்டேன், குருடனாய் இருந்தேன், இப்போது காண்கிறேன். ஓ, நாம் அங்கே பத்தாயிரம் ஆண்டுகள் இருந்த பின்பும், சூரியனைப் போல் பிரகாசமாய் ஒளிவீசுவோம்; நாம் முதலில் ஆரம்பித்ததை விட, அவர் புகழைப் பாட நமக்குக் குறைந்த நாட்கள் ஒன்றும் இல்லை. 85 நித்திய யுகங்கள் உருண்டோடுகையில், மீட்பராகிய கிறிஸ்துவின் ஆட்டுக்குட்டி இன்னும் அவருடைய மக்களிடையே அறியப் படுவார், பெருங்கடல்கள் அழுது தீர்த்துத் தங்களைப் பாலைவனங்களாக மாற்றிக்கொண்ட பிறகும், பாவம் மிக அதிகமாகிக் குவிந்து சந்திரனை அதன் இடத்திலிருந்து அதிரச் செய்த பிறகும்; தேவனுடைய அன்பு இன்னும் நிலைத்திருக்கும். இன்று இரவு உயிரோடிருக்கும் கிறிஸ்து, மகிமையின்...?... தமது சிங்காச னத்தில் வீற்றிருக்கும்போதும் அதே இயேசு வாகவே இருப்பார். நித்தியம் முழுவதும் அவர் அப்படியே இருப்பார். ஓ, நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்; நான் அவரை நேசிக்கிறேன். 86 வெகு காலத்திற்கு முன்பு அல்ல, தெற்குப் பகுதியில் (Southland), ஒரு வயதான கருப்பின மனிதர் ஒரு இரவு ஒரு பழைய பாடல் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டார். அவர் மறுநாள் அடிமைகளிடம் சென்று சொல்லிக் கொண்டிருந்தார்; அவர் சொன்னார், "சகோதரர்களே, கிறிஸ்து என்னை விடுதலை யாக்கினார்." எனவே உரிமையாளர் வந்தார், அவர் சொன்னார், "மோஸ் (Mose), நீ என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாய்?" அவர் சொன்னார், "எஜமானே," சொன்னார், "அது உண்மை; நான் விடுதலையாகிவிட்டேன்." அவர் கேட்டார், "நீ விடுதலையாகிவிட்டாய் என்று யார் சொன்னது?" அவர் சொன்னார், "கிறிஸ்து என்னை விடுதலையாக்கினார், எஜமானே." அவர் சொன்னார், "மோஸ், நீ என் அலுவலகத்திற்கு வா; நான் உன்னைப் பார்க்க வேண்டும்." அவர் மேலே நடந்து சென்று அமர்ந்தார். அவர் சொன்னார், "இப்போது, அதை மீண்டும் சொல், மோஸ்." அவர் சொன்னார், "நான் நேற்று இரவு ஒரு ஜெபக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்." அவர் சொன்னார், "நான் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேன். நான் ஒரு பாவியாக இருந்தேன், எஜமானே." அவர் சொன்னார், "கிறிஸ்து பாவப்பிரமாணத்திலிருந்தும் மரணத் திலிருந்தும் என்னை விடுதலையாக்கினார்." அவர் கேட்டார், "நீ உண்மையாகத்தான் சொல்கிறாயா, மோஸ்?" அவர் சொன்னார், "ஆம், எஜமானே." அவர் சொன்னார், "நான் இன்று காலை கீழே சென்று பிரகடனத்தில் கையெழுத்திட்டு, உன்னை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை யாக்குவேன், அப்போது நீ போய் உன் சகோதரர்களுக்குப் பிரசங்கிக்கலாம்." அவர் சொன்னார், "நன்றி, எஜமானே." 87 வருடங்கள் கடந்தன. அவர் பிரசங்கித்தார். அவர் மரிக்கப்போகும் தறு வாயில் வந்தபோது, அவருடைய வெள்ளை இனச் சகோதரர்கள் அநேகர் கூடிவந்து, அவர் கோமா நிலைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் - சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் விழித்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தார், அவர் கேட்டார், "நான் இன்னும் போகவில்லையா?" அவர்கள் கேட்டார்கள், "மோஸ், நீ என்ன பார்த்தாய்?" அவர் சொன்னார், "நன்று, சகோதரர்களே," அவர் சொன்னார், "நான் வாசலுக்குள் நுழைந்தேன்." மேலும் அவர் சொன்னார், "நான் நின்று, அவரைப் பார்த்தேன்," அவர் சொன்னார், "நான் அவரைப் பார்த்தேன்." மேலும் அவர் சொன்னார், "ஒரு தூதன் வந்து, 'மோஸ், இங்கே வந்து உன் அங்கியை எடுத்துக்கொள், கிரீடத்தை எடுத்துக்கொள்,' என்று சொன்னார்." அவர் சொன்னார், "என்னோடு அங்கியையும் கிரீடத்தையும் பற்றிக் பேச வேண்டாம்; நான் செய்ய விரும்புவதெல்லாம் நின்று அவரைப் பார்ப்பது மட்டுமே." அதுதான் நம் அனைவரின் உணர்வு என்று நான் நினைக்கிறேன். எனக்கு அங்கறியும் கிரீடமும் வேண்டாம்; நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன். என் இரட்சிப்புக்காக அவர் குத்தப்பட்டார்; அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன், அவரே பாவம் மற்றும் மரண வாழ்விலிருந்து என்னை மீட்டுக்கொண்டார். நாம் ஜெபிப்போம். 88 பரலோகப் பிதாவே, மணிநேரங்கள் கடக்கின்றன; கிறிஸ்து இன்னும் உயிரோடி ருக்கிறார். ஓ, இயேசு கிறிஸ்துவை ஒரு மக்களுக்கு நாங்கள் எப்படி வெளிப்படுத்த முடியும்? அது எந்த வெளிப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது. இன்றிரவு இரங்கும், பிதாவே; இன்றிரவு தொலைந்து போனவர்களை இரட்சியும். இன்றிரவு நோயாளிகளைச் சுகமாக்கி உம்மை வெளிப்படுத்தும். ஓ தேவனே, பின்லாந்தில் வெகு தொலைவில், உமது கிருபையினால் அந்த இரண்டு சிறு பையன்கள் இன்றிரவு உயிரோடிருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேர், தேசத்தைச் சுற்றிலும், உலகத்தைச் சுற்றிலும், உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், எல்லா இடங்களிலும், உமது ஆவியானவர் எப்படி அசைவாடினார், அது எப்படி நோயாளிகளைச் சுகமாக்கியது, மரித்தோரை எழுப்பியது. ஆப்பிரிக்கா, இந்தியா, எகிப்து முழுவதும், ஓ, உலகம் முழுவதும், நீர் இந்தப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறீர், எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்போது, இதோ இன்றிரவு நீர் எங்களோடு இருக்கிறீர், நீர் எங்கும் நிறைந்தி ருக்கிறீர். நாங்கள் இங்கே மேலே ஸ்பின்டேல், வட கரோலினாவில் இருக்கிறோம்; அதே அன்பான கர்த்தராகிய இயேசுவாக இன்றிரவு நீர் இங்கே இருக்கிறீர். சுகமளித்தல் ஒரு மனிதனுக்குள் இல்லை என்பதை மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளட்டும், ஆண்ட வரே. அது ஒரு மனிதர்களின் குழுவுக்குள் இல்லை; அது ஒரு சபைக்குள் இல்லை; அது அங்கே கல்வாரியில் நீர் எங்களுக்காகச் செய்து முடித்த கிரியையிலும், கல்வாரியில் எங்களுக்கு அளிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அந்த முடிச்சப்பட்ட கிரியையின் மேல் விசுவாசம் வைக்கும் எங்கள் விசுவாசத்திலுமே இருக்கிறது. அன்பான பிதாவே, உமது பரிசுத்த ஆவியானவர் அன்பாக, இனிமையாக, ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் வந்து இன்றிரவு இரட்சிக்கப்படாதவர்களிடம் பேச வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம் பிதாவே, இப்பொழுதே. எங்களுக்கு ஒரு பெரிய பீட அழைப்பைத் தாரும், பிதாவே. உம்மை அறியாத, உமது உயிர்த்தெழுதலின் வல்லமையில் உம்மை ஒருபோதும் கண்டிராத ஆண்களும் பெண்களும், உம்மைப் பார்த்தவர்களை விடவும் அதிக விசுவாசம் உள்ளவர்களாய் இருக்கட்டும். அவர்கள் காண்பதற்கு முன்னமே விசுவாசிக்கட்டும். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, அவர்கள் ஒவ்வொருவரும், முழுமையாகச் சுகமடைந்து, ஒவ்வொரு பாவத்திலிருந்தும் ஒவ்வொரு மீறுதலிலிருந்தும் மன்னிக்கப்பட அது சம்பவிக்கட்டும். அருளும், ஆண்டவரே. 89 எங்கள் தலைகள் தாழ்த்தப் பட்டிருக்கும் போது, இசைக்கருவி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, நான் யோசிக்கிறேன் - இங்கே யாராவது தங்கள் கையை உயர்த்தி, "ஆண்டவரே, நான் அந்த ஊழியருக்காக என் கையை உயர்த்தவில்லை; உமக்காக என் கையை உயர்த்துகிறேன். இயேசு தேவனுடைய குமாரன் என்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் நான் நம்புகிறேன், இப்போது அவரை என் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். நான் இந்தப் பிரசங்கியுடனும், இன்று இரவு இங்கிருக்கும் உமது ஆவியுடனும் இந்தக் கூட்டத்தின் முன்னிலையில் நிற்க வேண்டியிருக்கும்போது, நீர் என்மேல் இரக்கமாயிரும் என்று கேட்கிறேன். நான் பாவத்திலிருந்தும், பாவப் பிரமாணத்திலிருந்தும் விடுபட விரும்புகிறேன். நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன், அப்போதுதான் நான் உமது முகத்தைப் சமாதானத்தோடு பார்க்க முடியும், 'என் உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியனே, நல்லது,' என்று நீர் சொல்வதைக் கேட்க முடியும்." நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்கள் இருண்டவை என்பதை அறிந்து, யாராவது உங்கள் கையை உயர்த்துவீர்களா, எங்கிருந் தாலும்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், மகனே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி, என் வலது பக்கம், இந்தப் பகுதியில் யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறொரும்? கீழே கடைசியில் பின்னால், அங்கே கீழே யாராவது உங்கள் கையை உயர்த்துகிறீர்களா? "தேவனே, இப்போது நான் என் கையை உயர்த்தும்போது என்னை நினைவு கூரும்." 90 நீங்கள் எப்படி உங்கள் கையை உயர்த்தினீர்கள்? இயேசு சொன்னார், "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் எவனும் என்னிடத்தில் வர மாட்டான்." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. அங்கே முன் வரிசையில் உங்களைப் பார்க்கிறேன், ஆம், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறொரும்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சிறிய பெண்ணே. வேறொரும் உங்கள் கையை உயர்த்துகிறீர்களா? ஒரு சிறிய பெண், மிகச் சிறியவள் தன் கையை உயர்த்துவதை நான் பார்க்கிறேன். இப்போது, நீங்கள் கேட்கலாம், "அது ஏதாவது நன்மை செய்யுமா, சகோதரன் பிரான்ஹாம்?" தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், மகனே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அது ஏதாவது நன்மை செய்யுமா? இயேசு சொன்னதைக் கேளுங்கள், "என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் எவனும் என்னி டத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிற யாவருக்கும், நான் நித்திய ஜீவனைக் கொடுப்பேன். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு, நித்திய ஜீவன் உண்டு, அவன் கெட்டுப் போகாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." 91 "நான் இப்போது இயேசுவை என் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்," என்று சொல்ல இப்போது உங்கள் கையை உயர்த்துவீர்களா? நீங்கள் செய்வீர்களா... உங்கள் தலைகளைத் தாழ்த்தியே வையுங்கள்; தொடர்ந்து ஜெபியுங்கள். உங்கள் கையை உயர்த்துவீர்களா? சுமார் எட்டு அல்லது பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறொரும் உங்கள் கையை உயர்த்துங்கள், நீங்கள்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அங்கே பின்னால், ஐயா; அது மிகவும் நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறொரும் உங்கள் கையை உயர்த்திச் சொல்லுங்கள், "தேவனே, ஜெபத்தில் இப்போது நான் நினைவுகூரப்பட விரும்புகிறேன். சகோதரரே பிரசங்கியாரே, எனக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அந்த நாளில் என் ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டும்." உங்கள் கையை உயர்த்துவீர்களா? சொல்லுங்கள், "நினைவு கூரும்..." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா; நான் உங்களை மேலே பால்கனியில் பார்க்கிறேன். வேறொரும்? சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா; வாலிபனே நான் உன்னைப் பார்க்கிறேன், மிகவும் தீரமான செயல். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல பெரிய காரியங்களைச் செய்திருக்கலாம், ஆனால் கிறிஸ்து இயேசுவுக்காக உங்கள் கையை உயர்த்தியதை விடப் பெரிய காரியத்தை நீங்கள் ஒருபோதும் செய்ததில்லை. "என்னிடத்தில் வருகிறவன்..." தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, அங்கே அமர்ந்திருக்கும் வாலிபனே. "என்னிடத்தில் வருகிறவனை நான் ஒருக்காலும் புறம்பே தள்ளுவதில்லை." 92 உங்கள் கையை உயர்த்துவீர்களா? "கிறிஸ்துவே, நான் இப்போது உம்மை விசுவாசிக்கிறேன். நான் இப்போது விசுவாசிக் கிறேன்; உம்மை என் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்." பீட அழைப்புக்கு உங்கள் கைகளை உயர்த்து வீர்களா? பின்வாங்கிப் போனவர்கள் (backsliders) யாராவது கர்த்தராகிய இயேசு விடம் திரும்பி வர விரும்புகிறீர்களா, இன்றிரவு ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறீர்களா, பின்வாங்கிப் போனவர்களே உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? நிச்சயமாக, அவர் குருடரின் கண்களைத் திறந்து, செவிடரின் காதுகளை அடைப்பார் என்றால்; நிச்சயமாக, உங்கள் பாவ ஆத்துமாவுக்காக அவர் செவிகொடுப்பார். உங்கள் கையை உயர்த்துவீர்களா, பின்வாங்கிப் போனவரே? இப்போது பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கும் நீங்கள், உங்கள் கையை உயர்த்தி, "என்னை நினைவுகூரும்," என்று சொல்வீர்களா? ஓ, என், கைகள் எல்லா இடங்களிலும் உயர்கின்றன. ஏன், அவர் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் உங்கள் மேல் பரிசுத்த ஆவியை ஊற்ற ஆயத்தமாக இருக்கிறார். நிச்சயமாக. இப்போது, நாங்கள் வாக்களித்த படியே உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். சுகமளிக்கும் கூட்டம் முடிந்த உடனே, ஊழியர் பீட அழைப்பு கொடுக்கும் போது நீங்கள் இந்தப் பீடத்திற்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் இங்கேயே பீடத்தில் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்புக்கொடுங்கள், அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதலைத் தருவார். 93 அன்பான பரலோகப் பிதாவே, இந்த மணிநேரத்தின் பயபக்திக்கும், தேவனுடைய குமாரனாகிய இயேசு பிரசன்னமாகி நிற்கிறார் என்பதை அறியும் புனிதத்திற்கும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், யுகத்தின் முடிவில் நாங்கள் யாருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டுமோ அவரே நிற்கிறார். நாங்கள் எப்பொழுதாவது எங்கள் முழங்காலை முடக்க வேண்டும், ஒன்றில் இங்கேயோ அல்லது நரகத்தில் வேதனையில் இருந்தபோது தன் கண்களை ஏறெடுத்த அந்த ஐசுவரியவானைப் போலவோ. பிதாவே, தங்கள் கையை உயர்த்திய ஒவ்வொருவரையும் நீர் இரட்சித்து, இந்த இரவில், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தால் அவர்களை நிரப்பி, அவர்கள் ஒருபோதும் கெட்டுப்போகாமல், எப்பொழுதும் உமது நினைவிலும், உமது உள்ளங்கைகளிலும், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்திலும் எழுதப்பட்டிருப்பார்கள் என்பதற்குத் தேவனு டைய வாக்குறுதியின் ஆசீர்வதிக்கப்பட்ட முத்திரையை அவர்களுக்கு அளிக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த ஆசீர்வாதங்களை, பிதாவே, கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, அவர் அற்புதமானவர் இல்லையா? தேவனின் பிரசன்னம் நம்முடன் மிக நெருக்கமாக இருப்பதால், நீங்கள் அப்படியே கழுவிச் சுத்திகரிக்கப்பட்டது போல் உணரவில்லையா? என்ன அட்டைகளை (cards) கொடுத்தீர்கள்? என்ன? ஓ, அவர் அட்டைகள் எதையும் கொடுக்கவில்லை. சரி, பரவாயில்லை. எப்படியாயினும் கிறிஸ்து இங்கே இருக்கிறார். நமக்கு அட்டைகள் எதுவும் தேவையில்லை. எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நான் இதைச் செய்வதில்லை; நான் வழக்கமாக மக்களை இங்கே மேடைக்குக் கொண்டுவர முயற்சிப்பேன், அப்போதுதான் என்னால் அதை இறையாண்மையுடன் செய்ய முடியும். அநேகமாகப் புத்தகங்களிலோ அல்லது ஏதோ ஒன்றிலோ மும்முரமாக இருந்திருப்பார்கள், இந்தக் கூட்டம் தொடங்கும் வரை அதைக் கவனித்திருக்க மாட்டார்கள். கூட்டம் தொடங்கிய பிறகு அதைச் செய்யக்கூடாது என்று அவர்களுக்குத் தெரியும். 94 நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். தரிசனங்களைப் பற்றி நான் உங்களிடம் சொன்னது, அது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்த வழியாகப் பார்த்தால், எனக்கு உங்களில் யாரையும் தெரியாது, இயேசு கிறிஸ்து தமது கிருபையினாலும் வல்லமையினாலும், அவரு டைய வஸ்திரத்தைத் தொட்ட பெண்ணுக்குச் செய்த அதே காரியத்தை இன்றிரவு இங்கே செய்வார் என்றால், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் அதை ஏற்றுக் கொள்வீர்களா? அருளும், தேவனே, என்பது என் ஜெபம். எங்களுக்கு ஒரு சிறிய இசைச்சுருதி (chord) கொடுங்கள். "என்னோடு தங்கும் (Abide With Me)" பாடல் உங்களுக்குத் தெரியுமா? புத்தகம் இல்லாமல் அதை அப்படியே வாசிக்க முடியுமா? எங்களுக்கு ஒரு இசைச்சுருதி கொடுங்கள். அவர் அதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? தேவன் பாடலின் மூலம் வருகிறார் என்று நம்புகிறீர்களா? பாடலில் வல்லமை இருக்கி றதா? தீர்க்கதரிசி ஒருமுறை தனது நீதியின் கோபத்தினால் முழுக்கக் கலங்கிப்போனது நினைவிருக்கிறதா? ஓ, ஏதோ ஒன்றைக் குறித்து அவர் மிகவும் குழம்பிப்போயிருந்தார். யேசபேலின் மகனும் ஆகாபும் கீழே வந்து அவரிடமிருந்து ஒரு தரிசனத்தை அறிய விரும்பினார்கள். அவர் சொன்னார், "நீங்கள் ஏன் உங்கள் சொந்த தீர்க்கதரிசிகளிடம் போகக்கூடாது? எதற்காக என்னிடம் வருகிறீர்கள்?" ஓ, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார். அவர் சொன்னார், "இருப் பினும், எனக்கு ஒரு இசைக்கலைஞனைக் கொண்டு வாருங்கள்." இசைக்கலைஞன் வாசிக்கத் தொடங்கியபோது, ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்தார், அவர் தரிசனங்களைக் கண்டார். அது சரியா? இப்போது, நீங்கள் விசுவாசத்தோடு இருங்கள் மற்றும் விசுவாசியுங்கள்; சும்மா விசுவாசியுங்கள். 95 இது கடினம் (பாருங்கள்), ஏதோ ஒன்று... எனக்கு உங்களில் யாரையும் தெரியாது; அது உங்களுக்குத் தெரியும். ஆனால் தேவன் உங்கள் எல்லாரையும் அறிவார். இப்போது, பின்னால் பார்வையாளர்களிடத்தில் இருப்பது கொஞ்சம் கடினம், ஏனென்றால் நான் உங்களை அழைக்கும்போது, உங்களால் அதைப் பிடிக்க முடியாது. ஆனால் அநேக நேரங்களில் அவர் அங்கே பின்னால் மக்கள் மீது நிற்கிறார், ஆனால் உங்களால் அதைப் பார்க்க முடியும், பின்னர் மக்கள் விரைவாகப் பதிலளிக்கவில்லை என்றால், தரிசனம் விலகிவிடும், நான் என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியாது. பாருங்கள்? ஆனால் அது அதைத் தீர்த்துவைக்க வேண்டும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றால்... நான் வேறு வகையான ஜெப வரிசையை (prayer line) நடத்தலாம் என்று இருந்தேன், ஆனால்... இங்கே எத்தனை பேர் வியாதியுடனும் தேவையுடனும் இருக்கிறீர்கள், உங்கள் கைகளை மீண்டும் பார்ப்போம், எல்லா இடங்களிலும்? ஜெபிக்கப்பட விரும்பும் மக்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள், எல்லா இடங்களிலும்? சரி, மிக அதிகமாக இருக்கிறார்கள்; இங்கே ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்டோர் இருக்கிறார்கள். அதில் யார் முதலில் வருவார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. நாம் இதை இப்படியே செய்வோம். கர்த்தருக்குச் சித்தமானால் அவர் நம்மை ஆசீர்வதிக்கட்டும். இப்போது, அவருக்குச் சித்தமானால், எனக்குத் தெரியாது. அது அவரைப் பொறுத்தது. 96 ஆனால் இந்த வழியாகப் பார்த்து, நான் உங்களுக்கு உண்மையைச் சொன்னேன் என்று விசுவாசியுங்கள். நான் வேதாகமத்திலிருந்து சொன்னேனா இல்லையா என்பதற்குத் தேவன் என்னை நியாயந்தீர்ப்பார் - நியாயத்தீர்ப்பு இருக்கிறது. இப்போது, நீங்கள் சும்மா இந்த வழியாகப் பார்த்து விசுவாசியுங்கள். இப்போது, "என்னோடு தங்கும், என்னோடு தங்கும்," என்று நாம் சிந்திக்கும்போது. அவர்... நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்." இப்போது, இதன் புனிதமான வாக்குறுதியின் பேரில், தமது குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை அனுப்பவும், தகுதியற்ற தமது ஊழியனை அபிஷேகம் செய்யவும் நான் தேவனிடம் கேட்கிறேன், அதன்படியே நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் சாக்குப்போக்கு சொல்ல இடமிராதபடி, கிறிஸ்து இன்றிரவு உயிரோடி ருக்கிறார் என்று அறியட்டும். நாங்கள் அவருடைய தெய்வீக வாக்குறுதியில் நிலைத் திருக்கும்போது, அவர் என்னிடத்தில் பேசுவதற்கு, பரிசுத்த ஆவியானவரைத் தொடர்பு கொள்ளும் விசுவாசத்தை உங்களுக்கு அளிக்கும்படி தேவன் தமது பரிசுத்த ஆவியை உங்கள் மேல் அனுப்புவாராக. நீர் அதை அருளுவீர்களா? இப்போது, இந்தப் பக்கத்திலிருந்து எங்காவது, தேவன் எங்கே அசைவாடுகிறார் என்று பார்ப்பதற்காக உங்களைக் கவனிக்க - நான் ஒருமுகப்படுத்தும்போது, நீங்கள் இந்த வழியாகப் பார்த்து ஜெபிப்பீர்களா? அவர் அதை அருளட்டும். அவருக்குச் சித்தமானால், இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும் பயபக்தியுடன், "தேவன் இங்கே இருக்கிறார் என்று நான் நம்புவேன். என் விசுவாசத்தில் அந்த வழியாக நான் அவரைத் தொடர்புகொள்ள முடிந்தால், என் சுகத்திற்காகத் தொடர்புகொள்ள அவர் இங்கே இருக்கிறார் என்று நான் அறிவேன்," என்று சொல்வீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் அதை நம்புவீர்களா, அவருக்காக உங்கள் கையை உயர்த்துங்கள், அவர் அதைப் பார்க்கும்படி (பார்த்தீர்களா?), உங்கள் கையைப் பார்க்கும்படி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 97 நிச்சயமாக, நான் அதைப் பிரசங்கித்தேன்; ஆனால் நான் சில நிமிடங்கள் மட்டும் பேச நினைக்கவில்லை. நான் கொஞ்சம் கலக்க மடைந்தேன். அது சரி. ஆனால் இப்போது, சில நிமிடங்கள் மட்டும், பயபக்தியுடன் இருங்கள். நான் தேவனை எதையும் செய்ய வைக்க முடியாது; நான் அவரிடம் கேட்க வேண்டும். பின்னர் நான் அவரிடம் கேட்கும்போது, அவர் இருக்கிறார் என்றும் அவர் பலனளிக்கிறவர் என்றும் நான் நம்ப வேண்டும். பாருங்கள், இன்றிரவு இங்கே அநேகமாக இரண்டாயிரம் பேர், அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆவி, அது இப்போது இதுபோலத் துடித்துக்கொண்டிருக்கிறது. அது எங்கே இருக்கிறது? எனக்குத் தெரியாது. அது எல்லாப் பக்கத்திலிருந்தும் வருகிறது. ஆனால் நீங்கள் சும்மா அமைதியாக இருந்தால், ஒரு நிமிடம், அசையாமல் அமருங்கள், சுற்றிலும் அசைய வேண்டாம், சும்மா அமைதியாக இருங்கள், ஒரு நிமிடம் ஜெபியுங்கள், அவர் அதை அருளக்கூடும். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அது ஒரு அடையாளமாக இருக்கும்; அது ஒரு அற்புதமாக இருக்கும். அது ஒரு அற்புதமாக இருக்குமா? ஓ, நான் சொல்வேன் ஒரு அற்புதம், மிகப் பெரியவைகளில் ஒன்று. எல்லோரும் அசைவதை நிறுத்தி அமைதியாகும் வரை நான் காத்திருக்க வேண்டும். சும்மா பயபக்தியுடன் இருங்கள். பாருங்கள், கிறிஸ்து ஒரு... அவர் - அவர் தேவன். "பூமி முழுவதும் மவுனமாயிருக்கக்கடவது; கர்த்தர் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்," என்று வேதாகமம் சொன்னது. இது ஒரு அமளி அல்ல; இது குழப்பம் அல்ல. தேவன் குழப்பத்தின் ஆசிரியர் அல்ல. 98 எனக்கு முன்னால் ஒரு மனிதர் நிற்பதை நான் காண்கிறேன். தேவனுக்கு ஸ்தோத்திரம். ஒரு சிறிய மெலிந்த மனிதர் போல... நம் ஆண்டவரை அந்தப் பெண் தொட்டது போல யாரோ அவரைத் தொட்டார்கள், யாரோ தொட்டார்கள்... அதோ அவர் இருக்கிறார்: உங்களுக்கு இதயக் கோளாறும் சிறுநீரகக் கோளாறும் இருக்கிறது, இல்லையா, ஐயா? அங்கே கீழே அமர்ந்திருக்கிறீர்கள், என்னை நோக்கி இந்த வழியாகப் பார்க்கிறீர்கள். நீங்கள் அங்கே பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க வேண்டியிருந்தது, ஆம், ஐயா. இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, உங்கள் காலில் எழுந்து நில்லுங்கள். அது சரி. மேலே எழும்புங்கள். கொஞ்சம் தன்னிலை இழந்தது போல் உணருகிறீர்கள், ஆனால் இப்போது நீங்கள் சுகமாகிவிட்டீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதயம் இனி உங்களைத் தொந்தரவு செய்யாது; சிறுநீரகக் கோளாறு சரியாகிவிட்டது. எனவே நீங்கள் இப்போது வீட்டிற்குச் சென்று நலமாக இருக்கலாம். அவருக்கு, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்," என்று சொல்லுங்கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, இந்தப் பகுதியில் யாராவது, பார்த்து விசுவாசியுங்கள். "விசுவாசிக்கக் கூடுமானால்," அவர் சொன்னார், "விசுவாசிக் கிறவனுக்கு எல்லாம் கூடும்." 99 இதயக் கோளாறு இருக்கிறது, இல்லையா, இங்கே கடைசியில் அமர்ந்தி ருக்கும் அம்மா? இயேசு உங்களை நலமாக்குவார் என்று நம்புகிறீர்களா? ஆம். ஆம். உங்கள் இதயத்துக்காக நீங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை நலமாக்குவார் என்று நம்புகிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். உங்களிடம் ஜெப அட்டை... ? இல்லை உங்களிடம் இல்லை, நிச்சயமாக உங்களிடம் ஜெப அட்டை இல்லை. இப்போது, அவர் தொட் - நீங்கள் அவரைத் தொட்டீர்கள் என்று நம்புகிறீர்களா? ஒருவேளை என் குரல் உங்களுக்குக் கேட்காமல் இருக்கலாம்; இது எதிரொலி. கிறிஸ்து உங்களை இப்போது சுகப்படுத்தினார் என்று நம்பு கிறீர்களா? உங்கள் சுகத்தைக் கிறிஸ்து விடமிருந்து ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படி யானால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அது சரி. அந்தச் சிறு பையனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, ஐயா, உங்களுக்குத் தேவன் மேல் விசுவாசம் இருக்கிறதா? ஆம். அந்தக் குழந்தைக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையா? தேவன் அவனைச் சுகமாக்குவார் என்று நம்புகிறீர்களா? அறுவை சிகிச்சைகள் தோல்வியடையலாம், ஆனால் கிறிஸ்து ஒருபோதும் தோற்பதில்லை, இல்லையா? அவனுடைய சுவாசம் இப்போது சரியாகிவிடும், அவன் குணமாகி நலமடைவான் என்று நம்புகிறீர்களா? அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் ஏற்றுக்கொண்டால் உங்கள் கையை உயர்த்துங்கள். பாருங்கள், அது அற்புதமானது இல்லையா? நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதை இப்போது பெற்றுக் கொள்ளலாம். இயேசு கிறிஸ்து அதை நலமாக்குகிறார். அவர் அற்புதமானவர் இல்லையா? 100 பாட்டி, உங்கள் பேரனுக்காக அங்கே ஜெபிக்க விரும்புகிறீர்கள், இல்லையா? ஆம், அம்மா, நீங்கள்தான். உங்கள் தொந்தரவு என்ன என்பதைத் தேவன் எனக்கு வெளிப்படுத்தினால் என்னை தேவனுடைய தீர்க்கதரிசியாக, அவருடைய ஊழியராக ஏற்றுக்கொள்வீர்களா? உங்களுக்கு இதயக் கோளாறு இருக்கிறது; அங்கே இருக்கும் சிறு பையனுக்கு ஒரு வகையான சைனஸ், ஆஸ்துமா நிலை இருக்கிறது, தேவன் அவனை நலமாக்க முடியும், அது சரியல்லவா? அது சரி என்றால் உங்கள் கையை உயர்த்துங்கள். உங்கள் கையை அந்தக் குழந்தையின் மேல் வையுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது சுகமாவதாக. ஆமென். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்," என்று சொல்வோம். கழுத்தைச் சுற்றிச் சிறிய ஸ்கார்ஃப் அணிந்து அங்கே பின்னால் அமர்ந்திருக்கும் அந்தச் சிறிய பெண்மணிக்கு மூச்சுக்குழாய் (bronchial) கோளாறு இருக்கிறது. அம்மா, இயேசு கிறிஸ்து உங்களை நலமாக்குவார் என்று நம்புகிறீர்களா? சகோதரரே, அங்கே அமர்ந்திருக்கும் நீரிழிவு நோயுடன் (diabetes) இருக்கும் நீங்கள், இயேசு கிறிஸ்து உங்களை நலமாக்குவார் என்று நம்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் காலில் எழுந்து நின்று அதை ஏற்றுக்கொள்ளுங்கள். திரும்பி அந்தச் சிறிய பெண்மணியின் மேல் உங்கள் கைகளை வையுங்கள்; அவர் அங்கே பின்னால் ஒரு மூச்சுக்குழாய் கோளாறினால் அவதிப்படுகிறார். ஆம். தேவனே, இரக்க மாயிரும், இயேசுவின் நாமத்தில் அவர்களைச் சுகமாக்கும்படி நான் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது முடிந்தது, மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்லுங்கள்; உங்கள் விசுவாசம் உங்களைச் சுகமாக்கியது. 101 இங்கே இந்த படுக்கைகளில் (stretchers) இருப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த வழியாகப் பார்த்து விசுவாசியுங்கள். ஐயா, அம்மா, அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நீங்கள், நம்புகி றீர்களா? நம்புகிறீர்கள். என்னால் சுகமாக்க முடியாது; என்னால் முடியாது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வாழ்க்கையை உங்களால் மறைக்க முடியாது; நீங்கள் மரித்துக்கொண்டிருக்கிறீர்கள்: புற்றுநோய் உங்களைப் பிடித்திருக்கிறது. அது உண்மை. ஆனால் இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்க முடியும், அதை நம்புகிறீர்களா? அதுதான் உங்கள் பிரச்சனை, இல்லையா? கடைசி நிலையில் புற்றுநோய். உங்களைச் சுற்றி ஒரு இருண்ட நிழல் இருக்கிறது. தேவன் மட்டுமே உங்களை நலமாக்க முடியும். அதை நம்புவீர்களா? அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் அங்கே சாகப்போகிறீர்கள். ஒருமுறை சில குஷ்டரோகிகள் வாசலில் படுத்திருந்தார்கள். அவர்கள் குஷ்டரோகிகள். அவர்கள் சொன்னார்கள், "நாம் நகரத்திற்குள் சென்றால், அவர்கள் ஒருவரையொருவர் பிள்ளைகளைச் சாப்பிட்டுக் கொண்டி ருக்கிறார்கள். நம்மால் அங்கே போக முடியாது. இங்கே அமர்ந்தால் நாம் சாவது உறுதி." சிரியர்களின், எதிரியின் பாளையத்திற்குச் செல்வது மட்டுமே அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு. அவர்களுக்கு இருந்த அந்த ஒரே வாய்ப்பைப் பயன்படுத்தியதற்காகத் தேவன் அவர்களுக்குப் பலனளித்தார். தேவன் அவர்கள் உயிரையும், சிறையிருப்பில் இருந்த அவர்கள் எல்லாரையும் காப்பாற்றினார். இப்போது, நீங்கள் எதிரியின் முகாமுக்கு அழைக்கப் படவில்லை; நீங்கள் தேவனுடைய வீட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள், இன்றிரவு நீங்கள் இங்கே எதிர்பார்க்கப் படுகிறீர்கள். இப்போது, அது உங்கள் விசுவாசம் ஐயா; என்னால் உங்களைச் சுகமாக்க முடியாது. அது உங்கள் விசுவாசம். நீங்கள் அதை நம்பினால், எழுந்து வீட்டிற்குச் செல்லுங்கள், அதை மறந்து விடுங்கள். உங்களால் முடியாவிட்டால், நீங்கள் - நீங்கள் இன்னும் சிறிது காலமே உயிருடன் இருப்பீர்கள். 102 விசுவாசிக்கும்படி நான் எவருக்கும் சவால் விடுகிறேன். அல்லேலூயா. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத் தோடும்? அப்படியானால் எதற்காகக் காத்திருக் கிறீர்கள்? நாம் பெற்றுக்கொள்வோம் - நீங்கள் அனைவரும் சுகமடையுங்கள். நீங்கள் அனைவரும் ஏற்கனவே சுகமாகிவிட்டீர்கள். இயேசு உங்களைச் சுகமாக்கினார்; உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் இப்படி அவருக்காக நம் கைகளை உயர்த்துவோம். இந்த ஜெபத்தை எனக்குப் பின்னால் சொல்லுங்கள். நான் ஜெபத்தைச் சொல்வேன்; நீங்கள் அதைத் திரும்பச் சொல்லுங்கள்; நீங்கள் அதை உள்ளர்த்தத்தோடு சொல்லுங்கள். பரலோகப் பிதாவே, நான் இப்போது உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். நான் இப்போது அவரை என் பரிகாரியாக ஏற்றுக்கொள்கிறேன். அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன். கல்வாரியில் அவர் பட்ட பதிலித் துன்பங்களில் அவர் என்னைச் சுகமாக்கினார் என்று நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். நான் இப்போது அதை என் உடைமையாகக் கோருகிறேன். இந்த இரவிலிருந்து இயேசுவின் நாமத்தில் என் சுகத்தை நான் கோருகிறேன். 103 இப்போது, உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள், அது உங்கள் ஜெபம். இப்போது, இது என்னுடையது. ஓ தேவனே, இந்த இடத்தை உடைத்துப் போடும் ஒரு அற்புதம் நடப்பதைத் தடுக்க ஒரே ஒரு விஷயம் தான் இருக்கிறது: அது இப்போது உங்கள் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சிறிய இருண்ட நிழல், அது உங்கள் அவிசுவாசம். என்னால் அதை மட்டும் நகரச் செய்ய முடிந்தால். ஏதோ ஒன்று - அது நகர்ந்தால், இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும் சுகமடைவார்கள், நீங்கள் ஒவ்வொருவரும். அது ஒன்று மட்டுமே தடுத்துக்கொண்டிருக்கிறது. இயேசு ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். இப்போது பார்ப்பதற்கு, நான் இப்போது இருக்கும் இந்தப் பரிமாணத்தில் (dimension), நீங்கள் விரும்பினாலும் உங்கள் வாழ்க்கையை மறைக்க முடியாது என்பது போல இருக்கிறது. கிறிஸ்து இங்கே இருக்கிறார். பின்லாந்தில் அந்தச் சிறு பையனை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே நபர், இன்றிரவு இங்கே இருக்கிறார். தரிசனங்கள் வெளிப்படுகின்றன; கட்டிடம் முழுவதும் மக்கள் சுகமடைவதை நான் பார்க்கிறேன். போதகர்களே நீங்கள் கவனித்துப் பாருங்கள், நான் போன பிறகு மாதங்கள் கழித்து உங்கள் மக்கள் வருவார்கள், பெண்கள் ஸ்திரீகளுக்குரிய பிரச்சனைகளிலிருந்து, வயிற்றுக் கோளாறுகளிலிருந்து சுகமடைந்திருப்பார்கள். அனைத்தும் இப்பொழுதே சுகமாகிக் கொண்டி ருக்கின்றன. நீங்கள் என்னை நம்பினால், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். கிறிஸ்து இங்கே இருக்கிறார்; பரிசுத்த ஆவியானவர் கட்டிடத்தில் இருக்கிறார். நான் உணர்ச்சிவசப்படவில்லை. அது உண்மை. பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஒவ்வொரு பொல்லாத ஆவியையும் துரத்துவீராக. ~ 24 ~